காதலில் ஏமாற்றம்.. பிறப்புறுப்பை வெட்டுனா ஆணுக்கும் பயம் வரும்! வரலட்சுமி சரத்குமார் ஆதங்கம்
சென்னை: வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் பேசிய பேட்டி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் காதலில் ஆண், பெண் ஏமாற்றம் குறித்து வெளிப்படையாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அதுபோல பாலியல் தொந்தரவுகளில் ஈடுபடுபவர்களுக்கு எப்படி தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி "போடா போடி" திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் பல வாரிசுகளின் குழந்தைகள் பெற்றோரைப் போலவே தொடர்ந்து ஜொலிக்க முடியாத சூழ்நிலை தான் இருக்கிறது. அந்த வரிசையில் தான் வரலட்சுமியும் இருக்கிறார். ஆரம்பத்தில் போடா போடி திரைப்படம் வரலட்சுமிக்கு நல்ல பிரபலத்தை கொடுத்தது. தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் தான் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிறகு நிலையில் திடீரென்று தமிழ் சினிமாவில் படங்களை குறைத்துக் கொண்டார்.

டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவர்
மற்ற மொழிகளில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வந்தார். அதற்கு காரணம் தனக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக நல்ல கேரக்டருடைய வாய்ப்புகள் வரவில்லை அதனால் தான் நான் நடிக்கவில்லை என்று வரலட்சுமி விளக்கம் கொடுத்து இருந்தார். அதுபோல ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இப்போது கலந்து கொண்டிருக்கிறார்.
காதல் பிரச்சனை
அதில் வரலட்சுமியிடம் காதலில் பெண்களை ஆண்கள் ஏமாற்றி விடுகிறார்கள் அது பற்றி உங்கள் கருத்து என்னவென்று கேட்கப்பட்டது. அதற்கு வரலட்சுமி பதில் அளிக்கையில், பொதுவாக காதலில் ஆண்கள் மட்டும் தான் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்று இல்லை. சில பெண்களும் ஆண்களை ஏமாற்றி விடுகிறார்கள். இதில் யார் ஏமாற்றினாலும் தவறுதான் என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்பவர்களுக்கு எப்படி தண்டனை கொடுக்க வேண்டும் என்று கேள்வி கேட்கப்பட்டது.

வரலட்சுமியின் ஆதங்கம்
அதற்கு வரலட்சுமி பதில் அளிக்கையில், மற்ற நாடுகளில் ஒரு பொருளை திருடினாலே அவர்களுக்கு உடலில் ஒரு பாகத்தை வெட்டி தண்டனை கொடுக்கிறார்கள். ஆனால் நம்முடைய இந்தியாவில் அதுபோன்ற தண்டனை இல்லை. அப்படி இருந்தால் இதுபோன்ற கொடியவர்களுக்கு பிறப்புறுப்பை அறுத்து கொடூரமாக தண்டனை கொடுக்க வேண்டும் அப்படி பார்த்தால் தான் அதை பார்க்கும் மற்றவர்களுக்கும் பயம் வரும் என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
பாலியல் தொல்லை
வரலட்சுமி குழந்தை பருவத்தில் தனக்கும் பலரால் பாலியல் சீண்டல் நடந்திருக்கிறது என்று பல இடங்களில் தைரியமாக பேசி இருக்கிறார். தன்னுடைய பெற்றோர் தன்னுடைய சின்ன வயதிலேயே பிரிந்து விட்டதால் அவர்கள் வேலைக்கு செல்லும் நேரங்களில் தான் உறவினர்களின் வீட்டில் தங்க வைக்கப்பட்டு இருந்தார். அந்த நேரத்தில் சிலர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அப்போது கூட அது எனக்கு பாலியல் தொந்தரவு என்றே தெரியாது அதற்கு பிறகு தான் சில வருடங்கள் கழித்து எனக்கு புரிந்தது என்று வரலட்சுமி பேசியிருக்கிறார். இந்த நிலையில் பாலியல் தொந்தரவு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று வரலட்சுமி சொன்னதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications