OTT App: மேஜிக் சமையல் ..வனிதா விஜயகுமார் யூடியூப் சானல்!
சென்னை: வனிதா விஜயகுமார் தனது பெயரிலேயே சமையல் யூடியூப் சானல் ஆரம்பித்து இருக்கார். இப்போது இந்த சானலில் சமையல் செய்து காண்பித்து வருகிறார். எடுத்த எடுப்பிலேயே இவரது சானலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
வனிதா தாய்லாந்தில் சமையல் கலை படிப்பில் பட்டம் வாங்கி இருக்கிறார். இவரது சமையல் ஏதோ மேஜிக் செய்வது போல இருக்கும். கடைசியில் ருசியில் பிரமாதமாக தந்து அசத்தி விடுவார்.
விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி, இவரது சமையல் கலைக்கு நல்லதொரு சான்றாக இருந்தது. இந்த போட்டியில் டைட்டில் வின்னர் வனிதா விஜய குமார்தான்.

நல்ல வரவேற்பு
வனிதா விஜயகுமார் சானல் ஆரம்பித்த உடனேயே 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்ஸ் என்று அசத்தலாக ஆரம்பித்து இருக்கிறது.விதம் விதமான சமையல் இந்த யூடியூப் சானல் மூலம் செய்து காண்பித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பித்து இன்றுவரை இந்த லாக்டவுனில் சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கிறது இவரது சானல்.

பொருளாதார நெருக்கடி
விஜய் குமார் ஹீரோ வாய்ப்பு இல்லாமல், வில்லனாக நடிக்க ஆரம்பித்து இருந்த சமயம், தங்களது குடும்பம் கடுமையான பொருளாதார கஷ்டத்தில் இருந்தது என்றும், அப்போது குடும்பமாக அமேரிக்கா சென்று விட்டோம் என்றும் வனிதா விஜயகுமார் ஒரு நேர்காணலில் கூறி இருக்கிறார்.

அமெரிக்காவில் ஹோட்டேல்
அமெரிக்காவில் தங்கள் குடும்பம் அம்மாவின் தலைமையில் ஒரு ஹோட்டேல் நடத்தியது என்றும், அம்மாவின் ஆலோசனையில் சமையல் இருக்கும்.. அப்போது அம்மாவும் சமைக்க வேண்டியது முக்கிய பணியாக இருந்தது என்றும் சொல்லி இருக்கார். இப்படி ரொம்ப கஷ்டப்பட்ட காலத்தில் அம்மா செய்த பணியை மகள் வனிதாவும் செய்ய ஆரம்பித்து இருக்கார்.

திறமைசாலி வனிதா
வனிதா விஜயகுமார் சமையலில் நல்ல திறமைசாலி. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் மேஜிக் போல விதம் விதமான டிஷ் செய்து, நடுவர்களை அசத்தியவர். என்னதான் கோமாளிகள் தொல்லை தந்தாலும், கண்ணும் கருத்துமாக இருந்து சமைத்து முடிப்பார். இப்படிப்பட்ட திறமைகள் நிறைந்த வனிதா இப்போது ஓடிடி களத்திலும் கலக்கி வருகிறார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications