சிலம்பரசனை சந்தித்த வருண்.. திடீர் மீட்டிங் காரணம்... திகைத்துப்போன ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த வருண் சிலம்பரசனை சந்தித்த காரணம் என்னவென்று ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.
Recommended Video
மாஸான இருவரின் கூட்டணியை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

சிம்புவை சந்தித்த வருண்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த வருண் பல்வேறு திறை பிரபலங்களை சந்தித்து கொண்டிருக்கின்றார். நேற்று ஆரியை சந்தித்த நிலையில் இன்று தற்போது சிலம்பரசனை சந்தித்துள்ளார். அதற்கான காரணம் என்னவென்று ரசிகர்கள் ஆர்வத்தோடு தேடி வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து புது திரைப்படத்தில் நடிக்கிறார்களா? ? அல்லது வேறு ஏதேனும் காரணமா?? என்று பல்வேறு கருத்துகள் ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் சிலம்பரசனை சந்தித்த வருண், சிம்புவை பற்றி பேசியிருப்பது அவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

வாரிசு நடிகர்
சென்னையில் பிரபல கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் நிறுவனரான ஐசரி வேலனின் பேரனான வருண் தமிழ் சினிமாவில் சில சூப்பர் ஹிட் படங்களில் சிறு சிறு கேரக்டரில் நடித்திருந்தாலும், பெரிய அளவு அவரால் சினிமாவில் சோபிக்க முடியவில்லை. கதாநாயகனாக நடித்தால் மட்டுமே ஒரு லெவலுக்கு செல்ல முடியும் என்று முடிவு செய்த வருண், ஒருவழியாக தற்பொழுது பிரபல தயாரிப்பாளராக இருக்கிற தனது மாமாவான ஐசரி கணேசனின் தயாரிப்பில் கௌதம் மேனனை இயக்குனராக வைத்து "ஜோஸ்வா இமைபோல் காக்க"என்ற திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆனார்.

கேப்ஷனில் கலக்கிய வருண்
என்னதான் திரை பிரபலமாக இருந்தாலும் சரி ஒரு சிலருக்கு அடுத்த பிரபலங்கள் ஒரு சிலரை நன்றாக பிடித்து இருக்கும். அந்த வகையில் வருணுக்கு பிடித்த ஒரு பிரபலமாக சிம்பு இருக்கின்றாராம். அதனால்தான் அவரை சந்தித்த தருணத்தை மறக்க முடியாது என்று இருவரும் அருகருகே இருந்தாலும் எங்கேயோ பார்த்தபடி ஸ்டைலாக போஸ் கொடுத்து போட்டோக்களை எடுத்து இருக்கின்றனர். மகிழ்ச்சியான உரையாடல்கள்...அழகான நீங்கள் பிடித்த அண்ணா...என்று சிம்புவை டேக் செய்து உங்கள் நுண்ணறிவு பெறுவது எப்போதும்போல லவ் யூ என்று கூறியுள்ளார்.

காரணம் இதுதானா?
சிம்பு கதாநாயகனாக நடிக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் எடுத்துள்ளதால் இந்த திரைப்படத்திற்கான சந்திப்புதானா என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்திற்காக சிம்பு உடலை குறைத்து வேற லெவலில் ரெடியாக இருக்கிறார். அதனால் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் வருண் திடீர் சந்திப்பு ரசிகர்களுக்கு மேலும் பல யூகங்களை கிளப்பியுள்ளது. சில நேரங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து நடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் பலர் கூறி வருகின்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications