வெறும் 86 ரூபாய் தான்.. எனக்கு இப்போ பாதை கிடைச்சிருக்கு! சந்தோஷமாக பேசிய வனிதா! பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் எழுதி நடித்த மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் கடந்த வாரத்தில் திரையரங்குகளில் ரிலீசானது. ஆனால் இந்த திரைப்படத்திற்க்கு எதிர்பார்த்த அளவிற்கு வசூல் கிடைக்காததால் இப்போது வனிதா அந்த திரைப்படத்தை தன்னுடைய யூடியூப் சேனலில் வெளியிடுவதற்காக முடிவெடுத்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களிடம் மகிழ்ச்சியான விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.
நடிகை வனிதா விஜயகுமார் 30 வருடங்களுக்கு பிறகு கதாநாயகியாக மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா தான் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் கதை எழுதி இயக்கியது வனிதா தான். இந்த திரைப்படத்திற்காக கடந்த சில மாதங்களாகவே ப்ரோமோஷனில் ஈடுபட்டிருந்த வனிதா படத்தின் போஸ்டரை கூட வித்யாசமாக வெளியிட்டிருந்தார்.

அதாவது வனிதாவின் முன்னாள் காதலனான ராபர்ட்டுடன் திருமணம் செய்து கொள்வது போன்று புகைப்படங்களை வனிதா வெளியிட்டதும் இவர்கள் இருவருக்கும் நிஜத்தில் திருமணமா? என்று செய்திகள் பரவி வந்தது. ஆனால் அது போஸ்டர் என்பது பின்னர் தான் வனிதா அறிவித்திருந்தார். இந்த திரைப்படத்திற்காக பாங்காக்கில் அதிக நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது.
ஒரு வழியாக படம் முடிந்து ரிலீசுக்கு வந்தது. ஆனால் ரிலீஸ் அன்று இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட ராத்திரி சிவராத்திரி பாடலுக்காக இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னுடைய பாடலை வனிதா அனுமதி இன்றி படத்தில் பயன்படுத்துகிறார் அதனால் அந்த பாடலை நீக்க வேண்டும் அல்லது எனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது குறித்து வனிதா தன்னுடைய ஆதங்கத்தையும் தெரிவித்து இருந்தார்.
நான் வனிதா இளையராஜாவின் காபி ரைட் பிரச்சனை பற்றி பேசும் போது, நான் ஏற்கனவே இளையராஜாவிடம் நேரில் சென்று அனுமதி வாங்கி இருக்கிறேன். ஆனால் அவர் எதற்காக இப்படி வழக்கு தொடர்ந்தார் என்று எனக்கு தெரியவில்லை, இளையராஜா கடவுள் மாதிரி அந்த கடவுளே நம்மிடம் கோபம் கொண்டால் என்ன செய்வது என்று பேசி இருந்தார்.
அதோடு இளையராஜா வீட்டிற்கு நான் மருமகளா போய் இருக்க வேண்டும். அந்த குடும்பத்தில் உள்ள ஒரு பையன் என்னிடம் என்னை லவ் பண்ணுறியா? எங்க அப்பாவை லவ் பண்ணுறியான்னு கேட்டான். நான் உங்க அப்பாவை தான் லவ் பண்ணுறேன்னு சொன்னேன் அந்த அளவிற்கு அவர் மீது பாசம் வைத்திருந்தேன். ஆனால் இப்போது நடப்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்று கண் கலங்கி பேசி இருந்தார். இந்த பேட்டிகள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வந்தது.
ஆனாலும் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை. ஒரு வாரத்திற்குள் இந்த திரைப்படம் தியேட்டரில் இருந்து வெளியேறுகிறது. இதனால் வனிதா இப்போது புதிய முடிவெடுத்திருக்கிறார். அதாவது இந்த படத்தை ஓடிடி அனுப்பாமல் தன்னுடைய youtube சேனலில் வெளியிடுவதாக முடிவெடுத்து இருக்கிறார். அதிலும் மெம்பராக இணையும் நபர்கள் மட்டுமே அந்த படத்தை பார்க்கும்படி வைத்து இருக்கிறாராம். இந்த மெம்பர்ஷிப் பெறுவதற்கு எண்பத்தி ஆறு (₹ 86) ரூபாய் கட்டண சேவை செலுத்த வேண்டுமாம்.
ஒரு முறை செலுத்தி விட்டால் வனிதாவின் படங்கள் எல்லாவற்றையும் அதிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்று வனிதா கூறி இருக்கிறார். இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட லைவ் வீடியோவில் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்திருந்தார். நான் இந்த படத்தை உருவாக்குவதற்காக அதிகமான கடன் வாங்கி இருக்கிறேன், என்னை நம்பி பல குடும்பங்கள் இருக்கிறது நீங்கள் எனக்காக பல நேரங்களில் உதவி செய்திருக்கிறீர்கள் துணையாக இருந்திருக்கிறீர்கள். நீங்கள் இப்போது இந்த சின்ன தொகையை கட்டி மெம்பராக மாறிவிட்டீர்கள் என்றால் எனக்கு பெரிய உதவியாக இருக்கும்.
என்னை போல பலர் திரையரங்குகளில் படத்தை வெளியிட முடியாமல் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இது ஒரு முயற்சியை கொடுக்கும். நல்ல படத்தை எடுத்து இருந்தாலும் பல நேரங்களில் மக்களிடம் அந்த படம் சென்றடையாமல் பலர் பணத்தை எல்லாம் செலவழித்து வேதனையோடு இருப்பவர்களுக்கு இது ஒரு மாற்று ஏற்பாடு என்றும் பேசியிருந்தார். இப்போது இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக அதிகமானோர் மெம்பர்ஷிப் வாங்கி இருக்கிறார்கள். மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை வனிதாவின் யூடியூப் பக்கத்தில் வெளியாக இருக்கிறது.
இந்த மெம்பர்ஷிப் தொகை தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு தான் குறைவான தொகையாக இருக்கிறதாம். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு 200 ரூபாய்க்கு மேலே வருகிறதாம். ஆனால் அவ்வளவு பெரிய தொகையை அனைவராலும் செலுத்த முடியாது என்பதால் அதை குறைப்பதற்கான ஏற்பாடுகளை வனிதா செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications