3 முறை மஞ்சள் காமாலை வந்தும் அம்மா குடிப்பதை நிறுத்தலை! மஞ்சுளா குறித்து வனிதா விஜயகுமார் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மஞ்சள் காமாலை வந்தும் அம்மா குடியை விடவில்லை என நடிகை வனிதா விஜயகுமார் பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி உள்ளிட்டோருடன் நடித்தவர் மஞ்சுளா. இவர் ஒரு படத்தில் விஜயகுமாருடன் நடித்த போது காதல்வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். விஜயகுமாருக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி முத்துக்கண்ணு, மகன் அருண் விஜய், மகள்கள் கவிதா, அனிதா ஆகியோர் இருந்தனர்.

Vanitha Vijayakumar says that manjula not stop drinking despite she had jaundice

இந்த நிலையில் மஞ்சுளாவுக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இதில் வனிதா விஜயகுமாரை தவிர்த்து மற்றவர்கள் எல்லாம் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். வனிதாவுக்கும் தாய் தந்தை மஞ்சுளா விஜயகுமாருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.

இதனால் அவ்வப்போது இவர்கள் மூவருக்கும் இடையே பிரச்சினை நடந்து வரும். ஒரு கட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த மஞ்சுளா, விஜயகுமார், வனிதா தங்கள் மகளே இல்லை என அறிவித்தனர். இப்படியே வனிதாவுக்கு தாய் தந்தையருடனும் தனது மகன் ஸ்ரீஹரியை அவர்களிடம் இருந்து மீட்பது தொடர்பாகவும் சொத்து பத்து தொடர்பாகவும் சண்டை வந்து கொண்டே இருக்கும்.

ஒரு கட்டத்தில் வனிதாவுடன் அவருடன் பிறந்தவர்கள் எல்லாம் பேசாமல் போய்விட்டனர். இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு மஞ்சுளா படுக்கையில் இருந்து கீழே விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். அவர் சிறுநீரக செயலிழப்பு மற்றும் வயிற்றில் ரத்தம் கட்டியிருந்ததால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த இறப்பின் போது கூட தாய்க்கு மூத்த மகளாக வனிதா செய்ய வேண்டிய சடங்குகளை கூட மற்றவர்கள் செய்ய விடவில்லை. இதையடுத்து அஞ்சலி செலுத்த வந்த நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் வனிதாவை அழைத்து சில சடங்குகளை செய்ய வைத்தனர். இந்த நிலையில் ஷகிலாவுடனான பேட்டியின் போது வனிதா விஜயகுமார் சில தகவல்களை வெளியிட்டார்.

அதில் விமான நிலையத்தில் விஜயகுமாருடன் ஏற்பட்ட சண்டைக்கு பிறகு தன்னை தனது தாய் மஞ்சுளா ஒரு நாள் வீட்டிற்கு அழைத்ததாகவும் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறியதாகவும் வனிதா கூறியிருந்தார். மேலும் தனது தாயின் குடிப்பழக்கம் குறித்து வனிதா பேசியிருந்த நிலையில் 3 முறை அம்மாவுக்கு மஞ்சள் காமாலை வந்தும் குடிப்பழக்கத்தை நிறுத்தவில்லை.

மருத்துவமனையில் அம்மா சிகிச்சைக்கு இருந்த போது இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானியை அழைத்து சொத்து பத்திரங்களிலும் தனது மகள் வனிதாவின் பெயரை சேர்க்க வேண்டும். தான் பல உண்மைகளை சொல்ல வேண்டும், அதை வீடியோவாக எடு என கூறினார். ஆனால் நான் அதை செய்யவில்லை. என் தந்தையிடமும் வனிதாவை விட்டுவிடாதீர் என கேட்டுக் கொண்டார் என வனிதா தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+