CWC புகழ் குழந்தையை கையில் ஏந்திய வடிவேல் பாலாஜி! கண்களை குளமாக்கும் "அந்த" படம்! எப்படி சாத்தியம்?
சென்னை: விஜய் டிவி பிரபலம் புகழின் குழந்தைக்கு அண்மையில் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நடிகர் வடிவேல் பாலாஜி, புகழின் குழந்தை ரித்தான்யாவை தூக்கி வைத்துக் கொண்டு இருக்கும் குழு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை மிகவும் உருக்கத்துடன் புகழ் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கலக்க போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் புகழ். இவர் சினிமாவிலும் அறிமுகமாகி நடித்துள்ளார். அவருக்கு பென்சி என்பவருடன் 2022 ஆம் ஆண்டு திருமணமானது.

கடந்த 2023 ஆம் ஆண்டு அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ரித்தான்யா என பெயர் சூட்டினர். அந்த குழந்தையின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த விழாவில் அந்தக் குழந்தையை அழகான அலங்கார கூடை போன்ற வண்டியில் அமர வைத்து புகழும் பென்சியும் தள்ளிக் கொண்டு வந்தனர்.
பார்க்கவே மிகவும் அழகாக இருந்தது. இந்த விழாவுக்கு சூரி, விடிவி கணேஷ், செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் உள்ளிட்டோர் வந்திருந்தனர். மேலும் அன்றைய தினம் மாதம்பட்டி ரங்கராஜனின் கேட்டரிங் சமையல்தான் அன்றைய தினம் பரிமாறப்பட்டது.
வழக்கம் போல் உணவு நன்றாக இருப்பதாக பிரபலங்கள் மாதம்பட்டி ரங்கராஜனிடம் பாராட்டினர். இந்த நிலையில் குழந்தையின் புகைப்படங்களை புகழ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வகையில் நேற்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதை பார்த்ததுமே விஜய் டிவி பிரபலங்களுக்கு கண்களில் நீர் கசிந்தது.
ஏன் ரசிகர்களுக்கும்தான்! அப்படி என்ன புகைப்படம் என்கிறீர்களா! வடிவேல் பாலாஜி, ரித்தான்யாவை தூக்கிவைத்துக் கொண்டிருக்க, வடிவேல் பாலாஜியின் வலது பக்கம் பென்சியும் இடது பக்கம் புகழும் நின்றிருப்பது போல் ஒரு புகைப்படத்தைதான் புகழ் வெளியிட்டிருக்கிறார்.
இந்த படத்தை யாரோ வரைந்து புகழுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு "இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் பக்கத்தில்" என பாடல் வரியை போட்ட புகழ், மாமா என உருகியுள்ளார். வடிவேல் பாலாஜியும் புகழும் நெருங்கிய நண்பர்கள்.
இருவரும் சேர்ந்து நிறைய காமெடி ஸ்கிரிப்ட்களை தயாரித்துள்ளனர். வடிவேல் கெட்டப்பில் அவருடைய பாடி லேங்குவேஜில் பாலாஜி நிறைய கலக்கல் காமெடிகளை செய்துள்ளார். அதனால்தான் இவருக்கு வடிவேல் பாலாஜி என பெயர் வந்தது. இவருக்கென ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். இப்படி அனைவரையும் சிரிக்க வைத்த இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி திடீரென அனைவரையும் அழ வைத்துவிட்டார்.
ஆம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் கொடுக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்த இழப்பை அவருடன் பணியாற்றிய புகழ், ராமர், தங்கதுரை, நாஞ்சில் விஜயன் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்து கண்ணீர்விட்டனர். அவருடைய இழப்பை இவர்களால் ஏற்கவே முடியாத அளவுக்கு வடிவேல் பாலாஜி, இவர்களுடன் நெருங்கி பழகியுள்ளார்.
இப்படிப்பட்ட சூழலில் இந்த புகைப்படத்தை பார்த்த விஜய் டிவி பிரபலங்களும் ரசிகர்களும் வடிவேல் பாலாஜியை நினைத்து உருகி வருகிறார்கள். இறந்த வடிவேல் பாலாஜிக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த வடிவேல் பாலாஜி, மருத்துவமனையில் பிணவறையில் போஸ்ட்மார்ட்டம் செய்யும் துறையில் பணியாற்றினார்.
அப்படி பணியாற்றியபடியே கலக்க போவது யாரு சீசன் 4 , அது இது எது ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை சம்பாதித்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பணம் இல்லாத போதிலும் யாரிடமும் உதவி கேட்க கூடாது என அவருடைய மனைவியிடம் கண்டிப்பாக சொல்லிவிட்டாராம் வடிவேல் பாலாஜி. இவர் இந்த உலகை விட்டுச் சென்ற போது அவருக்கு வயது 43.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications