மனைவியின் மறைவு.. அடையாளம் தெரியாத வகையில் மாறிய வேதாளம் பட வில்லன்.. மகனை பார்த்ததும் எமோஷனல்
சென்னை: பாலிவுட் நடிகரான ராகுல் தேவ்வின் மனைவி பல வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து போன பிறகு தன்னுடைய மகனை தனி ஆளாக தானே வளர்த்து வருகிறேன் என்று சில வருடங்கள் முன்பு கண்ணீரோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசி இருந்தார். இந்த நிலையில் தன்னுடைய மகனை விமான நிலையத்தில் சந்தித்த ராகுல் தேவ் கண்கலங்கிய வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் ராகுல் தேவ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கும் முன்பு இந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தார். தமிழில் அவர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான நரசிம்மா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பரசுராம், மழை, ஆதவன், ஜெய்ஹிந்த் 2, வேதாளம் என பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ராகுல் தேவ் வேதாளம் திரைப்படத்தில் கம்பீரமாக நடித்திருந்த நிலையில் இப்போது உடல் எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. ராகுல் தேவ் 1998 ஆம் ஆண்டு ரீனா என்பவரை திருமணம் செய்திருந்தார். அதற்கு அடுத்த வருடமே அவருக்கு சித்தார்த் என்ற மகன் பிறந்திருக்கிறார். 11 வருடங்களாக இந்த தம்பதி சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.
அந்த நேரத்தில் தான் அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. அதாவது ரீனாவிற்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருக்கிறார். பலகட்ட சிகிச்சையை செய்தும் ரீனாவை காப்பாற்ற முடியவில்லை. 2009 ஆம் ஆண்டு அவர் இறந்து போய்விட்டார். அதற்கு பிறகு தன்னுடைய மகன் சித்தார்த்தை நான் தான் வளர்த்து வருகிறேன் என்று சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராகுல் தேவ் கண்ணீரோடு பேசி இருந்தது அந்த நேரத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது தனியாக ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது எளிதான காரியம் கிடையாது. பொதுவாக ஒரு குழந்தை வளர்ப்பு விஷயத்தில் தாய்க்கு தான் அதிகமான பொறுமை இருக்கும். அந்த தாய் இல்லாத நேரத்தில் தந்தையால் அந்த பொறுமையை கொண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்தாலும் பல நேரங்களில் அது நடக்காமல் போய்விடுகிறது. நான் என்னுடைய மகனை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகும்போது கூட அங்கு அதிகமான அம்மாக்கள் தான் இருப்பார்கள்.

ஒரு சில ஆண்கள் வந்திருந்தாலும் அவர்களும் அவர்களுடைய மனைவியோடு இருப்பார்கள். அப்போது எனக்கு பார்க்கும்போதே வருத்தமாக இருக்கும். என்னுடைய மகனுக்கு நான் அம்மாவாகவும் அப்பாவாகவும் இருக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறேன். ஆனால் பல நேரங்களில் அதில் தோற்றுப் போய் விடுகிறேன் என்று குழந்தை வளர்ப்பில் தான் உணர்ந்த பாதுகாப்பின்மையை பற்றி அவர் பேசியது பலரையும் பீல் பண்ண வைத்திருந்தது. இந்த நிலையில் தற்போது தன்னுடைய மகனை விமான நிலையத்தில் ராகுல் தேவ் சந்தித்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார். வயது ஆகும்போது எல்லோருடைய உடலிலும் மாற்றங்கள் வராதான் செய்யும். ஆனால் பலரையும் மிரட்டி பயப்பட வைத்த நடிகர்கள் இப்போது இப்படி மாறிவிட்டார்களே என்பது பலரும் தெரிவிக்கும் கருத்தாக இருக்கிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications