Vaazhai OTT: வாழை திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதியில் திடீர் மாற்றம்.. இந்த வாரம் இல்லை!
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா, விமல் பொன்வேல் என பல பிரபலங்கள் நடித்த வாழை திரைப்படம் நாளை செப்டம்பர் 27ஆம் தேதி ஓடிடியில் வெளியாக திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போது தேதி தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் யதார்த்தத்தை பிரதிபலித்து ரசிகர்களின் மத்தியில் தனி வரவேற்பு பெற்று வருகிறது. அதில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜின் திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அவர் இதற்கு முன்பு இயக்கிய கர்ணன், பரியேறும் பெருமாள் திரைப்படங்கள் உட்பட சமீபத்தில் வெளியான வாழை திரைப்படமும் மக்களின் இயல்பான கதைக்களம் மற்றும் வாழ்க்கை அமைப்பை திரையில் காட்டுவதாலேயே இந்த திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது.

வாழை திரைப்படம் கடந்த 2024 ஆகஸ்ட் 23ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்து இந்த திரைப்படத்திற்கு அதிகமான பாசிடிவ் கருத்துக்கள் வெளியானது. அதே நேரத்தில் சில சர்ச்சைகளும் எழுந்தது. ஆனாலும் அதையெல்லாம் தாண்டி படம் தியேட்டரில் பல வாரங்கள் ஓடியது.
படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தை முக்கிய நட்சத்திரங்களுக்கு காண்பித்தது அவர்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனத்தை இந்த திரைப்படத்திற்கு பிரமோஷன் உக்தியாக பயன்படுத்தினார்கள். இந்த திரைப்படம் பார்த்து பாலா உட்பட பலர் கண்கலங்கி அழுதனர். திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பலர் இயக்குனர் மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து கண்கலங்கிய வீடியோக்களும் இணையத்தில் பெரிய அளவில் பகிரப்பட்டது.
அதனாலேயே இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ரசிகர்களின் மத்தியில் எழுந்தது. மாரி செல்வராஜ் தன்னுடைய இளம்பருவத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த நிலையில் இந்த திரைப்படம் தியேட்டரில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தின் ஓடிடி டிஜிட்டல் உரிமையை டிஜிட்டல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி கைப்பற்றி இருக்கிறது. இதில் வெளியான பிறகு மற்ற ஓடிடியில் வெளியாகும்.

இந்த திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ச்சியாக பாக்ஸ் ஆபீஸ் வெற்றி காரணமாக இப்போது அக்டோபர் 11ஆம் தேதிக்கு வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் பல இடங்களில் இந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது
வாழை திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரன் ஓளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் சூர்யா பிரபாகரன் எடிட்டிங் செய்து இருக்கிறார். அதுபோல தமிழ் சினிமா பிரபல தயாரிப்பு நிறுவனமான நாவ்வி ஸ்டுடியோஸ், பார்மல் மாஸ்டர் பிளான், ப்ரொடக்ஷன் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் இணைந்து என்ற திரைப்படத்தை தயாரித்திருக்கிறது. அதோடு இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வினியோகம் செய்துள்ள நிலையில் இந்த திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. கண்டுக்களிக்க ரெடியா மக்களே!
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications