Vaazhai OTT: அக்டோபர் 11ல் வெளியாகும் வாழை திரைப்படம்.. இந்த ஓடிடி தளத்தில் இனி பார்க்கலாம்
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா, விமல் பொன்வேல் என பல பிரபலங்கள் நடித்த வாழை திரைப்படம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி ஓடிடியில் வெளியாக திட்டமிடப்பட்டது. ஆனால் சில காரணங்களால் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருந்த நிலையில் வரும் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்
வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜின் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அவர் இதற்கு முன்பு இயக்கிய கர்ணன், பரியேறும் பெருமாள் திரைப்படங்கள் உட்பட சமீபத்தில் வெளியான வாழை திரைப்படமும் மக்களின் இயல்பான கதைக்களம் மற்றும் வாழ்க்கை அமைப்பை திரையில் காட்டுவதாலேயே இந்த திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது.

வாழை திரைப்படம் கடந்த 2024 ஆகஸ்ட் 23ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்து இந்த திரைப்படத்திற்கு அதிகமான பாசிடிவ் கருத்துக்கள் வெளியானது. அதே நேரத்தில் சில சர்ச்சைகளும் எழுந்தது. ஆனாலும் அதையெல்லாம் தாண்டி படம் தியேட்டரில் பல வாரங்கள் ஓடியது.
படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தை முக்கிய நட்சத்திரங்களுக்கு காண்பித்தது அவர்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனத்தை இந்த திரைப்படத்திற்கு பிரமோஷன் உக்தியாக பயன்படுத்தினார்கள். இந்த திரைப்படம் பார்த்து பாலா உட்பட பலர் கண்கலங்கி அழுதனர். அதனாலேயே இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ரசிகர்களின் மத்தியில் எழுந்தது.
மாரி செல்வராஜ் தன்னுடைய இளம்பருவத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த நிலையில் இந்த திரைப்படம் தியேட்டரில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தின் ஓடிடி டிஜிட்டல் உரிமையை டிஜிட்டல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி கைப்பற்றி இருக்கிறது. இதில் வெளியான பிறகு மற்ற ஓடிடியில் வெளியாகும்.
இந்த திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ச்சியாக பாக்ஸ் ஆபீஸ் வெற்றி காரணமாக இப்போது அக்டோபர் 11ஆம் தேதிக்கு வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வாழை திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் சூர்யா பிரபாகரன் எடிட்டிங் செய்து இருக்கிறார். அதுபோல தமிழ் சினிமா பிரபல தயாரிப்பு நிறுவனமான நாவ்வி ஸ்டுடியோஸ், பார்மல் மாஸ்டர் பிளான், ப்ரொடக்ஷன் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறது. அதோடு இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வினியோகம் செய்துள்ள நிலையில் இந்த திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications