தூக்கி கட்டிய கொண்டை.. தலையில் அதை மாட்டி.. அப்படி ஒரு சிரிப்பு.. சிலிர்க்க வைக்கும் வாணி!
சென்னை: தலையில் செப் கேப்பை மாட்டியதும் கடகடவென கடமை தவறாமல் கைவண்ணத்தை காட்டி கலகலவென்று சிரிக்கும் சூப்பர் வீடியோவைப் போட்டுள்ளார் வாணி போஜன் .
இந்த சிரித்த முகமும், கூடவே தெய்வமகள் மியூசிக்கும் கேட்டால், தும் எத்தனை வருஷம் ஆனாலும் அப்படியே மீண்டும் ரசிகர்களின் மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்த தவறாதவர் வாணி போஜன்.
அவரது லேட்டஸ்ட் போட்டோஸ்களும் வீடியோஸ்களும் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக வலம் வருகிறது.

ஹோட்டல் பிசினஸ்
என்னடா இது கொரோனா ஊரடங்கால் எல்லா பிசினஸ்ஸும் ஸ்டாப் ஆனாலும் இந்த ஹோட்டல் பிசினஸ் மட்டும் நான் ஸ்டாப்பாக போயிட்டே இருக்கு என நினைத்தாரோ என்னவோ சமையல் தொழிலையும் கத்து வச்சிக்குவோம்னு களத்தில் இறங்கி விட்டார் போல வாணி போஜன். அந்த வீடியோவைப் பார்த்தால் அப்படித்தான் நினைக்கத் தோணும். ஆனால் மேட்டர் வேறு.

நயன்தாரா மாதிரி
வெள்ளித்திரையில் நயன்தாரா என்ன பண்ணாலும் எப்படி வைரலாகுமோ அதேமாதிரி சின்னத்திரை நயன்தாரா வாணி போஜனும் என்ன பண்ணாலும் வைரலாவது தவிர்க்க முடியாத ஒன்றுதான். இத்தனை வருடங்கள் ஆனாலும் அதே புன்னகையுடன் இளமையும் மாறாமல் இருக்கும் வாணி போஜனையை பார்த்து வியந்து வருகின்றனர்.

கேக் வாணி
இந்த நிலையில் ஒரு ஹோட்டலில் நடந்த கேக் மேக்கிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேக்குகு டிரஸ்ஸிங் செய்யும் வேலையில் ஈடுபடும் வீடியோவைப் போட்டுள்ளார் வாணி போஜன். இதற்காக செஃப் வேடம் பூண்டு காணப்படுகிறார். இப்படி ஒரு மாஸ்டர் ஹோட்டலில் இருந்தால் இவரது ரசிகர்கள் வீட்டு சாப்பாட்டை மறந்து ஹோட்டல் சாப்பாடு கதி என்று இருந்து விடுவார்கள்.

சாப்பிடாமல் இது என்ன விளையாட்டு
சாப்பிட போன இடத்துல சாப்பிடாம ஏன்மா மாஸ்டரை இம்சை பண்றே என்றும், வீட்ல ஒரு நாள் கூட சமயல்கட்டு பக்கம் வந்ததில்லை வீடியோ போடுவதுக்காக சமையல்கட்டு பக்கம் போயிருக்கியா வீட்டுக்கு வா பார்த்துக்கிறேன் என்றும் ஜாலியாக ரசிகர்கள் கலாய்த்து தள்ளியுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த வாணி போஜன் அம்மாவின் மைண்ட் வாய்ஸ் எப்படி இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

கெட்டப்பெல்லாம் ஓகேதான்
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கெட்டப் ஓகே.... ப்ரோக்ராம்ல பார்டிசிபேட் பண்ண வேண்டியது தான் பாக்கி என்று அந்த நிகழ்ச்சிக்கு இவரை அழைப்பு விடுத்தும் வருகின்றனர். தலைக்கும் கைக்கும் மட்டும் கவசம் போட்டா போதாது கொஞ்சம் முகத்துக்கும் போடுங்க என்று செல்லமாக அட்வைஸ் வழங்கி வருகிறார்கள். கமெண்ட்டுகளைப் பார்த்தால் செம ஜாலியாகத்தான் இருக்கிறது.

அழகுதான்
வாணி போஜன் அருகிலிருந்ததால் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஏதோ ஒன்றை செய்து பினிஷிங் டச்சுக்காக ஒரு கோனை வாணிபோஜன் கையில் கொடுத்து கேக் மேலே கோனால் படம் வரையச் சொல்லி தன் கடமையை அந்த மாஸ்டர் முடித்தது போல் தெரிகிறது. அழகா இருக்கவங்க என்ன செஞ்சாலும் அழகா தான் இருக்கும் ஆனால் சாப்பிட எப்படி இருக்குமோ பாவம்.....என்றும் சிலர் பரிகசித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications