வானத்தைப்போல சீரியலில் என்ட்ரி கொடுத்த நடிகர் விஜய்யின் நண்பன்.. தளபதி பட்டத்தோடு.. ஆட்டம் ஆரம்பம்!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் அக்டோபர் ஒன்றாம் தேதிக்கான ஒரு மணி நேர ஸ்பெஷல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் சின்ராசுக்கு துணையாக தளபதி பட்டத்தோடு நடிகர் விஜய்யின் நண்பர் நடிகர் சஞ்சீவ் இந்த சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார்.

நடிகர் சஞ்சீவ் சில வருடங்களாக எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த நிலையில் இப்போது இந்த சீரியலில் என்ட்ரி ஆவதால் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. பல வருடங்களை தாண்டி இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும் டிஆர்பியில் முன்னணி இடத்தை இந்த சீரியல் தொடர்ச்சியாக பிடித்துக் கொண்டிருக்கிறது. அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த சீரியலில் பல மாதங்களாக துளசி கர்ப்பமாக நடித்து வந்த நிலையில் தற்போது துளசி கர்ப்பமாக இல்லை என்ற விஷயம் ராஜபாண்டிக்கு தெரிந்து விட்டதால் துளசியை வீட்டை விட்டு அனுப்பி விட்டனர். இதனால் துளசி தன்னுடைய அண்ணன் சின்ராசு வீட்டில் தான் இருக்கிறார்.
இந்த நிலையில் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி வானத்தைப்போல சீரியல் ஒரு மணி நேர ஸ்பெஷல் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அந்த ப்ரோமோவில் துளசியின் கழுத்தை பிடித்து ராஜபாண்டியும் அவருடைய அப்பாவும் வெளியே தள்ளுகின்றனர். அப்போது ராஜபாண்டி தங்கம் நீ கஷ்டத்தில் துடிச்சா தானே உன் அண்ணன் இங்க வருவான். அவனுக்கு இருக்கு பாரு.. இங்க வரட்டும் என்று மிரட்டுகிறார்.

அப்போது ராஜபாண்டியின் அத்தை சின்ராசு வந்துட்டான். தனி ஆளா வருகிறான் என்று சொல்ல, சின்ராசுவை பார்த்த ராஜபாண்டியின் அப்பா இப்படி தனியா வந்து சிக்கி கிட்டியே என்று சொல்கிறார். அப்போது ராஜபாண்டியின் அடியார்கள் ஓடி வந்து சின்ராசை அடிக்க போக, அந்த நேரத்தில் வீட்டு கேட் திறந்து கொண்டு ஒரு நபர் வருகிறார். அவர் மாஸாக வந்து அங்கு வருகிறார். அதற்கு சின்ராசு நான் தனியாளா ஒன்னும் வரல எங்க "தளபதியோட" வந்து இருக்கேன் என்று சொல்லுகிறார்.
அதற்கு வீரசிங்கம் கேரக்டரில் வந்து இருக்கும் சஞ்சீவ் "பொதுவா எல்லாருக்கும் பிரச்சனைனா தான் போலீஸ்கிட்ட வருவாங்க. ஆனா உங்களுக்கு இனிமே இந்த போலீசால தான் பிரச்சனையே. எங்க ஆட்டம் இனிமே தான் ஆரம்பம்" என்று சொல்லி இருவரும் கெத்தாக நடந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்த அதிகமான ரசிகர்கள் சஞ்சீவ் மீண்டும் சீரியலில் அறிமுகம் ஆகி இருப்பதற்கு அவரை வரவேற்று வருகின்றனர். அதே நேரத்தில் சஞ்சீவ் அதாவது வீரசிங்கம் சந்தியாவுக்கு (தாசில்தார்) ஜோடியாக இருக்க வேண்டும் என்று கருத்து கூறி வருகின்றனர். அதுபோல இன்னும் ஒரு சில நெட்டிசன்கள் சஞ்சீவ் ஏற்கனவே நடிகர் விஜய்யின் நண்பர் என்று தன்னை எங்கேயும் சொல்லிக் கொண்டிருப்பதால் இங்கேயும் "தளபதி" என்ற பட்டத்தை தூக்கிக் கொண்டு வந்து விட்டாரே..!? என்று சிலர் கலாய்த்தும் வருகின்றனர்.
-
அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய பாரதிராஜா.. தன்னம்பிக்கை மனிதனின் எழுச்சி! லீக்கான போட்டோஸ் -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
பிரதமர் நடித்த ஒரே படம் அமைதிப்படை தான்.. அதுவும் இந்த காட்சியை மறக்க முடியுமா? சத்யராஜ் சர்ச்சை பேச்சு -
அறந்தாங்கி நிஷா ஓபனாக சொன்ன ஒரு வார்த்தை.. அறிவே இல்லையா இப்படியா பேசுறது? மேடையிலேயே திட்டிய நடிகர் -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
Happy Raj OTT: ஓடிடிக்கு வரும் ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்... எந்த தளத்தில், எப்போ பார்க்கலாம்? லீக்கான தகவல் -
நடிகர் பிரகாஷ் ராஜின் அம்மா திடீர் இறப்பு.. இவ்வளவு பெரிய சோகங்களை கடந்து வந்தவரா அவர்! நெகிழ வைத்த கதை -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?












Click it and Unblock the Notifications