நடிகை வனிதாவின் மகனுக்கு ஜோடியாகும் பிரபல இயக்குனரின் மகள்.. புது கூட்டணியில் இத்தனை சுவாரசியங்களா?
சென்னை: நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீ ஹரி பிரபல இயக்குனர் பிரபு சாலமன் மகளுடன் புது திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதற்குப் பிறகு விஜய் ஸ்ரீஹரி அவருடைய தந்தையோடு தான் இருந்து வருகிறார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பே அவர் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வந்தது. அது குறித்து அப்டேட் தான் இப்போது மீண்டும் வெளியாகி இருக்கிறது. அதாவது வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீஹரியுடன் இயக்குனர் பிரபு சாலமன் மகள் ஹஷேல் ஷைனி இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய லாடம், மைனா, சாட்டை, கும்கி, கயல், தொடரி போன்ற பல படங்கள் பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதிலும் பிரபு சாலமன் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் அதிகமாக புது முகங்களாக இருந்தாலும் மக்கள் மனதில் அந்த படத்தின் கதை மூலமாக இடம் பிடித்து விடுகிறார்கள். அந்த வரிசையில் இப்போது தன்னுடைய சொந்த மகள் மற்றும் வனிதாவின் மகனை அறிமுகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.
பிரபு சாலமன் மகள் ஹஷேல் ஷைனி சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் நிலையில் தற்போது நடிகையாக மாற இருக்கிறார். அதோடு விஜய் ஸ்ரீஹரி சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக வெளிநாடு சென்று சில விசேஷ பயிற்சிகளையும் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார். ஆனாலும் விஜய் ஸ்ரீஹரிக்கு சில வருடங்களாகவே வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த நிலையில் அதையெல்லாம் அவருடைய தந்தை ஆகாஷ் தான் தடுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
தற்போது விஜய் ஸ்ரீஹரிக்கு 25 வயது ஆகிறது. ஆனால் அவர் அறிமுகமாகும் திரைப்படம் பெரிய பேனர் அல்லது முன்னணி இயக்குனர் மூலமாகத்தான் அறிமுகமாக வேண்டும் என்று ஆகாஷ் நினைத்ததாகவும், தற்போது அது கூடி வந்ததால் அதற்கு ஆகாஷ் சரி என்று சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த இரண்டு பிரபலங்களின் வாரிசுகள் இந்த படத்தில் இணைய உள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

அதே நேரத்தில் கும்கி திரைப்படம் போன்று தான் இந்த படமும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கும்கி படத்தில் யானைக்கு பதிலாக இந்த படத்தில் சிங்கம் முக்கிய கேரக்டரில் இருக்கும் என்றும், அதற்காக சிங்கத்திருக்கும் விஜய் ஸ்ரீஹரிக்கும் இடையே சில பயிற்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கதாநாயகியாக நடித்து வந்த வனிதாவிற்கு சில வருடங்களாகவே முக்கிய கேரக்டரில் மட்டும் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இப்போது ராபர்ட் மாஸ்டரோடு சேர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை வனிதாவும் நடித்து இருக்கிறார். அதுபோல அவருடைய மூத்த மகள் ஜோவிகாவும் நடிப்பு, இயக்கம் என்று பிசியாக இருக்கும் நிலையில் வனிதாவின் மகன் அவரை விட்டு பிரிந்து இருந்தாலும் அவரும் கதாநாயகனாக போகிறார். ஆனாலும் இவர்களில் யாருடைய திரைப்படம் முதலில் வெளியாக போகிறது? யாருடைய படம் மக்களை கவர போகிறது? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications