Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நட்புனா என்னன்னு தெரியுமா? மனதார பாராட்டிய ரஜினிகாந்த்.. சந்தோஷத்தில் உருக்கமாக வனிதா போஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் கதாநாயகியாக நடித்திருக்கும் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படத்தை அவருடைய மகள் ஜோவிகா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் வரும் ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் ஜோவிகா மற்றும் வனிதா இருவரும் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கின்றனர். அப்போது ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படத்தை வனிதா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து உருக்கமாக போஸ்ட் போட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜயகுமாரின் மகள் தான் வனிதா. வனிதா விஜயகுமாருக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. சோசியல் மீடியாவை பயன்படுத்தும் பலருக்கும் தெரிந்திருக்கும். நடிகர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். அதற்கு பின் மாணிக்கம் உட்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

Vanitha Vijayakumar Jovika Rajinikanth

வனிதாவின் மகள் ஜோவிகா

ஆனால் பிறகு சினிமா வாழ்க்கையை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையில் இணைந்திருந்தார். அவருடைய குடும்ப வாழ்க்கையில் வனிதா தொடர்ச்சியாக ஏமாற்றங்களை சந்தித்துக் கொண்டு இருந்தார். அவருடைய குடும்ப வாழ்க்கை திறந்த புத்தகமாக தான் இருந்து வருகிறது. அதுபோல தன்னுடைய மகள் ஜோவிகாவுடன் தனியாக வசித்து வரும் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரையில் கவனம் செலுத்த தொடங்கி இருந்தார்.

வனிதா நடிக்கும் திரைப்படம்

இப்போது தன்னுடைய மகள் தயாரிப்பில் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக நடிக்க தொடங்கி இருக்கிறார். இந்த திரைப்படம் வரும் ஜூலை நான்காம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நாளில் தன்னுடைய படத்தை ரிலீஸ் செய்வதற்கு முக்கிய காரணம் அதே நாள்தான் என்னுடைய அம்மா மஞ்சுளாவின் பிறந்தநாள் அதனால் அம்மாவின் ஆசிர்வாதத்தோடு நான் இந்த படத்தை வெளியிடுகிறேன் என்று வனிதா கூறி இருக்கிறார்.

ரஜினிகாந்த் உடன் வனிதா

அதுபோல இந்த திரைப்படத்தை வனிதா தான் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் குறித்த பிரமோஷனில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் வனிதா இன்று நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்திருக்கிறார். அப்போது தன்னுடைய படத்தின் ரிலீஸ் தேதியோடு உருவாக்கப்பட்டு இருக்கும் போஸ்டரை வனிதா மற்றும் ஜோவிகா இருவரும் ரஜினிகாந்திடம் கொடுத்து ரிலீஸ் செய்து இருக்கின்றனர். அப்போது ரஜினிகாந்த் அன்போடு வனிதா மற்றும் ஜோவிகாவை அரவணைத்து போஸ் கொடுத்து இருக்கிறார்.

Vanitha Vijayakumar Jovika Rajinikanth

ரஜினிகாந்த் செய்த உதவி

நடிகர் விஜயகுமாரும் ரஜினியும் பல வருடங்களாக நண்பர்களாக இருக்கின்றனர். விஜயகுமாருக்கும் வனிதாவுக்கும் குடும்ப பிரச்சனை ஏற்பட்டபோது மஞ்சுளாவின் இறப்பில் வனிதாவை கலந்து கொள்ள விஜயகுமார் சம்மதிக்கவில்லையாம். அப்போது கூட நடிகர் ரஜினிகாந்த் தான் தனக்காக பேசி தன்னுடைய அப்பாவின் மனதை மாற்றினார், ரஜினிகாந்த் சொன்னதால்தான் என்னுடைய அம்மாவின் இறுதி சடங்கில் என்னால் கலந்து கொள்ள முடிந்தது என்று பல இடங்களில் வனிதா பேசியிருக்கிறார்.

வனிதா பதிவு

தன்னுடைய அப்பாவின் நண்பராக இருந்தாலும் அவருக்கு பிடிக்காத மகளாக நான் இருக்கும் போதும் என் மீது தொடர்ந்து அன்பை செலுத்திவரும் ரஜினிகாந்த் உண்மையிலேயே சூப்பர் ஸ்டார் என்றும் கூறியிருக்கிறார். அதுபோல இன்று தன்னுடைய மகளையும் தன்னையும் ரஜினிகாந்த் ஆசீர்வதித்தது குறித்து வனிதா வெளியிட்ட பதிவில், "நட்பையும், உறவுகளையும் எப்படி மதிக்க வேண்டும் என்பது ரஜினி காந்த்க்கு தான் தெரியும். அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்" என்று வனிதா போஸ்ட் போட்டு இருக்கிறார். வனிதாவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+