என் அம்மா அப்போவே சொன்னாங்க! பீட்டர் பால் மரணத்திற்கு வனிதா இரங்கல்.. ஆனால் ஒன்றை நோட் செய்தீர்களா?
சென்னை: என் அம்மா அப்பவே சொல்லியுள்ளார் என தொடங்கி இறுதியாக நீங்கள் எங்கிருந்தாலும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என பீட்டர் பாலின் மரணத்திற்கு வனிதா விஜயகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகை மஞ்சுளா- விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவர் சிறிய வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். முதல் படமான சந்திரலேகாவில் விஜய்யுடன் ஜோடி போட்ட அவர் பின்னர் ராஜ்கிரணின் மாணிக்கம் படத்தில் நடித்துள்ளார்.

பின்னர் விரல் விட்டு எண்ணக் கூடிய படங்களில் மட்டுமே நடித்துள்ள வனிதா விஜயகுமாருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இதையடுத்து நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்தின் மூலம் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தனர்.
இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக ஆகாஷை வனிதா பிரிந்தார். பின்னர் மகளை இவர் வைத்துக் கொண்டு மகன் ஸ்ரீஹரி தந்தையுடன் வசித்து வருகிறார். சில நேரங்களில் தாத்தாவுடனும் அவர் இருப்பது வழக்கம். இந்த நிலையில் விஜயகுமாருக்கும் வனிதாவுக்கும் இடையே நடந்த சொத்து தகராறு குறித்து இந்த நாடறியும். வனிதா என் மகளே இல்லை என மஞ்சுளாவும் விஜயகுமாரும் பிரஸ்மீட் கொடுத்தனர்.
பின்னர் தனது மகனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என விஜயகுமாரிடம் விமான நிலையத்தில் வனிதா தகராறு செய்தது எல்லாமே அப்பட்டமாக நடந்தது. இதனால் அவரை குடும்பத்தினர் ஒதுக்கி வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் வனிதா.
ஆனால் அந்த வாழ்க்கையிலும் புயல் வீசத் தொடங்கிவிட்டது. இதனால் அந்த திருமணத்தையும் செல்லாததாக்கிவிட்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். தாயுடன்தான் அந்த மகள் வசித்து வருகிறார். இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டருடன் காதல் வயப்பட்ட வனிதா, திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே அந்த காதலும் கசந்துவிட்டது. இப்படியே பல தோல்விகளை சந்தித்ததாலும் தனது குழந்தைகளுக்காக வனிதா எதிர்நீச்சல் போட்டு பெண்களுக்கே ஒரு ரோல் மாடலாக இருந்து வருகிறார்.

அவரது தனிப்பட்ட வாழ்க்கைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒரு தாயாக அவர் தனது குழந்தைகளை கரை சேர்க்க என்ன பாடுபட்டு வருகிறார் என்பதைத்தான் பலர் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது முறையாக கிறிஸ்துவ முறைப்படி வனிதா திருமணம் செய்து கொண்டார். ஆனால் விவாகரத்து செய்யாத ஒருவரை வனிதா திருமணம் செய்து கொண்டார் என பெரும் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக கோர்ட், கேஸ் என இழுத்தது. இந்த வாழ்க்கையும் ஓராண்டுக்கு கூட நிலைக்கவில்லை.
கோவா போன இடத்தில் குடி, சிகரெட் என இருந்ததால் அவரை வீட்டை விட்டே வெளியேற்றிவிட்டார் வனிதா. இந்த நிலையில் கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வந்த பீட்டர் பால் திடீரென நேற்றைய தினம் மரணமடைந்துவிட்டார். தனது முன்னாள் கணவருக்காக அவர் இரங்கல் தெரிவிப்பாரா என நெட்டிசன்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் ஒரு வழியாக பீட்டர் பாலின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் எனது அம்மா ஒரு விஷயத்தை சொல்வார். நீயே உனக்கு உதவினால்தான் கடவுளும் உனக்கு உதவுவார். இந்த பாடத்தை எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டும். முக்கியமான முடிவெடுக்க வேண்டிய நேரங்களில் எல்லாருமே அவரவர் பாதையை தேர்வு செய்கிறார்கள். நீங்கள் (பீட்டர் பால்) சந்தித்த துயரங்களுடன் போராடி தற்போது அமைதியை அடைந்திருப்பீர்கள் என நிச்சயம் நம்புகிறேன்.
நீங்கள் இந்த உலகத்தை விட்டு சென்றதற்காக வருத்தப்படும் அதே நேரத்தில் நீங்கள் இப்போது சிறந்த அமைதியான இடத்தில் இருப்பீர்கள் என தெரியும். எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள் என வனிதா அந்த இரங்கல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். வனிதாவை சமூகவலைதளவாசிகள் பாராட்டி வருகிறார்கள். மூன்றாவது திருமணத்தால் உங்களுக்கு எந்த பலனும் கிடைக்காவிட்டாலும் ஒரு மனித உயிர் என்ற மனிதாபிமான அடிப்படையில் இரங்கல் தெரிவித்துள்ளீர்கள். நீங்கள் கிரேட் என தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த போஸ்ட்டில் வனிதா ஒரு இடத்தில் கூட பீட்டர் பால் என்ற பெயரை குறிப்பிடவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications