வள்ளியின் வேலன்: கண்ணீரில் வள்ளி, ரத்தினவேலின் தன்மானத்தை காக்க வேலன் முடிவு - இன்றைய எபிசோட்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வள்ளியின் வேலன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வேதநாயகியிடம் இருந்து வள்ளியை காப்பாற்றுவதற்காக வேலன் வள்ளியை திட்டி அதை வைத்து அனுப்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, வள்ளி கண்ணீருடன் ரூமுக்கு செல்ல ரத்தினவேலும் தனது ரூமுக்கு வந்து விடுகிறார். பின்னாடியே வந்த வேதநாயகி வள்ளி ஏன் இப்படி பண்ணா என்று ரத்தினவேலை ஏற்றி விட முயற்சி செய்கிறாள்.

ஆனால் ரத்தினவேல் என்னை கொஞ்சம் தனியாக விடு அக்கா என்று சொல்லி விடுகிறார். மறுபக்கம் வேலன் வள்ளியிடம் பேச ரூமுக்கு வர வள்ளி என்கிட்ட எதுவும் பேச வேண்டாம் என்று கோபமாக சொல்லிவிட வேலன் பேச முடியாமல் வந்து விடுகிறான்.

ஒரு பக்கம் வள்ளி இன்னொரு பக்கம் ரத்தினவேல் என இருவரும் சோகமாக நின்று கொண்டிருக்க வேலன் உங்க ரெண்டு பேருக்கும் இடையே உள்ள பிரச்சனையை நான் சரி பண்ணுகிறேன் என்று முடிவெடுத்து கிளம்பி செல்கிறான்.
அதை தொடர்ந்து அடுத்த நாள் காலையில் மீடியாக்காரர்கள் ரத்தினவேல் வீட்டு முன்னாடி வந்து கூடி நிற்க முத்து அண்ணா பிரஸ்மீட் எதுவும் கொடுக்கிறதா சொல்லலையே அப்புறம் எதுக்கு வந்தீங்க என்று கேள்வி கேட்க பெரிய பிரச்சினையா போய்ட்டு இருக்கு அவர்கிட்ட பேசி ஆகணும் என மீடியாக்கள் ஒன்று கூடுகின்றன.

இதை தொடர்ந்து ரத்தினவேல் மீடியாவை சந்திக்க வர வேலன் இந்த பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட ஷரத்துடன் ரத்தினவேல் வீட்டிற்கு வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வள்ளியின் வேலன் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications