மீண்டும் சினிமாவிற்கு என்ட்ரி கொடுக்கும் வனிதாவின் மகன்.. வனிதாவிற்கு இவ்வளவு பெரிய மகனா??
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருக்கும் வனிதாவின் மகன் தற்போது சினிமாவில் கால்தடம் பதிக்க இருக்கிறார்.
இளம் கதாநாயகிகளுக்கு டப் கொடுத்துக் கொண்டிருக்கும் வனிதாவுக்கு இவ்வளவு பெரிய பையன் இருக்கிறாரா என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மீண்டும் அல்டிமேட்டில் அறிமுகம்
திரைத்துறை வாரிசான வனிதா விஜயகுமார் தற்போது வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையில் கலக்கி வருகிறார். ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு ரசிகர்களின் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்துள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார். இவருடைய கெத்தான பர்பாமன்ஸ் முன்னாடி அனைத்து போட்டியாளர்களும் பல நேரங்களில் பம்மி விடுகின்றனர். இவரை எதிர்த்து பேசுவதற்கு ஆளே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு தான் இவருடைய அட்ராசிட்டி இருந்து வருகிறது.

சினிமாக்களில் அறிமுகம்
சர்ச்சைக்கு பெயர் போன வனிதா அவருடைய குடும்ப வாழ்க்கையிலும் சரி திருமண வாழ்க்கையிலும் சரி திறந்த புத்தகமாக தான் இருந்துவருகிறார். எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும் தற்போது இவர் மீண்டும் சினிமாக்களில் பிஸியாக இருந்து வருகிறார். அது போல அவருடைய மகன் தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைக்க தொடங்கியிருக்கிறார். இது ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இவருடைய மகன் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

வெளியான புகைப்படங்கள்
வனிதாவிருக்கு ஏற்கனவே இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார் என்று அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், மகள்களோடு மட்டும் தான் அவர் வாழ்ந்து வருகிறார். அவருடைய மகன் அவருடைய தந்தையுடன் தான் வாழ்ந்துவருகிறார். விவாகரத்திற்கு பிறகு தன்னுடைய குழந்தை தனக்கு வேண்டுமென்று வனிதாவின் கணவரான ஆகாஷ் மகனை தன்னோடு வைத்துக்கொண்டார். இந்த நிலையில் மகனோடு அதிக தொடர்பு இல்லாமல் அனிதா இருந்து வருவதாக கூறப்படுகிறது. வனிதாவின் மகன் சினிமா துறை சம்பந்தமான படிப்பு படித்து வருகிறார். அதோடு இவர் சாட்பிலிம் ஒன்றை இயக்கி நடித்திருக்கிறார். தற்போது அவருடைய புகைப்படம் வெளியாகியுள்ளது.

இவ்வளவு பெரிய பையனா
ஸ்ரீஹரி ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இந்தநிலையில் தற்போது கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாவிட்டாலும் வனிதாவின் மகன்தான் ஸ்ரீஹரி என்பது பலருக்கும் நம்ப முடியாத வகையில் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இவருக்கு இவ்வளவு பெரிய பையனா என்பதுதான் பலருடைய கேள்வியாக இருந்துவருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications