வள்ளியின் வேலன்: போட்டியில் பங்கேற்ற வேலன்.. முதல் ரவுண்டில் நடந்த டுவிஸ்ட் - இன்றைய அப்டேட்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வள்ளியின் வேலன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வேலன் போட்டியில் கலந்து கொள்வதாக சொல்லி காலேஜ் வர வள்ளி அதெல்லாம் தேவையில்லை என்று கோபத்தை கொட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, வேலன் போட்டியில் கலந்து கொள்கிறேன் என்று உறுதியாக சொல்ல தமிழ் ஐயா முதல் போட்டியாக புஷ் அப் எடுக்க வேண்டும் என்று சொல்கிறார். மொத்தம் 100 புஷ் அப் எடுக்க வேண்டும் 10 புஷ் அப் முடிந்ததும் அவர்கள் மீது 10 கிலோ எடை வைக்கப்படும் என்று சொல்ல இந்த போட்டியில் வேலன் தடுமாற ரஞ்சித் முதலில் புஷ் அப் எடுத்து முடிக்கிறான்.

அதை தொடர்ந்து அடுத்த போட்டியாக கம்பு சுத்த வேண்டும் என்று சொல்கிறார். இடையில் இருந்து பந்துகளை வீசுவோம். அதை உங்கள் மீது படாதபடி தடுத்து கொண்டே கம்பு சுற்ற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார்.

இங்கே வேலன் வீட்டிற்கு வந்த ரேணுகாவின் அம்மா கரண்ட் பில் கட்டவில்லை என்று சத்தம் போட ரேணுகா உள்ளே வந்து நான் பில் கட்டி விடுகிறேன் என்று சொல்கிறாள். வேலனின் அம்மா வேண்டாம் என்று சொல்லி கொண்டு வேலனுக்கு போட சொல்ல ஆனந்தி அண்ணன் போட்டியில் கலந்து கொள்ள சென்றிருப்பதாக சொல்கிறாள்.

இதனால் ரேணுகா நான் உங்க வேலனுக்காக இவ்வளவு பண்றேன். ஆனால் அவருக்கு ஐயாவும் வள்ளியும் தான் முக்கியமா என்று கோபப்பட்டு வெளியேறுகிறாள். இங்கே கம்பு சுத்தும் போட்டி விறுவிறுப்பாக நடக்கிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வள்ளியின் வேலன் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.












Click it and Unblock the Notifications