வனிதாவின் நெஞ்சோரத்தில் புசுபுசு... என்ன எல்லாமே ஒரே கலரா இருக்கு.. !
சென்னை: இதுதான் என்னுடைய மகன் என நாய்க்குட்டியை மடியில் போட்டு கையில் போனை நோண்டியபடி நச்சுன்னு ஒரு போட்டோ போட்டுள்ளார் C.
மடியிலும், மார்பிலும் தவழ்ந்து கொண்டிருக்கும் அந்த நாய்க்குட்டி புசுபுசுன்னு பார்க்கவே அழகா இருக்கு. இதனால் ரசிகர்களும் வனிதாவை வாழ்த்திக் கொண்டுள்ளனர்.
மகள்களை வைத்துள்ள வனிதா தனது மகனாக இந்த நாய்க்குட்டியை அறிமுகப்படுத்தியிருப்பதால், இந்த போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக மாறியுள்ளது.

கவலையே இல்லை
உலகமே தன்னை எதிர்த்தாலும் அதை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் அசால்டாக எதிர்வரும் நெகட்டிவ் கமெண்டுகளையும் இவரைப் பற்றி குறை கூறுபவர்களையும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையில் கவனத்தைச் செலுத்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் வனிதாவிற்க்கு ரசிகர்களை தாண்டியும் இவரை ட்ரோல் செய்யும் நெகட்டிவ் ஹேட்டர்ஸ்கள்தான் அதிகமாக இருக்கின்றனர்.

சர்ச்சைதான் வாழ்க்கையே
பொதுவாக சின்னத்திரை நடிகையாக இருந்தாலும் சரி சினிமா நடிகையாக இருந்தாலும் சரி பிரபலங்கள் என்று ஆகிவிட்டால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் பிரபலமாகி விடும். அதுபோலத்தான் இவர் சினிமா முதல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பிஸியாக இருப்பதால் இவருடைய ஒவ்வொரு செயலும் ரசிகர்களின் மத்தியில் அடிக்கடி சலசலப்பை ஏற்படுத்தி விடும் .

என்ன செய்தாலும் பிரபலம்
அது இவருடைய திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி குடும்ப பிரச்சனையாக இருந்தாலும் சரி பலருக்கும் தெரியும் வகையில் பிரபலமாகி விடும். அதனாலேயே இவர் டிவிக்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி வைரல் ஆகி விடுவார். சும்மாவே ஒரு பிரபலம் தும்மினால் கூட அது ஒரு செய்தியாக மாறிவிடும் காலகட்டத்தில் இவர் எடுக்கும் அடாவடி முடிவுகள் பலருடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் காரணமாக ஆகிவிடுகிறது.

நல்ல திறமைக்காரர்
ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் என்னுடைய வேலையில் நான் பிஸியாக இருக்கிறேன் என இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார். அதிலும் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் இவருடைய இன்னொரு முகமும் ரசிகர்களுக்கு தெரிய ஆரம்பித்தது .

கோபம் இருக்குமிடத்தில் குணம்
இதுவரைக்கும் இவரை கோபக்காரர் என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து இவருக்குள் இப்படி ஒரு திறமையா என அசந்துபோய் இருந்தனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு கிடைத்த ஆதரவினை பார்த்துதான் இவர் யூடியூப் சேனல் ஒன்றினை ஓபன் செய்து அதில் சமையல் நிகழ்ச்சிகளை செய்து வருகிறார் .இதுவும் இவர் எதிர்பார்த்ததை விடவும் வைரலாக மாறிவிட்டது .அதனால் தற்போது இவர் பிஸியாக இருக்கிறார் .

நாயுடன் கொஞ்சல்
அதுவும் இல்லாமல் அடிக்கடி விஜய் டிவியில் நிகழ்ச்சிகளில் தலை காட்டிக் கொண்டிருக்கும் இவர் தற்போது வீட்டில் செல்ல நாய்க்குட்டி உடன் கொஞ்சி விளையாடி இருக்கிறார். வெள்ளை உடையில் இவருடைய வெள்ளை நிற நாய் குட்டியை மடியில் போட்டிருப்பதை பார்த்து நெட்டிசன்கள் வகைவகையாக கலாய்த்து வருகின்றனர் .என்ன தான் கலாய்த்தாலும் கண்டுகொள்ளாத இவர் இந்த நாய்க்குட்டி தான் என்னுடைய மகன் என்று கூறியுள்ளார்.

மடியில் கிடந்த நாய்க்குட்டி
அத்தோடு நில்லாமல் இது கடவுள் மகன் என்றும் வனிதா உணர்ச்சிவசப்பட்டுள்ளார் .ஆனால் என்னுடைய சகோதரிக்கு இது ரஸ்புடின் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனை பார்த்ததும் இவரின் ரசிகர்கள் மடியில் இருக்கும் புசுபுசு நாய்க்குட்டி ரொம்ப அழகாக இருக்கிறது என்று வர்ணித்தும் சிலர் கலாய்த்தும் வருகின்றனர். சும்மா சொல்லக் கூடாது, வனிதா உண்மையிலேயே பெரிய பாசக்காரப் பெண்மணிதான்.












Click it and Unblock the Notifications