என் சிஸ்டர்ஸ் எப்பவுமே சூப்பர் தான்.. எங்க அம்மா சொன்ன பாடம்.. என் மகளிடம் இதைத்தான் சொன்னேன்! வனிதா உருக்கம்
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் கதை எழுதி, இயக்கி நடித்த மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அப்போது தன்னுடைய சகோதரிகள் மற்றும் அண்ணன் அருண் விஜய் குறித்து பேசி இருந்தார். இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை வனிதா பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகள் என்பது பலருக்கும் தெரிந்த செய்திதான். வனிதா சினிமாவில் சந்திரலேகா திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே பல திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். ஆனால் சில வருடங்கள் கழித்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் பெரிய அளவில் பேசப்பட்டது.

விஜயகுமார் முத்துகண்ணு என்பவரை திருமணம் செய்திருந்தார். அவருக்கு அனிதா, கவிதா, அருண் விஜய் என்ற மூன்று குழந்தைகள் இருந்தனர். ஆனால் முத்துக்கண்ணுவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு விஜயகுமாரின் இரண்டு மனைவிகளும் ஒரே வீட்டில் தான் வசித்து வந்தனர்.
மஞ்சுளா மற்றும் விஜயகுமாருக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீ தேவி என்ற மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர். ஆனால் மஞ்சுளாவின் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டது விஜயகுமாரின் முதல் மனைவி என்று பல இடங்களில் வனிதா உட்பட ஸ்ரீதேவி, பிரீத்தா அனைவரும் சொல்லி இருக்கின்றனர். விஜயகுமாரின் எல்லா குழந்தைகளும் ஒற்றுமையாக இருக்கும் நிலையில் வனிதா மட்டும் அவருடைய குடும்ப பிரச்சனையால் தனியாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் விஜயகுமாரின் எந்த குடும்ப நிகழ்ச்சிகளிலும் வனிதா கலந்து கொள்வது கிடையாது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் வனிதா பேசும் போது தன்னுடைய சகோதரிகள் மற்றும் சகோதரர் குறித்து பேசி இருந்தார். அதில் அவர் பேசும்போது, என்னுடைய அம்மா உடை அலங்காரத்தில் மிகவும் கவனமாக இருக்கணும்னு சொல்லுவாங்க. எங்க போனாலும் ட்ரெஸ்ஸிங் சரியா இருந்தா நமக்குன்னு ஒரு தன்னம்பிக்கை இருக்குன்னு சொல்லுவாங்க. ஆனா அதை என்னுடைய சிஸ்டர்ஸ் கடைபிடிச்சிட்டு வராங்க.
எங்க வீட்டில் என்னுடைய சிஸ்டர்ஸ் மற்றும் அருண் விஜய் அண்ணா எல்லாருமே உடை தேர்வு செய்வதில் கவனமாகவும், அழகாகவும் பண்ணுவாங்க. அது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதே போல பண்ணனும் என்று நான் என்னுடைய மகள்களிடம் சொல்லுவேன். என்னுடைய அம்மா சொல்லிக் கொடுத்தது எப்போதும் என்னுடைய தங்கச்சியான ஸ்ரீ பாப்பாவும் சரி, பிரீத்தாவும் சரி பாலோ பண்ணிட்டு வராங்க என தன்னுடைய குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் வனிதா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications