தங்கத்தில் மாலை.. புடவை மட்டும் இத்தனை லட்சமா? திருநெல்வேலியே வியந்த வேலராம மூர்த்தி வீட்டு திருமணம்
சென்னை: எழுத்தாளரும், நடிகருமான வேலராம மூர்த்தியின் பேத்தியின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் இணையத்தில் பலரையும் வாவ் சொல்ல வைத்திருக்கிறது. மணப்பெண் மற்றும் மாப்பிள்ளையின் கழுத்தில் போடப்பட்டிருந்த மாலை கூட தங்கத்தில் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அது பற்றி பார்க்கலாம்.
நவம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் இருந்தே திருமண பத்திரிகைகள் வீட்டிற்கு வந்து குவிந்து கொண்டிருக்கிறது. எந்த திருமணத்திற்கு போவது எந்த பங்க்ஷனை விடுவது என்று யோசிக்க முடியாத அளவிற்கு ஒரே முகூர்த்தத்தில் பல திருமணங்கள் வந்து விடுகிறது. இது பலருடைய அன்றாட வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்களாக இருந்தாலும் பல சினிமா பிரபலங்களும் அடுத்தடுத்து திருமணம் செய்து ரசிகர்களை வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் சில நாட்களாகவே சமூக வலைத்தளத்தில் பலரையும் வாயை பிளக்க வைத்த வீடியோ பற்றி தான் இப்போ பார்க்க போகிறோம். நாம் இதுவரைக்கும் திருமணம் என்றால் மணமக்கள் கழுத்தில் வண்ண வண்ண பூக்களால் மாலை போட்டு தான் பார்த்திருப்போம். ஆனால் திருநெல்வேலியில் ஒரு திருமணத்தில் மணப்பெண் மற்றும் மாப்பிள்ளையின் கழுத்தில் போடப்பட்டிருந்த மாலை தங்கத்தால் செய்யப்பட்டதாம்.
அதுபோல மணப்பெண் கட்டி இருந்த புடவையின் மதிப்பு 8 லட்சம் என்றும் அவர் அணிந்திருந்த பிளவுஸின் விலை மூன்று லட்சம் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மணப்பெண்ணுக்கு 300 சவர நகை போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அது போல இந்த திருமணத்தில் செஃப் மாதம்பட்டி ரங்கராஜன் தான் சமையல் செய்து அசத்தியிருக்கிறார். அதுபோல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலங்கள் கச்சேரி செய்து இருக்கிறார்கள். பொதுவாக திருமணங்கள் மண்டபத்தில் நடக்கும் அதை தான் பார்த்திருப்போம்.

ஆனால் இந்த திருமணம் நடத்த திருநெல்வேலி ட்ரேட் சென்டரில் பல லட்சம் செலவு செய்து ஒரு மண்டபம் வடிவத்தில் செட் போட்டு இருக்கிறார்கள். இந்த கல்யாணம் நடக்கும் இடத்தை அந்த பகுதி மக்கள் எல்லோரும் வியந்து பார்த்து சென்றிருக்கிறார்கள். இது திருநெல்வேலியை சேர்ந்த தொழிலதிபர் ஆர் எஸ் முருகன் வீட்டு கல்யாணம்தான். ஆனால் இதில் மணப்பெண் வேறு யாரும் இல்லை பலருக்கும் பரிச்சயமான நடிகர் வேலராமமூர்த்தியின் பேத்திதான்.
நடிகர் வேல ராமமூர்த்தி பல திரைப்படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் அவர் ஒரு எழுத்தாளர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். வெள்ளித்திரையில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் வேலராமமூர்த்தி சின்ன திரையில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சில வாரங்களுக்கு முன்பே வேலராமமூர்த்தி தன்னுடைய பேத்தியின் திருமணத்திற்காக பல பிரபலங்களுக்கு பத்திரிக்கை கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். தற்போது இணையத்தில் இந்த திருமண வீடியோக்கள் பற்றி தான் அதிகமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications