கன்னக்குழியில் கரைந்து போன ரசிகர்கள்..இவ்வளவு இறக்கமான மனதா? வாணி போஜனை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை: வாணி போஜனை இப்படி ஒரு போஸில் பார்த்தால் அவரது ரசிகர்களுக்கு போஜனம் கூட தேவை படவில்லையோ!என்னவோ? கேப்பே விடாமல் லைக்குகளையும் கமெண்டுகளையும் சும்மா கி.ர்..ர்ர்.. என்று ஏற்றி வருகின்றனர்.
அவரது போஸ்ட பார்த்தவுடன் இது மட்டும்தானா, இன்னும் போட்டோக்கள் இருக்கிறதா?என்று மேலும் மேலும் நெக்ஸ்ட் பட்டனை அமுக்கி வருகின்றனர் .ஏனென்றால் ஒவ்வொரு போட்டோவிலும் படிப்படியாக கிளாமர் ஏறிக் கொண்டே செல்வதால்! என்னவோ? தெரியவில்லை.
செஞ்சி வச்ச சிலையாக மாறிய வாணி போஜனை பார்த்ததும் பதறிப்போன ரசிகர்களால் இன்ஸ்டாகிராமே தவித்துப் போய் விட்டது.

எளிமைதான் அழகு
சின்னத்திரை நயன்தாரா என்று செல்லமாக அழைக்கப்படும் வாணிபோஜன் அறிமுகமானது என்னவோ விஜய் டிவி ஆக இருந்தாலும், சன் டிவியில் இவர் நடிப்பில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் தான் இவரை தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக்கியது.ஓவர் மேக்கப் இல்லாத தன்னுடைய எளிமையான அழகாலும், அதிகமாக அலப்பறை காட்டாத சோகமும் சந்தோசமும் கலந்த அழகான சிரிப்பாலும், பார்த்தவுடன் அனைவரது மனதிலும் சட்டென்று ஒட்டிக் கொண்டார். சீரியலில் மட்டும் தன் ரசிகர்களை சிலிர்க்க வைத்த வாணி...யை வெள்ளித்திரையும் வாம்மா... நீ என்று வரவேற்று ஏற்றுக் கொண்டது.

திறமை இருக்கு வேறென்ன வேணும்
அடுத்தடுத்த படங்களில் இவர் கமிட் ஆனாலும், இவர் நடித்து முடித்த படங்கள் இன்னும் கொரானா தாக்கத்தால் பெட்டிக்குள் முடங்கி கிடக்கின்றன. தற்பொழுது தியேட்டர்கள் அனைத்தும் திறக்கப்பட்டு விட்டதால் விரைவில் வாணிபோஜனை அவரது ரசிகர்கள் பெரிய திரையில் கண்டு களிக்கலாம்.கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த வைபவ் வுடன் இணைந்து நடித்த மலேசியா டு அம்னீசியா என்ற காமெடி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு கேசினோ, தாழ்திறவாய், சீயான் விக்ரமின் மகான், போன்ற திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளிவர காத்திருக்கிறது.

வைரலாகும் வீடியோக்கள்
எங்காவது அவுட்டிங் சென்றாலோ, பார்ட்டிக்கு சென்றாலோ, நல்ல மூடில் இருந்தால் ஏதேனும் குறும்பாக செய்து வீடியோ வெளியிடுவது, அல்லது தனது காஸ்டியூமை கன்னாபின்னாவென்று போட்டோ எடுத்து ரசிகர்கள் கண்களுக்கு விருந்து அளிப்பது வாணிபோஜனின் வழக்கம். அப்படி இவர் போட்ட பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வந்திருக்கின்றன. ரீசன்ட்டாக ரெட் கலர் கவுனில் இவர் போட்ட விடியோ பார்ப்பதற்கு மட்டும் தான் slow-motion.. ரீச் ஆனது என்னவோ ஜெட் வேகத்தில் தான்.அந்த அளவிற்கு இவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இவருக்கு பக்கபலமாக இருந்து வருகின்றனர்.

இதையெல்லாம் வாணி பார்ப்பாரா?
தற்பொழுது ஸ்லீவ்லெஸ் பிளவுஸில் சாரி உடன் இவர் போட்ட போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் சும்மா விடுவார்களா! இவரது ரசிகர்கள் மட்டுமின்றி யார் பார்த்தாலும் கண் படும் அளவிற்கு ஜம் என்று போட்டுள்ள போட்டோக்களை வழக்கம்போல் ட்ரண்ட் செய்து வருகின்றனர். அல்லிராணி...அழகு வாணி...அசத்தும் பூ நீ... என்று டிஆர் பாணியில் கமெண்ட் பாக்ஸில் கவிதைகளை கொட்டி வருகின்றனர். ஒரு சிலர் ரசிகர்கள் கொஞ்சம் மேலே சென்று இவருக்கு திருமணம் ஆனது கூட தெரியாமல் தங்களை திருமணம் செய்துகொள்ள ஆன்லைனில் அப்ளிகேஷன் அளித்து வருகிறார்கள். அதிலும் ஒரு ரசிகர் தன்னுடைய வாழ்க்கையின் இலக்கே வாணிபோஜன் அவர்களை பார்ப்பது மட்டும்தான் என்று நிர்ணயித்து வைத்துள்ளாராம். ஒருவேளை இந்த மாதிரியான கமெண்டுகள் வாணிபோஜன் அவர்களின் கண்களில் பட்டு அந்த ரசிகர்களின் வாழ்க்கை இலக்கை அடைய உதவுவாரா??
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications