எனக்கு மீண்டும் காதல் வரலாம்.. அதுக்கு பயப்படுற ஆள் நான் இல்லை.. திருப்பதியில் அலறவிட்ட நடிகை வனிதா

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: கடவுளின் கிருபையால் மீண்டும் காதல் வரலாம் என்றும் அதற்கெல்லாம் பயப்படுகிற ஆள் நான் இல்லை என்றும் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

வனிதா விஜயகுமார் சர்ச்சைகளின் நாயகி. ஆனாலும் தைரியமான பெண்மணி. இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு தனது வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களை எதிர் நீச்சல் போட்டு அதில் வெற்றியும் கண்டு வருகிறார். கணவனை பிரிந்து வாழும் பெண்களுக்கு தைரியம் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் வனிதா விஜயகுமார் நிச்சயமாக நல்ல உதாரணம் என்றே சொல்லலாம். எந்த விஷயமாக இருந்தாலும் அதை தைரியத்துடன் சந்திக்கிறார்.

Vanitha Vijayakumar in Thirupathi says that she may fell in love with gods grace

அவர் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்கிறார். எல்லாவற்றையும் விட கர்மா மீது அதிக நம்பிக்கை கொண்டவர். Karma is the bommerang என அடிக்கடி உச்சரிப்பார். இவர் அறியாத வயதில் சில படங்களில் நடித்திருந்தார். என்னதான் விஜய்யின் ஹீரோயினாக இருந்தாலும் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

சமையல் திறமை: இதையடுத்து தனது குடும்ப பிரச்சினை, சொத்து பிரச்சினை என கொஞ்சம் காலம் ஒதுங்கி இருந்த வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்த வனிதா விஜயகுமார், குக் வித் கோமாளி மூலம் அவருடைய சமையல் திறமையை வெளியுலகிற்கு கொண்டு வந்தார். முதல் சீசனில் வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டார்.

யூடியூப் சேனல்: இதையடுத்து விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சமையல் கலையை விரிவுப்படுத்த ஒரு யூடியூப் சேனலை தொடங்கினார். பின்னர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இவர் சதா குடித்துக் கொண்டே இருப்பதால் அவரை விட்டு வனிதா பிரிந்ததாகவும் தகவல்கள் வந்தன. ஆனால் பீட்டர் பால் இறந்த நிலையில் வனிதாவின் கணவர் என நிறைய பேர் சொன்னதால் ஒரு பெரிய அறிக்கையை வனிதா வெளியிட்டிருந்தார்.

சட்டபடி திருமணம் இல்லை: அதில் அவர் எனது கணவரும் இல்லை நான் அவருடைய மனைவியும் இல்லை . நாங்கள் சட்டபடி திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தெலுங்கில் மல்லி பெல்லி எனும் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் அப்படியே நடிகர் நரேஷின் வாழ்க்கை அனுபவம் என சொல்லப்படுகிறது. நரேஷ் தனது மனைவி ரம்யா இருக்க நடிகை பவித்ரா லோகேஷுடன் காதலில் இருந்தார்.

உண்மையில் நடந்தது என்ன: இருவரும் மைசூரில் சுற்றித் திரிந்தனர். அப்போது ஓட்டல் அறையில் தங்கியிருந்த போது மனைவி ரம்யாவிடம் நரேஷும் பவித்ராவும் சிக்கினர். போலீஸார் தலையிட்டு இருவரையும் வெளியே அனுப்பி வைத்தனர். அப்போது நரேஷ் ரம்யாவை வெறுப்பேற்றினார். பதிலுக்கு கோபமடைந்த ரம்யா செருப்பால் அடிக்க பாய்ந்தார். இத்தனைக்கு பிறகும் நரேஷ் பவித்ராவை திருமணம் செய்து கொண்டார்.

நரேஷ் ஹீரோ: இந்த கதைதான் மல்லி பெல்லி என சொல்லப்படுகிறது. இதில் நரேஷ், பவித்ரா, வனிதா விஜயகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் ரம்யா கேரக்டரில் வனிதா நடிக்கிறார். இந்த நிலையில் சில படங்களிலும் பிஸியாக நடித்து வரும் வனிதா விஜயகுமார் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றிருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்தார்.

வரவேற்பு: வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் சினிமாவில் என்னுடைய இரண்டாவது இன்னிங்சிற்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. அம்மா இறந்ததற்கு பிறகு திருப்பதிக்கு வர முடியவில்லை. இந்த தெலுங்கு படம் மல்லி பெல்லி சக்சஸ் ஆக வேண்டும் என வேண்டிக் கொண்டேன். அதனால் இங்கு வந்துள்ளேன்.

Vanitha Vijayakumar in Thirupathi says that she may fell in love with gods grace

பாக்கியம்: பெண்களை மையப்படுத்தி நிறைய படங்கள் வருகின்றன. எனக்கு நல்ல நல்ல கேரக்டர்கள் கிடைத்துள்ளன. அடுத்து அநீதி படம் வெளியாகவுள்ளது. இது என் அம்மா, கடவுளின் ஆசி என்றுதான் சொல்ல வேண்டும். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் எடுக்கும் காலத்தில் எனது ரீஎன்ட்ரி உள்ளதால் அதை பாக்கியமாக கருதுகிறேன். அது போன்ற கேரக்டர்கள் எனக்கு அமைகிறது.

தயங்க மாட்டேன்: மல்லி பெல்லி என்றால் திருமணம் என்று அர்த்தம். சினிமாவில் திருமணம் செய்து கொண்டீர்கள். நிஜத்தில் எப்போது என நிறைய பேர் கேட்கிறார்கள். கடவுளின் கிருபையால் காதல் வந்தால் பார்க்கலாம். அதற்கெல்லாம் பயப்படுகிற ஆளோ தயங்குற ஆளோ நான் கிடையாது. இவ்வாறு வனிதா விஜயகுமார் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+