சின்ன வயசில் இருந்தே அந்த வீட்டில் உரிமை இருக்கு! மீண்டும் தகராறில் இறங்கினாரா வனிதா விஜயகுமார்?
சென்னை: சின்ன வயதில் நான் அந்த வீட்டிற்கு நிறைய முறை போயிருக்கிறேன், எனக்கு உரிமை இருக்கு. ஜோவிகாவை பார்த்ததும் அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார் என வனிதா விஜயகுமார் யாரை சொல்கிறார் தெரியுமா?
விஜயகுமார்- மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவர் ஒரு ஆண், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஆண் குழந்தை ஸ்ரீஹரி, வனிதாவின் முதல் கணவர் ஆகாஷுடன் வளர்ந்து வருகிறார். அது போல் மகள்கள் ஜோவிகா, ஜெயினிகா ஆகியோர் வனிதாவுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

இதில் ஜோவிகாவும் ஸ்ரீஹரியும் ஆகாஷுக்கும், ஜெயினிகா ஆந்திரா தொழிலதிபதி ஆனந்தராஜுக்கும் பிறந்தவர்கள். தற்போது வனிதா இருவரையும் விவாகரத்து செய்துவிட்டு தனியே வசித்து வருகிறார்.
வனிதா குறித்து ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இந்த காலத்தில் ஒரு ஆண் துணை இல்லாமல் இரு குழந்தைகளை வளர்ப்பது என்பது பெரிய விஷயம். எதையும் தைரியமாக சந்திக்கும் திறன் இவருக்கு உண்டு.
இவர் நடிகை, இவரது குடும்ப பெரிய பணக்கார குடும்பம் என்ற போதிலும் வனிதா, பிக்பாஸுக்கு வந்த போது பெரிய அளவில் இல்லை. எப்போது பிக்பாஸுக்கு வந்தாரோ அதன் பிறகு குக் வித் கோமாளி, பிறகு ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் வாய்ப்பு என கிடைத்தது.
மேலும் சில சினிமாக்களையும் அவர் இயக்கியிருந்தார். பிக்பாஸ் டைட்டிலை அவர் வெல்லாவிட்டாலும் தமிழகத்தில் லைம்லைட்டிற்கு வந்தார். அவருடைய மகள் ஜோவிகாவும் திரைத்துறையில் சாதிக்க விரும்பினார்.
இவரும் பிக்பாஸில் கலந்து கொண்டு ஜெயிக்காவிட்டாலும் அந்த வீட்டில் 70 பிளஸ் நாட்கள் இருந்ததற்கான ஊதியமாக 12 -15 லட்சம் வரை அவருக்கு கிடைத்தது. அதை வைத்து "மிஸ்ஸஸ் அன்ட் மிஸ்டர்" எனும் படத்தை தயாரித்தார். இந்த படத்தை வனிதா இயக்கியும் நடித்துள்ளார்.
இந்த படமும் நன்றாக போகவில்லை. இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்டர் வெளியீட்டிற்கு ஆசிர்வாதம் வாங்க ரஜினிகாந்த் வீட்டிற்கு வனிதாவும் ஜோவிகாவும் சென்றிருந்தனர். இதுகுறித்து வனிதா கூறுகையில், "நான் முதலில் லதா ஆன்ட்டியிடம் பேசினேன். அவர்தான் என்னை வீட்டுக்கு வா என அழைத்தார்.
அங்கு சென்ற போது ரஜினி அங்கிள் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார். லதா ஆன்ட்டிதான் என்னிடமும் ஜோவிகாவிடமும் நிறைய விஷயங்களை பேசினார். படம் குறித்து விசாரித்தார்.
அங்கிளை பார்க்க வேண்டும் என கேட்டேன். படத்தை பற்றி அவரிடம் கூறி ஆசி வாங்க வேண்டும் என்றேன். உடனே லதா ஆன்ட்டி அடுத்த நாள் வீட்டிற்கு வர சொன்னார். அப்போது நான் போனதும் எனக்கு எப்போதும் போல் வரவேற்பு இருந்தது.
எனக்கு அது வேறு வீடு போல் தெரியவில்லை, ஜோவிகாவை வளர்ந்த பிறகு இப்போதுதான் ரஜினி அங்கிள் பார்த்தார். அவளை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டார். எனவே அவர் வீட்டில் எனக்கு உரிமை இருக்கிறது என்றும் வனிதா விஜயகுமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications