காரில் பாக்யராஜுடன் ஹனிமூனா? ஜாடை மாடையாக பேசிய தயாரிப்பாளர்.. நாற்காலியை தூக்கி வீசிய வடிவுக்கரசி
சென்னை: கன்னி பருவத்திலே படத்தில் நடித்த போது தயாரிப்பாளர் ராஜ்கண்ணு ஜாடை மாடையாக தவறாக பேச அப்போது கோபமடைந்த வடிவுக்கரசி நாற்காலியை தூக்கி வீசிய சம்பவத்தை அவரே பிளாஷ்பேக்காக கூறியுள்ளார்.
கன்னி பருவத்திலே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வடிவுக்கரசி. இந்த படத்தில் ராஜேஷ், பாக்கியராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை தயாரித்தவர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. இதை இயக்கியவர் பி.ஏ.பாலகுரு.

இந்த படம் 1979 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்ற பட்டு வண்ண ரோசாவாம் பாடல் மிகவும் பிரபலம். கண்ணம்மா எனும் கேரக்டரில் வடிவுக்கரசி அற்புதமாக தனது நடிப்பை காட்டியிருப்பார். வடிவுக்கரசி சென்னையை சேர்ந்தவர். இவருக்கு தற்போது 61 வயதாகிறது. எனினும் இவர் சீரியல்களில் நடித்து வருகிறார்.
இவர் இதுவரை 350 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தொடக்க காலங்களில் கதாநாயகியாக நடித்தாலும் இவர் பின்னாளில் முன்னணி நடிகர்களுக்கு தாய், சகோதரி கேரக்டர்களில் நடித்திருந்தார். இவர் சில படங்களில் எதிர்மறையான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். முதல் மரியாதை படத்தில் எதிர்மறையான ரோலில் சிவாஜியுடன் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்.
இவர் விமான பணிப்பெண் வேலைக்கு செல்ல எடுத்த புகைப்படம்தான் இவரை நடிகையாக்கியது. அந்த புகைப்படம்தான் இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளராக இருந்த இயக்குநர் பாலகுருவிடம் சென்றது. அதன்பேரில்தான் அவருக்கு கன்னி பருவத்திலே படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்திலும் இவருக்கு வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் அதை மறுத்துவிட்டார்.
பியூசி படித்திருந்தாலும் வடிவுக்கரசியின் ஸ்டைலிஷ்ஷான ஆங்கில பேச்சை கேட்ட பிறகுதான் இயக்குநர் பாரதிராஜா சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வடிவுக்கரசிக்கு சிறிய வேடத்தை கொடுத்துள்ளார். அருணாசலம் படத்தில் ரஜினியை விமர்சிக்கும் காட்சிகளில் வடிவுக்கரசியின் வில்லத்தனத்தை பார்த்து அங்கிருந்த ரஜினி உள்பட 2500 நடிகர், நடிகைகளும் கைதட்டி ரசித்தனராம்.
நடிகை வடிவுக்கரசியின் திருமண வாழ்க்கை தோல்வி அடைந்தது. இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆரம்பத்தில் திரைத்துறையில் ஏற்பட்ட நஷ்டத்தால் இவர்கள் குடும்பமே ஒரே இரவில் நடுத்தெருவுக்கு வந்ததாம். பின்னர் படங்களில் நடித்து நல்லபடியாக சொத்துக்களை சேர்த்தார். இவர் தன் வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் வடிவுக்கரசி டூரிங் டாக்கிஸில் இயக்குநர் சித்ரா லட்சுமணனுக்கு வடிவுக்கரசி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அப்போது எனக்கு மட்டும்தான் கார் கொடுத்தார்கள்.நான் காரை எடுத்துக் கொண்டு கொஞ்சம் தூரம் சென்றவுடன் பாக்கியராஜை ஏற்றிக் கொண்டு செல்வேன். அப்போது பாக்கியராஜ் பிரவீனாவுடனான காதல் குறித்தெல்லாம் என்னிடம் சொல்வார்.
இதே போல் நான் அவரை காரில் அழைத்துக் கொண்டு செல்வதை பார்த்த யாரோ தயாரிப்பாளர் ராஜ்கண்ணு சாரிடம் தவறாக சொல்லிவிட்டார்கள். நானும் பாக்யராஜும் லவ் செய்கிறோம் என சொல்லிவிட்டார்கள். அடுத்த நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்த ராஜ்கண்ணு சார், பாக்கியராஜ் சாரை அழைத்து திட்டுகிறார்.
பிறகு "என் காசுல எல்லாம் ஹனிமூன் கொண்டாடுறீங்களா. அவ அவ வந்தோமா வேலை செய்தோமானு இல்லாம ஹனி மூன் கொண்டாடுறீங்களா"ன்னு கேட்டார். அங்கு என்னை தவிர வேறு எந்த பெண்ணும் இல்லை, அதனால் அவர் என்னைத்தான் சொல்கிறார் என தெரிந்து கொண்டேன். எனக்கு கோபம் சுளீர் என ஏறியது.
பின்னர் ராஜ்கண்ணு கோயமுத்தூர் பாஷையில் அசிங்கமா திட்டினார், மிகவும் மோசமான வார்த்தைகளை பேசினார். எனக்கு கோபம் அதிகரித்து எழுந்து நான் உட்கார்ந்திருந்த நாற்காலியை மடித்து விட்டேன் பாருங்கள்" என வடிவுக்கரசி தனது வாழ்வில் நடந்த விஷயத்தை கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications