வள்ளியின் வேலன்: பத்த வைத்த வாத்தியார்.. ரத்தினவேல் எடுக்க போகும் முடிவு என்ன? இன்றைய எபிசோட்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வள்ளியின் வேலன். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் ஆசிட் வீச வந்த நபர்களால் வள்ளி பயந்து போன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, வேதநாயகி வள்ளியை கூப்பிட்டு ஏன் ஒரு மாதிரி இருக்க என்று கேள்வி கேட்க வள்ளி தனக்கு வந்த மிரட்டல்களால் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க ரத்தினவேல் வந்ததும் வள்ளிக்கு காலேஜில் ஏதோ பிரச்சனை போல.. ஒரு மாதிரி இருக்கா என்று கோர்த்து விடுகிறாள்.

இதை தொடர்ந்து ரத்தினவேல் என்ன பிரச்சனை என்று கேட்க வள்ளி எதுவும் இல்லை என்று சொல்லி விடுகிறாள், அடுத்து வேலனுக்கு வீட்டில் இருந்து போன் வந்து கொண்டே இருக்க அவன் வீடு வரைக்கும் போயிட்டு வருவதாக கிளம்பி வருகிறான்.

ஆனந்திக்கு போன் செய்து என்னாச்சு எதுக்கு போன் பண்ணிட்டே இருக்க என்று விசாரிக்க வள்ளிக்கு காலேஜில் நடந்த விஷயம் பற்றி சொல்கிறாள். உடனே வேலன் வள்ளியை சந்தித்து என்னாச்சு என்ன பிரச்சனை என்று விசாரிக்க வள்ளி தனக்கு வந்த மிரட்டல்களை நினைத்து எதுவும் சொல்லாமல் இருக்கிறாள்.

பிறகு கீழே வர வள்ளியை காப்பாற்றிய தமிழ் வாத்தியார் வீட்டிற்கு வந்து உங்க பொண்ணோட உயிருக்கு ஆபத்து இருக்கு சொல்லி கொண்டிருக்க அதை பார்த்து ஷாக் ஆகிறாள். இப்படியான நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் வள்ளிக்கு பார்டி கார்ட் வைக்க வேண்டும் என்று வாத்தியார் சொல்கிறார். அதற்கு ரத்தினவேல் சரி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வள்ளியின் வேலன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications