அஜித்தின் வீரம் பட யுவினாவா இது? மணக்கோலத்தில் அவரே வெளியிட்ட போட்டோ.. ஆளே மாறிட்டாங்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்து வெளியான "வீரம்" திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான யுவினாவின் புகைப்படங்கள் தான் இப்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி கொண்டு இருக்கிறது. குழந்தையாக பார்த்த யுவினா இப்போது இளம் கதாநாயகியாக மாறி இருக்கிறார். மணக்கோலத்தில் அவர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சினிமாவில் நாம் பார்க்கும் ஒரு சிலரை பல வருடங்கள் கழித்து பார்க்கும்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போய் இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடங்களும் கடக்க அனைவருடைய உடம்பில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. நாம் நன்கு பார்த்து பழகியவர்களே பல வருடங்கள் கழித்து பார்க்கும்போது இவரா அவர் என்று சொல்லும் வகையில் தான் இருக்கிறார்கள் அதேபோல சினிமாவில் நமக்கு பிடித்த ஒரு சிலரை சில வருடங்கள் கழித்து பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.

Yuvina Parthavi Ajith Kumar

வீரம் பட குழந்தை

அந்த வகையில் தான் இப்போது நடிகை யுவினாவின் புகைப்படமும் பலரையும் வியக்க வைத்திருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான வீரம் திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் தான் நாயகனாக நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருப்பார். அதுபோல சந்தானம், நாசர், தம்பி ராமையா உட்பட பலரும் நடித்திருப்பார்கள். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அண்ணன் தம்பி பாசத்தையும் அவர்களின் பந்தத்துக்கு நடுவே வரும் பிரச்சனைகளை பற்றி தான் இந்த படம் இருந்தது.

நடிகை யுவினா நடித்த படங்கள்

பாசம், காதல், அதிரடி, ஆக்ஷன், காமெடி என எல்லாம் கலந்த கலவையாக இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆபீஸ் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக யுவினா நடித்திருந்தார். வீரம் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா நடித்த மாஸ் திரைப்படம், ஸ்டாபெர்ரி திரைப்படம் போன்றவற்றில் நடித்திருந்தார். கடைசியாக நடிகர் ரவி மோகன் நடித்த சைரன் படத்திலும் நடித்திருந்தார்.

Yuvina Parthavi Ajith Kumar

யுவினாவின் போட்டோ சூட்

யுவினாவிற்கு இப்போது 16 வயதாகும் நிலையில் குமரி பெண்ணாக மணக்கோலத்தில் யுவினா எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் பலருடைய கவனத்தைப் பெற்று வருகிறது இவரை பார்க்கும் பலரும் வீரம் பட குழந்தையா இது? எவ்வளவு வளர்ந்து விட்டாரா என்று வியந்து வருகிறார்கள். வீரம் படத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் யுவினா அஜித் குமாரிடம் நீங்க யாரு? உங்க பேர் என்ன? என்று கேட்ட வீடியோக்கள் சில வருடங்களுக்கு முன்பு வைரல் ஆனது. ஆனால் இப்போது அவர் மணக்கோலத்தில் இருப்பதை பார்த்ததும் ரசிகர்கள் வாவ் சொல்லி வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+