ஜோதிகா செய்யலாம், என் பொண்ணு செஞ்சா தப்பா? பாக்யராஜ் படம் போல தான் இதுவும்.. வனிதா ஆதங்கம்
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் தான் எழுதி, இயக்கி, கதாநாயகியாக நடித்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்பட பிரமோஷனில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது தன்னுடைய மகள் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். தன்னுடைய மகள் ஜோவிகா எந்த உடை உடுத்தினாலும் அது விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் அதற்கு ஜோதிகாவை எடுத்துக்காட்டாக சொல்லி வனிதா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
நடிகை வனிதாவுக்கு அறிமுகமே தேவை இல்லை, சோசியல் மீடியாவில் எப்போதும் வைரல் ஆகி கொண்டிருப்பவர் தான். இப்போதுள்ள தலைமுறைகளுக்கு இவரை நடிகையாக தெரிவதை விடவும் பிக்பாஸ் பிரபலமாகத்தான் பலருக்கும் தெரியும். அவர் ஆரம்பத்தில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானது நடிகர் விஜய்க்கு ஜோடியாக தான். அதற்கு பிறகு நடிகர் ராஜ்கிரண் உட்பட ஒரு சில நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் 18 வயதிலேயே திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

மீண்டும் கதாநாயகி
பிறகு சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். அதற்கு பிறகு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய தந்தையோடு ஏற்பட்ட பிரச்சனையின் மூலம் செய்தி சேனல்களில் இவருடைய பெயர் தான் அதிகமாக உச்சரிக்கப்பட்டது. அதற்குப் பிறகு பிக் பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிஸியாக மாறிவிட்டார். இப்போது தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ரிவ்யூ செய்து வருகிறார். இந்த நிலையில் தான் தன்னுடைய மகள் தயாரிப்பில் தானே கதையை எழுதி, இயக்கி, கதாநாயகியாக நடிக்கும் மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தையும் முடித்திருக்கிறார்.
வனிதா பேட்டி
இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ப்ரமோஷனில் வனிதா கலந்து கொண்ட போது தன்னுடைய மகள் பற்றிய விமர்சனங்களுக்கு பதில் கொடுத்திருந்தார். அதில் என்னுடைய மகள் ஜோவிகா மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது பாவாடை தாவணி போட்டு இருந்தாங்க, அப்போது கூட சிலர் நீங்க ட்ரெடிஷனல் உடை எல்லாம் போட்டு இருக்கீங்க என்று கேட்கிறார்கள். அதோடு அந்த உடையில் என்னுடைய மகள் இடுப்பு தெரிகிறது என்று சிலர் கலாய்த்து இருக்கிறார்கள்.
குஷி ஜோதிகா
குஷி படத்தில் சில வருடங்களுக்கு முன்பு ஜோதிகா இடுப்பை காட்டி பெரிய அளவில் பிரபலம் ஆனாங்க. அந்த படத்தில் ஜோதிகாவின் இடுப்புதான் பேமஸ் ஆனது. ஆனா இப்போது ஜோவிகா இடுப்பை காட்டினா அதை பெருசா பேசுறீங்க. நான் இதை பத்தி எல்லாம் கண்டுக்க போறது கிடையாது. என்னுடைய பொண்ணு அழகா இருக்கிறா... அதனால அவளுக்கு எந்த உடை சௌகர்யமா இருக்குதோ அதை அவள் உடுத்திட போறா.. அவ்வளவுதான். இதை பெரிய விஷயமாக்க வேண்டாம்.
பாக்யராஜ் படம்
அதுபோல என்னுடைய படத்தின் கதையை பார்த்துவிட்டு சிலர் இது பாக்யராஜ் படம் மாதிரி இருக்குன்னு சொல்றாங்க என்னுடைய படத்தின் டிரைலரில் கூட ப்ரா தூக்கி காட்டுவது போன்று காட்சி இருக்கும். இது ஒன்னும் தப்பான விஷயம் கிடையாது. பாக்கியராஜ் சார் படத்தில் எப்படி ஒரு குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாம் வெகுளித்தனத்தோடு காட்டப்படுமோ அதேபோலத்தான் இந்த படத்திலும் இருக்கிறது.
முந்தானை முடிச்சு படத்தில் முருங்கைக்காயின் அவசியத்தையும் சொல்லி குழந்தைகள் அதிகம் பெற்றுக்கொள்ள கூடாது என்ற ஒரு விழிப்புணர்வையும் பாக்யராஜ் சார் சொல்லி இருப்பார். அதுபோல இந்த படத்திலும் ஒரு கணவன் மனைவி அவர்களுக்குள் இருக்கும் ஊடல், காதல் என எல்லா விஷயங்களும் காட்டப்பட்டு இருக்கிறது. அந்த பேட்டியில் வனிதா விஜயகுமார் பேசியிருக்கிறார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications