என் மகள் ஜோவிகா இனி கதாநாயகி.. அதுவும் எந்த படம் தெரியுமா? நெகிழ்ந்த வனிதா.. விமர்சனங்களுக்கு பதிலடி
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் கதாநாயகியாக நடித்திருக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளராக இருக்கும் வனிதாவின் மகள் ஜோவிகா புதியதாக திரைப்படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருப்பதாக வனிதா அறிவித்திருக்கிறார்.
நடிகை வனிதா விஜயகுமார் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பமான முதல் படமே நடிகர் விஜய்க்கு ஜோடியாக தான் அவர் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் இனி தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில வருடங்களிலேயே சினிமாவை விட்டு விலகிவிட்டார். அதற்கு பிறகு திருமணம் குடும்பம் குழந்தை என்று செட்டில் ஆகிவிட்டார்.

மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படம்
வனிதாவின் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்தது. வனிதாவிற்கும் அவருடைய தந்தை விஜய குமார் குடும்பத்திற்கும் இடையே பேச்சு வார்த்தை இல்லாமல் இருக்கிறது. தனி ஆளாக தன்னுடைய மகளை வளர்த்து வரும் வனிதா விஜயகுமார் சினிமாவில் நினைத்த இடத்தை அடைய முடியவில்லை. ஆனால் அவருக்கு பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் கம்பேக் கொடுத்தது.
வனிதா பற்றிய சர்ச்சை
சில வருடங்களுக்கு முன்பு விஜயகுமார் உடன் வனிதாவுக்கு பிரச்சனை ஏற்பட்டு, செய்தி சேனல்களில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார். அந்த நேரத்தில் பிக் பாஸ்க்கு வனிதா அழைக்கப்பட்டு இருந்தார். உள்ளே போன பிறகும் சண்டை சச்சரவுக்கும், பஞ்சாயத்துக்கும் பஞ்சம் இல்லாமல் வனிதா பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவரை தேடி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போலீஸ் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வனிதா நடிக்கும் திரைப்படம்
இப்போது வனிதா சில திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார். வனிதாவிற்கு அவருடைய மகளே கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார். தன்னுடைய தயாரிப்பில் உருவான மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படத்தில் வனிதாவை கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கிறார். இந்த திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் பிரமோஷனில் மக்களிடம் இன்னொரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து இருக்கிறார்.
ஜோவிகா நடிக்கும் திரைப்படம்
அதில் வனிதா பேசும் போது என்னுடைய மகள் ஜோவிகா ஹீரோயின் ஆகுறா, அவ ரெண்டு படத்துக்கு சைன் பண்ணி இருக்கா. தெலுங்கு சினிமாவை ஃபாலோ பண்றவங்களுக்கு சுமந்த் ஆர்ட் ப்ரொடக்ஷன் நன்கு தெரிந்திருக்கும். அவங்க தெலுங்கு இண்டஸ்ட்ரில நிறைய ஹிட் படங்கள் கொடுத்து இருக்காங்க. ஒக்கடு, வருஷம், தேவி போன்ற படங்களை தயாரித்தது அந்த நிறுவனம்தான். அவர்கள் இதுவரைக்கும் சூப்பர் ஹிட் படங்களை மட்டும் தான் கொடுத்திருக்காங்க. அந்த கம்பெனி ஜோவிகாவை அறிமுகப்படுத்துறாங்க.
கதாநாயகி ஆகும் ஜோவிகா
ஜூன்ல இருந்து ஷூட்டிங் ஆரம்பிக்குது ரொம்ப பவர்ஃபுல்லான அழகான ரோல்ல இண்ட்ரடியூஸ் பண்றாங்க. இதை அவங்கதான் முதலில் சொல்றதா இருந்தாங்க. ஆனா இப்போ இந்த பிரஸ்மீட்டில் என்ன சொல்ல சொல்லி இருக்கிறாங்க என்று நெகிழ்ச்சியோடு வனிதா பேசி இருக்கிறார். அம்மாவும் கதாநாயகியாக நடிக்கும் நேரத்தில் மகளும் கதாநாயகியாக இப்போது அறிமுகம் ஆகிறார்.

சாதனை
ஏற்கனவே விஜயகுமார் குடும்பத்தில் அதிகமானோர் சினிமா துறையில் தான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது வனிதாவின் மகளும் சினிமாவில் கதாநாயகி அவதாரமும் எடுக்கிறார். ஏற்கனவே வனிதாவின் மூத்த மகன் ஸ்ரீஹரியும் புதியதாக திரைப்படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார். இது பற்றி சில மாதங்களுக்கு முன்பு வனிதா பேசும் போது என்னுடைய மகனும் கதாநாயகனாக நடிக்கும் போது நானும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றால் இது யாரும் செய்யாத சாதனைதான் என்று கூறியிருந்தார். இப்போது வனிதாவின் மகளும் கதாநாயகியாக ஆகிறார்.
விமர்சனங்களுக்கு பதிலடி
அதுபோல வனிதா தன்னுடைய மகள் ஜோவிகா பெயருக்கு பின்னால் விஜயகுமார் என்ற பெயர் சேர்த்திருப்பது குறித்தும் பேசியிருந்தார். அதில் தன்னுடைய திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருந்தது அப்போது ஜோவிகா வயிற்றில் இருக்கும் போது தன்னுடைய அப்பா தான் தன்னை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்து தன்னையும் தன் குழந்தையும் காப்பாற்றியது. அதனால் எனக்கு அந்த நேரத்தில் என்னுடைய அப்பாவின் பெயரை என் குழந்தையின் பெயருக்கு பின்னால் பாதுகாப்பாக இருப்பதற்கு பயன்படுத்த வேண்டும் என்று தோன்றியது. அதனால் ஜோவிகா விஜயகுமார் என்று வைத்திருக்கிறேன் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications