அந்த 6, 7 பேர் தான் அப்படி இருக்காங்க! ஊருக்குத்தான் உபதேசம்! நானும் கஷ்டப்படுறேன்! வனிதா ஆதங்கம்
சென்னை: நடிகை வனிதா எழுதி இயக்கிய நடித்த மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் பிரமோஷனில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வனிதா சமீபத்தில் தன்னுடைய குடும்பத்தை பற்றி பேசிய பேட்டி தான் வைரலாகி வருகிறது. அதில் தன்னுடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் தன்னிடம் பேசிக் கொண்டிருப்பதாகவும் ஒரு ஆறு, ஏழு பேர் மற்றும் தன்னுடன் பேசவில்லை என்றும் வனிதா வருத்தமாக பேசியிருந்தார்.
சர்ச்சைக்கு பெயர் வாங்கிய நடிகை வனிதா விஜயகுமார் பேசும் பல விஷயங்கள் இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தும் அதுபோல்தான் இப்போது அவர் குடும்பத்தை பற்றி வெளிப்படையாக பேசிய பேட்டியும் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை வனிதா நடிகர் விஜயகுமாரின் மகள் தான் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனாலும் வனிதாவின் குடும்ப விஷயங்கள் தான் திறந்த புத்தகமாக இருக்கிறது.

வனிதா குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கதாநாயகியாக சந்திரலேகா திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகி இருந்தார். அவருடைய முதல் திருமண வாழ்க்கை விரைவில் விவாகரத்தில் முடிய அடுத்தடுத்து சில திறைமுகங்களை செய்து அதுவும் விவாகரத்தில் முடிந்துவிட்டது.
இப்போது சிங்கிளாக இருக்கும் வனிதா தன்னுடைய மகள் தயாரிப்பில் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்தும் இருக்கிறார். இந்த திரைப்படம் வரும் ஜூலை 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்காக பிரமோஷனில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வனிதா சமீபத்தில் பேசிய பேட்டியில் என்னுடைய சொந்தக்காரங்க எல்லோரும் என்கூட பேசிட்டு தான் இருக்காங்க ஆறு ஏழு பேர் தான் ஓவர் ஆக்சன் பண்ணிட்டு சுத்திட்டு இருக்காங்க, ஊருக்கெல்லாம் போய் உபதேசம் பண்ணுறாங்க நீங்க அப்படி இருக்கீங்களா இப்படி பண்ணுங்க என்றெல்லாம் சொல்லுவாங்க.
ஆனா நீங்க அதை ஃபாலோ பண்ணுங்க என்று பேசி இருந்தார். அதோடு வருமான ரீதியாக நான் இன்னும் அன்றாடம் காட்சி தான். சின்ன வயசுல இருந்தே பணம் காசு எல்லாம் பாத்தாச்சு. அதனால சொத்தெல்லாம் எனக்கு பெரிய விஷயமா படல என்று அந்த பேட்டியில் வனிதா பேசியிருந்தார்.
-
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
"குடும்ப வாழ்க்கை” மொத்த சர்ச்சைகளுக்கும் போல்டாக முற்றுப்புள்ளி வைத்த நடிகை சுகன்யா.. பாராட்டும் ரசிகர்கள் -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
திரிஷா பிரண்ட் நடிகை சார்மியோட மட்டும் ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்காதீங்க! எச்சரித்த விஜய் சேதுபதி! பின்னணி காரணம் -
"29 வயசுல உங்களுக்கு இந்த ஃபீலிங் வந்திருக்கா? Netflix-ல் டிரெண்டாகும் ‘29’ படம் ஏன் இளைஞர்களின் மனசை கலக்குது!" -
மன்னிப்பு கேட்டும் ஓயாத சர்ச்சை... ரவி மோகனுக்கு என்ன ஆச்சு? நீதிமன்றத்துக்கு தெரியாதா? பிரபலம் கேள்வி -
100ஐ தொடாமல் போன சூப்பர் குட் பிலிம்ஸ் RB சௌத்ரி.. காற்றில் கரைந்த ரியல் ஜென்டில்மேனின் கடைசி ஆசை -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications