Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்பானி, நெப்போலியன் ரேஞ்சுக்கு நடக்கும் ஐசரி கணேஷ் வீட்டு கல்யாணம்.. அதிலும் இவ்வளவு ஸ்பெஷல் ஏற்பாடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேல்ஸ் யுனிவர்சிட்டியின் சேர்மன் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் பிரீத்தாவிற்கு திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறது. அதுவும் வரும் வெள்ளிக்கிழமை நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக பிரமாண்டமாக ஏற்பாடு நடந்து வருகிறதாம். கடந்த வருடத்தில் நடிகர் நெப்போலியன் மற்றும் அம்பானி மகன் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதைவிட சிறப்பாக ஐசரி கணேஷ் மகள் திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் பல சினிமா பிரபலங்கள், அரசியல் முக்கிய புள்ளிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதிலும் விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிம்பு தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி போன்ற பல பிரபலங்கள் கலந்து கொள்ளவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அரசியல் பிரபலங்களில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், தொல் திருமாவளவன் போன்றோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறதாம்.

Ishari Ganesh Vels University

பிரம்மாண்ட திருமணம்

ஐசரி கணேஷ் மகளின் ரிசப்ஷனுக்காக 30 கோடி செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இருக்கிறதாம். ஐசரி கணேஷிடம் வேலை பார்ப்பவர்களே கிட்டத்தட்ட 8000 பேருக்கு அதிகமாக இருக்கிறார்களாம். அதனால் இந்த திருமணத்தில் குறைந்தபட்சம் 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

மாலத்தீவில் திருமணம்

அதுபோல ஐசரி கணேசன் மகள் ஆசைப்பட்டதால் திருமணம் மாலத்தீவில் வைத்து நடைபெறுவதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு முக்கிய பிரபலங்கள் 250 பேர் மட்டும் மால தீவுக்கு செல்ல இருப்பதாகவும், அதற்காக தனி விமானம் அரேஞ்ச் பண்ணி இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகர் நெப்போலியன் தன்னுடைய மகன் கல்யாணத்தை ஜப்பானில் பிரம்மாண்டமாக நடத்தி வைத்திருந்தார். அமெரிக்காவிலிருந்து கப்பலில் ஜப்பானுக்கு சென்ற நெப்போலியன் தன் மகன் கல்யாணத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்களுக்காக பல சிறப்பு ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தார்.

Ishari Ganesh Vels University

ஐசரி கணேஷ் குடும்பம்

அதேபோல அம்பானியின் வீட்டு திருமணமும் பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த வரிசையில் இப்போது ஐசரி கணேஷ் தன்னுடைய மகளின் திருமணத்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுபோல ஐசரி கணேசுக்கு பிரீத்தா, குஷ்மிதா என்ற இரண்டு மகள்களும் சர்வேஷ் என்ற ஒரு மகனும் இருக்கிறார். அதில் மூத்த மகள் பிரீத்தா தான் வேல்ஸ் யுனிவர்சிட்டியோட வைஸ் பிரின்ஸ்பலாக இருக்கிறார். அதுபோல ஐசரி கணேஷுக்கு மூத்த மகள் பிரீத்தா தான் ஸ்பெஷல் என்று பல இடங்களில் சொல்லி இருக்கிறார். பிரீத்தாவும் தன்னுடைய அப்பா போல தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதுபோல சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். சமீபத்தில் கூட மகளிர் தினத்தில் பல பெண்களுக்கு விருது வழங்கி இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+