"பிக் பாஸ்ஸை தடை செய்! இல்லன்னா அரங்கத்துக்குள்ளேயே நுழைவோம்!" வேல்முருகன் கிளப்பிய அடுத்த பிரச்சனை
சென்னை: தமிழகத்தில் மிகப்பிரபலமாகி விட்ட விஜய் டி.வியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சிக்கு எதிராக, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நேரடியாகக் களமிறங்கியுள்ளார்! இந்த நிகழ்ச்சியை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர சபாநாயகரிடம் மனு கொடுத்ததோடு, நடவடிக்கைத் தவறினால் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

வேல்முருகன் பேட்டி
செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், விஜய் டி.வி, நீயா நானா போன்ற பல நல்ல நிகழ்ச்சிகளை நடத்தி வருவதற்காகப் பாராட்டுகளைத் தெரிவித்தார். ஆனாலும், பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள், தமிழ் சமூகத்தின் இளைஞர்களையும் மாணவர்களையும் சீரழிக்கிறது என்றும், இதை உடனே தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
வருமானம் மட்டும்தான் நோக்கம்
பிக் பாஸ் நிகழ்ச்சியை, 'ஸ்கிப்ரைட்' (Skip Right - இந்தியில் Skip Ad போல) என்ற பெயரில், "தமிழ் சமூகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, வருமானம் ஒன்றுதான்" என்ற நோக்கத்தில் விஜய் டி.வி நடத்துவதாகவும், இது குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கவே முடியாத வகையில் இருப்பதாகவும் வேல்முருகன் குற்றம்சாட்டினார்.
போராட்ட எச்சரிக்கை
இந்தப் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டுமென முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், "பிக்பாஸ் அரங்கத்திற்குள் நுழைவோம், விஜய் டி.வி-யை முற்றுகையிடுவோம்!" என்றும் அவர் பொதுமக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப் போவதாக எச்சரித்துள்ளார். கர்நாடகா, கேரளா போலத் தமிழ்நாட்டிலும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
உண்மையில், வேல்முருகன் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யக் கோருவதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை! 'கன்டென்ட்' என்ற பெயரில் பிக் பாஸ் வீட்டுக்குள் நடக்கும் சில சம்பவங்கள், உண்மையில் பொதுவெளியில் பேச முடியாத அளவுக்குச் செல்கிறது என்றுதான் ரசிகர்கள் மத்தியிலும் கருத்து எழுந்துள்ளது.
பப்ளிக் முத்தம்
சமீபத்தில், 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகருக்கு, அரோரா பிக் பாஸ் வீடுக்கும் சூப்பர் டீலக்ஸ் வீடுக்கும் இடையே உள்ள கண்ணாடி வழியாக முத்தம் கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரையும் முகம் சுளிக்க வைத்தது! "இது என்னடா பிக் பாஸ் வீட்டுல நடு மண்டபத்துல நடக்குற கூத்து?" என்று நெட்டிசன்களே தலையில் அடித்துக்கொண்டனர்.
காதல் என்ற பெயரில்... இந்த சீசனில் மட்டுமில்லாமல், கடந்த சீசன்களிலும், காதல், நெருக்கம் என்ற பெயரில் போட்டியாளர்கள் எல்லை மீறி நடந்துகொண்டது, தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இளம் தலைமுறையினர் இதைத்தான் பார்க்கிறார்கள் என்று வேல்முருகன் குற்றம்சாட்டுவதும் அதனால் தான் இன்று பலர் சப்போர்ட் கொடுத்து வருகிறார்கள்.
விஜய் டி.வி.யின் நோக்கம் வெறும் வருமானம் மட்டும்தானா? அல்லது தமிழ் சமூகத்தைக் கேடு விளைவிக்கும் நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்ற சமூகப் பொறுப்பு இல்லையா? - இந்த விவாதம், வேல்முருகனின் இந்த எச்சரிக்கைக்குப் பிறகு நிச்சயம் சூடு பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 'கன்டென்ட் கொடுத்தால்தான் நிகழ்ச்சியை நடத்த முடியும்' என்று விஜய் டி.வி. நினைத்தால், அதற்கான விலை இதுதான் போல!
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications