ஒரு நாளைக்கு 32 சப்பாத்தி சாப்பிடுவேன்.. 25 கி.மீ. தூரம் ஓடுவேன்.. எதிர்நீச்சல் வேல ராமமூர்த்தி கலகல
சென்னை: ராணுவத்தில் இருந்த போது ஒரு நாளைக்கு 32 சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு 25 கி.மீ. தூரம் ஓடுவேன் என நடிகர் வேல ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வேல ராமமூர்த்தி நடிகரும் எழுத்தாளரும் ஆவார். இவர் அறிவொளி இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியிருந்தார், இவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர். இவர் குற்றப்பரம்பரை, குருதி ஆட்டம், பட்டத்து யானை உள்ளிட்ட தமிழ் நாவல்களை எழுதியுள்ளார்.

இவர் நிறைய படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். மறைந்த மாரிமுத்து நடித்த எதிர்நீச்சல் சீரியலில் அவர் நடித்த ஆதி குணசேகரன் கேரக்டரில் வேல ராமமூர்த்தி கேரக்டரில் நடித்து வருகிறார்.
இதுகுறித்து நடிகர் வேல ராமமூர்த்தி பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், நான் ராணுவத்தில் இருந்த போது 25 சாப்பாத்தி, 32 சாப்பாத்தி எல்லாம் சாப்பிட்டிருக்கேன். ஆனால் அவ்வளவையும் சாப்பிட்டுவிட்டு முகாமில் இருக்க முடியாது. தினமும் 25 கி.மீ. ஓடியிருக்கேன். அண்டா அண்டாவா கறியும் இருக்கும்.
அந்த கறியை செக் செய்து சீல் வைத்துதான் அனுப்புவார்கள். நான் 16 வயதில் ராணுவத்தில் சேர்ந்த போது 5 அடி 4 அங்குலமாக இருந்தேன். 6 மாத பயிற்சிக்கு பிறகு 5 அடி 10 அங்குலமாக வந்தேன். 6 மாதம் கழித்து ஊருக்கு வந்து நான் தெருவுக்குள் நடக்கும் போது என்னடா மாப்ள தெருவே டங்கு டங்குனு இருக்குன்னாங்க.
எங்கள் ஊரில் கடலில் இருந்து ஓலைப்பெட்டியில் பெரிய மீன்கள் வரும். அதில் எங்கள் வீட்டுக்கு என தனியாக கொடுத்து விடுவார்கள். அது போல்தான் கறியும் கொடுத்துவிடுவார்கள். பிராய்லர் கோழியே கிராமங்களில் இருக்காது. இதனால் எனக்கு நகரத்துக்கு வந்தால் எங்கே ஆட்டுக்கறியுடன் ஏதாவது கறியை கலந்துவிடுவார்களோ என பயம்.
அது போல் நாட்டுக் கோழி போல் ஒரு கோழியை வளர்ப்பார்கள், அதையும் எங்கே நகரத்தில் கொடுத்துவிடுவார்களோ என்ற பயம் இருக்கும். காலையில் எனக்கு இட்லி, ஆட்டுக்கறி, முடிந்தால் உளுந்த வடை சாப்பிட எனக்கு பிடிக்கும். சினிமா ஷூட்டிங்கின் போது எல்லா கறியும் இருக்கும், ஆனால் பிராய்லர் கோழி என்பதால் அதை தொடவே மாட்டேன். சைவத்தில் எனக்கு உருளைக் கிழங்கு பொரியல் மிகவும் பிடிக்கும் என வேல ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications