எல்லாமே ஒரிஜினல் கண்டென்ட்.. தாம்பத்தியம் தப்பா? அவங்க அப்படி! ஓப்பன் சேலஞ்ச் விடுறேன்.. வனிதா ஆதங்கம்
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தை நாளை தன்னுடைய யூடியூப் சேனல் பக்கத்தில் வெளியிட இருக்கிறார். இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட லைவ் வீடியோவில் தன்னுடைய திரைப்படத்தை பற்றி ஆதங்கத்தோடு பேசி இருந்தார் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை வனிதா விஜயகுமார் மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படத்தின் கதையை எழுதி இயக்கி கதாநாயகியாக நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான வனிதா விஜயகுமார் நடிகர் விஜய் நடித்த சந்திரலேகா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த காலகட்டத்தில் சில திரைப்படங்களில் அவர் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

ஆனால் வனிதாவின் திருமண வாழ்க்கை அடுத்தடுத்து அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அதனால் சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் சின்னத்திரை மற்றும் சினிமாவை நோக்கி அடியெடுத்து வைத்திருந்தார். இவருக்கு பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலத்தை கொடுத்து இருந்தது. இந்த நிலையில் முப்பது வருடங்களுக்கு பிறகு இப்போது தன்னுடைய மகள் தயாரிப்பில் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் வனிதா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படம் கடந்த வாரத்தில் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் அந்த படம் பெரிய அளவில் வசூல் பெறவில்லை. இதனால் இந்த திரைப்படத்தை வனிதா தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட இருக்கிறார். ஆனால் அதை எல்லாராலும் பார்க்க முடியாது. 86 ரூபாய் கட்டணம் செலுத்தி மெம்பர் ஆகிறவர்கள் மட்டும் அந்தப் படத்தை பார்க்க முடியும். அந்த படம் நாளை வெள்ளிக்கிழமை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வனிதா வெளியிட இருக்கிறார்.
இந்த நிலையில் தான் நேற்று இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்திருந்தார். அப்போது ஒரு ரசிகர் உங்களுடைய படத்திற்கு சொன்ன ரிவ்யூவை கவனித்தீர்களா? என்று கேட்க, அதற்கு வனிதா நான் எல்லா ரிவ்யூவும் பார்க்கவில்லை ஒரே ஒருவருடைய ரிவ்யூ மட்டும் பார்த்தேன். அவர் இந்த படத்தை பிட்டு படம் என்று சொல்லி இருந்தார். இது பிட்டு படம் மாதிரியா இருக்கிறது? ஒரு கணவன் மனைவிக்குள் இருக்கும் தாம்பத்திய வாழ்க்கையை தான் இந்த படத்தில் காட்டி இருக்கிறோம். அப்படி பார்த்தால் தாம்பத்திய வாழ்க்கை தப்பா?
இந்த படத்தில் எந்த இடத்திலும் வல்கராக காட்சிகளையும் வைக்கவில்லை. இந்த படம் முழுக்க முழுக்க ஒரிஜினல் கண்டன்ட். இந்த படத்தில் வரும் காட்சிகள் அந்த படத்தில் பார்த்தது போல இருக்கிறது, இந்த படத்தில் பார்த்தது போல இருக்கிறது என்று நீங்கள் கண்டுபிடித்தால் தாராளமா சொல்லுங்க. நான் ஓபன் சேலஞ்ச் விடுறேன். படத்தை பார்க்காமலே சில youtuber அப்படி தப்பா பேசுறாங்க. படத்தை பார்த்தவங்க பலர் படத்தை பற்றியும் அதில் உள்ள காட்சிகள் குறித்தும் பேசிக்கிட்டு இருக்கிறாங்க. அதனால ப்ளீஸ் ஒருமுறையாவது அந்த படத்தை பாருங்க பார்த்துவிட்டு உங்களுடைய குறைகளை சொல்லுங்க என்று வனிதா தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications