‘நீ நான் காதல் சீரியல்’ நடிகையின் புதிய சீரியல் அறிவிப்பு.. அதுவும் எந்த சேனல் தெரியுமா? அந்த நடிகர் தான் ஹீரோ
சென்னை: விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த நீ நான் காதல் சீரியலில் கதாநாயகியாக அபி கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த நடிகை வர்ஷினி சுரேஷ் புதிய சீரியலில் கமிட் ஆகி இருக்கிறார். அதுவும் எந்த சீரியல்? அவருக்கு ஜோடி யார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக ஒரு சில சீரியல் நடிகைகள் முதல் சீரியலிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பிடித்து விடுகிறார்கள். அதனால் சீரியல் பிக்கப்ஆக தொடங்கியதும் சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக மாறிவிடுகிறார்கள். இதனால் சோசியல் மீடியாவில் அவர்களுக்கு அதிகமான பாலோவர்ஸ் கிடைக்கிறது. சீரியல் பிரபலத்தை விட சோசியல் மீடியா பிரபலம் அவர்களுக்கு ஒரு தனி அடையாளத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.

நடிகை வர்ஷினியின் புது சீரியல்
அதுபோல ஒருவர்தான் நடிகை வர்ஷினி சுரேஷ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நீ நான் காதல் சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இளம் ரசிகர்கள் அதிக பேரை கவர்ந்த இந்த சீரியலில் கதாநாயகனாக நடிகர் பிரேம் ஜாக்கப் நடித்திருந்தார். இவர் லப்பர் பந்து திரைப்படத்தில் நடிகர் தினேஷுக்கு ஜோடியாக நடித்த நடிகையின் கணவர்தான்.
நீ நான் காதல் சீரியல் நடிகை
வர்ஷினி அபியாகவும் பிரேம் ராகவ் கேரக்டரிலும் நடித்திருந்தனர். இந்த சீரியல் சமீபத்தில் முடிவடைந்ததும் இந்த சீரியலில் ரசிகர்கள் மிகவும் பீல் பண்ணி வந்தனர். இந்த நிலையில் வர்ஷினி நடிக்கும் புதிய சீரியல் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. வர்ஷினிக்கு ஏற்கனவே ஹார்ட் பீட் வெப் சீரிஸிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. இதில் சோனியா என்ற கேரக்டரில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்.
புது சீரியல்
இந்த நிலையில் தான் ஸ்டார்மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகுவா ஓ மகுவா தொடரின் மறு உருவாக்கம் தான் புதியதாக எடுக்கப்பட இருக்கிறது. அதில் நடிகை வர்ஷினி சுரேஷ் நடிக்கிறார். இந்த சீரியலில் விஜய் டிவியில் தான் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் வர்ஷினிக்கு ஜோடியாக நடிகர் அவினாஷ் நடிக்க இருக்கிறார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் அளவிற்கு கதை இருப்பதாக கூறப்படுகிறது.
கயல் சீரியல் நடிகர்
விஜய் டிவியில் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாக இருக்கிறது. நடிகர் அவினாஷ் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியல் மூலமாகத்தான் சின்ன திரையில் அறிமுகமானார். அதற்கு முன்பு விஜேவாக சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். அழகு சீரியலுக்குப் பிறகு சன் டிவியில் கயல் சீரியலிலும் கயலுக்கு தம்பியாக நடித்துக் கொண்டிருந்தார். பிறகு அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

சீரியல் நடிகர்
விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் தான் அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான வீட்டுக்கு வீடு வாசல் படி சீரியலில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலிலும் கண்ணன் கேரக்டரில் நடித்திருந்தார். இப்போது அந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து இவருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
புது ஜோடி
அதுபோல ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் அவினாஷ் கலந்து கொண்டிருக்கிறார். அதுபோல அவினாஷ் வேறு யாரும் இல்லை நடிகை அக்ஷிதாவின் சகோதரர் அக்ஷிதா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். அண்ணனும் தங்கையும் கூட பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இப்போது வர்ஷினி மற்றும் அவினாஷ் நடிப்பில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications