வள்ளியின் வேலன்: ரேணுகாவை வைத்து வேதநாயகி செய்த சதி.. வேலன் செய்ய போவது என்ன? இன்றைய எபிசோட் அப்டேட்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வள்ளியின் வேலன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வேதநாயகி வள்ளியின் அம்மா பெயரில் நியூஸ் பேப்பரில் போலியான செய்தியை கொடுத்த வள்ளியின் பிறந்தநாளுக்கு எல்லாரும் வாழ்த்து சொல்கின்றனர், அந்த நேரத்தில் ரத்தினவேல் வேலன் எங்க போய்ட்டான்? அவன் தானே எப்பவும் உன் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுவான் என்று சொல்லி கேட்க வள்ளி கல்யாண வேலை விஷயமா வெளியே போய் இருப்பதாக சமாளிக்கிறாள்.
இதே நேரத்தில் வேலன் வள்ளியின் பிறந்த நாளுக்காக கோவிலில் அன்னதானம் கொடுத்து கொண்டிருக்கிறான், வள்ளி கோவிலுக்கு வருகிறாள். வேலனை சந்தித்து எப்போதும் போல் பேசி கொண்டிருக்கிறாள்.

இந்த சமயத்தில் வள்ளியின் அம்மா மயங்கி கீழே விழ இதை பார்த்த வேலன் வள்ளி என இருவரும் ஓடி போய் அவரை தூக்கி உட்கார வைத்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்துகின்றனர்.
அடுத்து வேலன் வள்ளிக்கு இன்னைக்கு பிறந்த நாள் என்று சொல்ல வள்ளியின் அம்மா வள்ளியை பார்த்து எமோஷனாக பேசுகிறாள். அம்மா என்பது தெரியாமல் வள்ளி அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறாள்.
இந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ரத்தினவேல் வேலனை வீட்டிற்கு வர வைத்து நியூஸ் பேப்பரை காட்டி இது என்னனு கொஞ்சம் பாரு என்று சொல்ல வேதநாயகி பதற்றம் அடைகிறாள், இந்த விஷயமாக நாம எதாவது பண்ணா அது அவளை மிரட்டுற மாதிரி ஆகிடும் என்று சொல்ல ரத்தினவேல் அமைதியாகி விடுகிறார்.
அடுத்து வள்ளி வேலனை சந்தித்து நீ எதுக்கு இப்படி இருக்க.. எப்பவும் போல அப்பாவுக்கு பக்கபலமா இரு என்று சொல்கிறாள், அதை தொடர்ந்து வேதநாயகி ரேணுகாவுக்கு போன் போட்டு நாளைக்கு நலங்கு வைக்க சொல்கிறாள். ரேணுகா அதுக்கு இன்னும் 3 நாள் ஆகும் என்று சொல்கிறாள்.

நாளைக்கு வள்ளிக்கு நலங்கு.. வேலன் இங்க வர கூடாது, அப்போது தான் உனக்கும் வேலனுக்கும் கல்யாணம் நடக்கும் என்று சொல்ல ரேணுகா சம்மதம் சொல்கிறாள். பிறகு வேலனிடம் நலங்கு குறித்து பேச வேலன் மறுப்பு தெரிவிக்க ரேணுகா ஆனந்தி வாழ்க்கை, என் அப்பா அம்மாவை நினைச்சு பாருங்க என்று சொல்லி சமாளிக்கிறாள். இதனால் வேலனும் சம்மதம் சொல்கிறான்.
அடுத்து வள்ளிக்கு நலங்கு வைக்கும் வேலைகள் நடக்க ரத்தினவேல் வேலனை கேட்க வள்ளி அவனுக்கும் இன்னைக்கு தான் நலங்கு, ரொம்ப மாறிட்டான் என்று சொல்கிறாள். இங்கே வேலன் அப்பாவிடம் வள்ளிக்கு இன்னைக்கு நலங்கு, நான் அங்கு போகணும் என்று சொல்ல அவர் நீ போ நான் இங்க பார்த்துக்கறேன் என்று அனுப்பி வைக்கிறார்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வள்ளியின் வேலன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications