எங்க அப்பா சிறந்தவர்! அருண் விஜயும் இப்படித்தான்! என் எல்லா விவாகரத்துக்கு காரணம் இவங்க தான்!- வனிதா
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி ஒன்றில், தன்னுடைய அப்பா விஜயகுமார் தான் உலகத்திலேயே சிறந்த அப்பா என்றும், தன்னுடைய அப்பாவை போலத்தான் அண்ணன் அருண் விஜய்யும் சிறந்தவர் என்று கூறியிருக்கிறார். அதோடு தன்னுடைய எல்லா விவாகரத்துக்கும் என்ன காரணம் என்பது பற்றியும் பேசி இருக்கிறார்.
வனிதா பேட்டியில் பேசுகையில், பெண்களால் ஆண்களை விட மிகவும் எளிதாக ஒருவரை மறக்கவும் முடியும், மன்னிக்கவும் முடியும். என் குழந்தை பருவத்தில் என்னுடைய அப்பா தான் இருப்பதிலேயே சிறந்த அப்பா என்று நான் நினைத்தேன். அது மட்டுமல்லாமல் அவர் தான் உலகில் சிறந்த கணவர் என்று என்னால் சொல்ல முடியும்.

என்னுடைய அப்பாவுக்கு இரண்டு மனைவிகள், இது சாதாரண குடும்ப அமைப்பைக் காட்டிலும் மிகவும் சிக்கலானதாக இருக்கும். ஒரு மனைவியை வைத்திருந்தாலே ஆண்கள் மனைவியை சமாளிக்க மிகவும் போராடிவரும் நிலையில் என்னுடைய அப்பா ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடத்தியது எல்லாம் மிகவும் சாதாரண விஷயம் அல்ல.
என் அம்மா என் அப்பாவிற்கு இரண்டாவது மனைவி இவரை என் அப்பாவுடன் சேர்ந்து அவருடைய முதல் மனைவியும் ஏற்றுக்கொண்டார். அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் ஒரே குடும்பமாய் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவது இப்போது வரை நினைத்து பார்க்க கூட முடியாத ஒன்று. ஆனால் அப்படி இவர்கள் ஒற்றுமையாக இருக்க முக்கிய காரணம் என் அப்பா இருவரையும் சரிசமமாக நடத்துவது தான்.

பெண்களுக்கு சில விஷயங்களை கையாள தெரியாமல் போகும்போது தான் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும். பெண்களால் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய முடியும். உதாரணத்துக்கு சொல்லணும்னா ஒரு பெண் வீட்டையும் பார்த்துக்கொண்டு வேலையும் பார்த்துக்கொண்டு வண்டியையும் ஓட்ட முடியும். அதே நேரத்தில் வண்டி ஓட்டும் போது ஏதாவது ஆக்சிடென்ட் ஆகிவிட்டால் கூட அதையும் அந்த பெண்ணால் சமாளிக்க முடியும்.
அந்த நேரத்தில் வரும் போனையும் அவர்களால் மேனேஜ் செய்ய முடியும். ஆனால் ஆண்களால் ஒரே நேரத்தில் இத்தனை வேலைகளையும் செய்ய முடியுமா என்றால் பல ஆண்களால் செய்ய முடியவில்லை. ஆனால் ஒரு சில ஆண்கள் எல்லா விஷயத்திலும் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். என்னுடைய அப்பாவும் அப்படித்தான்.
அவர் அவருடைய இரண்டு மனைவிகளையும் கவனித்துக் கொள்வார். பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வார், எங்களுடைய பிள்ளைகளையும் மேனேஜ் செய்ய முடியும். பொதுவா சொல்லணும் என்றால் என்னுடைய அப்பா ஒரு சோம்பேறி என்று தான் சொல்ல வேண்டும். வீட்டில் பைப் சரி இல்லை என்றால் அதற்காக ஒரு பிளம்மரை கூட கூப்பிட மாட்டார், அவரே அதை சரி செய்து விடுவார்.

என்னுடைய அப்பாவை போல தான் அருண் விஜய் அண்ணாவும். இவர்களை பார்த்ததால் ஆண்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று ஒரு மனநிலை எனக்குள் இருக்கிறது. ஆனால் என்னுடைய திருமண வாழ்க்கையில் வந்த நபர்கள் அப்படி இல்லை என்பதால் எனக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.
என்னுடைய அப்பாவைப் போல இருப்பார்கள் என்று நினைத்தது நடக்காததால் தான் என்னுடைய திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது என்று அந்த பேட்டியில் வனிதா பேசியிருக்கிறார். வனிதாவிற்கும் அவருடைய அப்பாவிற்கும் குடும்ப பிரச்சனை பல வருடங்களாக இருந்து வருகிறது. ஆனாலும் தன்னுடைய தந்தையின் மீது தனக்கு இருக்கும் பாசம், மரியாதையை அந்த பேட்டியில் வனிதா தெரியப்படுத்தி இருப்பதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications