"டக்"குன்னு மாறிய வனிதா.. "வாவ்" போட்ட ரசிகர்கள்.. அசந்து போன அம்பிகா!
சென்னை: வனிதா விஜயக்குமார் செய்த கெட்டப் மாற்றத்தைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
பழம் பெரும் நடிகை அம்பிகாவே ஓடி வந்து, அசத்திட்ட என்று வனிதாவைப் பாராட்டித் தள்ளியுள்ளார்.
இந்த பாராட்டுக்களைப் பார்த்து வனிதா உச்சி குளிர்ந்து போயிருக்கிறாராம். அப்படி ஒரு அசத்தலான கெட்டப் சேஞ்ச் ஆக இது மாறியுள்ளது.

தோற்ற மாற்றம்
இதுவரைக்கும் பல கெட்டப் போட்டுக் கொண்டிருந்த வனிதா தற்போது மகிஷாசுரமர்தினி கெட்டப்பில் கெத்து காட்டியிருக்கும் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்ததும் அசந்து போன பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். நடிகைகள் என்றாலே விதவிதமாக மேக்கப் போட்டுக்கொண்டு கேரக்டருக்கு தகுந்த மாதிரி தான் மாறிவிடுவார்கள்.

அசத்தலான மேக்கப்
அனைவரையும் தூக்கி சாப்பிடுகிற வகையில் தற்போது வனிதா வெளியிட்ட போட்டோவைப் பார்த்ததும் ஷாக் ஆனது ரசிகர்கள்தான். யார் என்று கண்டுபிடிக்க முடியாத வகையில் முகமெல்லாம் கரியை பூசிய படி முகத்தில் ஆக்ரோஷத்தை கூட்டி கோபத்தில் கொதிக்கும் கண்களோடு பார்ப்பவர்களை பார்வையாலே மிரட்டியிருக்கிறார் .இந்த மாதிரி ஒரு கெட்டப்பில் இவரை எதிர்பார்க்காத ரசிகர்கள் பலர் போட்டோவை பார்த்ததும் தூக்கம் வராமல் தவித்து வருகிறார்களாம்.

ஒப்பன் பேச்சு
பலர் மனதிற்குள் ஒன்று வெளியில் ஒன்றாய் பேசிக்கொண்டிருக்கும்போது மனதில் பட்டதை படபடவென பேசி விட்டு அடுத்தவர்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்துவருகிறார் இவர் . தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்காக ஒரு ஃபோட்டோஷூட்டை எடுத்து இருக்கிறார் .இவர் போட்டோவை வெளியிட்டதும் ஷாக்கான ரசிகர்கள் யார் இது என்று கேட்டு வந்தனர். அதுவும் இல்லாமல் பல ரசிகர்கள் தொடர்ந்து இந்த போட்டோவை பார்த்து இவரை கலாய்த்து வந்தனர் .

ரசிகர்கள் குஷி
ஆனால் எந்த ஒரு நடிகைக்கும் கைத்தட்டல் தான் பெரிய பரிசாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இவரும் இவருடைய மேக்கப்பை புகழ்ந்து நடிகைகள் சிலர் தங்களுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டதும் உச்சி குளிர்ந்து போய் அவர்களுக்கு நன்றி சொல்லி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரீபோஸ்ட் போட்டிருக்கிறார். வனிதா என்றாலே பலர் எதற்கு நமக்கு வம்பு என்று அந்தப் பக்கம் போவதை விட இந்தப் பக்கமாக போய்விடுவேமே என ஒதுங்கிப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் தற்போதைய இவருடைய லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அம்பிகாவே பாராட்டிட்டார்
பழம் பெரும் நடிகை அம்பிகாவே ஓடி வந்து சூப்பர் கெட்டப், உடம்பையும் நல்லா குறைச்சிருக்கியே என்று வாயார வனிதாவைப் பாராட்டித் தள்ளியுள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன் மாதிரி பேமஸாகப் போகிறாய் என்றும் வாழ்த்தியுள்ளார் அம்பிகா. இதுவரைக்கும் அதிகமாக கிசுகிசுக்களில் மாட்டிக்கொண்டு அடிக்கடி வைரலாகி வந்த இவர் தற்போது கொல்கத்தா காளி கெட்டப்பில் வைரலாக வலம் வருகிறார் .

பிக் பாஸ் ஜோடிகள்
ஏற்கனவே இவருடைய பெயர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மாறி விட்டது. இவருக்காகவும் பல ரசிகர்கள் உருவாகி விட்ட நிலையில் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இவருடைய ஆட்டத்தை பார்த்து வேற லெவல் அக்கா ரீ என்ரியில் பட்டைய கிளப்பும் உங்களுக்கு எங்களுடைய ஆதரவு என்றும் பலர் ஹாட்டின்களை பறக்கவிட்டும் வருகின்றனர்.

ரேகாவும் ஹேப்பிதான்
இவருடைய போட்டோவை பார்த்ததும் இவருடைய மேக்கப்பில் மெய் மறந்து போன நடிகை அம்பிகா மட்டும் அல்லாமல், நடிகை ரேகாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகழ்ந்து தள்ளி இருக்கின்றனர் .அதுவுமில்லாமல் இந்த மேக்கப் ஆர்டிஸ்ட்டுக்கும் வாழ்த்துக்களை கூறியிருக்கின்றனர் . அந்த அளவிற்கு தத்ரூபமாக வனிதாவை கொல்கத்தா காளி கெட்டப்பில் காட்டி இருக்கும் அவருக்கு மட்டுமல்லாமல் வனிதாவுக்கும் செம சந்தோசம் தான் போங்க.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications