Barathi Kannamma Serial: வெண்பாவின் சித்து விளையாட்டு சித்தருக்கே தெரியலையா?
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்றும், கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு கம்மி என்றும் பொய்யான சான்றிதழ் கொடுத்து இருக்கா வெண்பா.
வெண்பாவின் இந்த சித்து விளையாட்டு தெரியாத பாரதி மனம் நொந்து கோயிலுக்கு போறான். அங்கே ஒரு சித்தர், நீ பெற்றால்தான் பிள்ளையா..? என்று அவன் மனசில் உள்ளதைக் கேட்டு பாரதியை அதிர வைக்கிறார்.
உன் மூலம் பிறக்கும் குழந்தைதான் உனக்கு வேணுமா? இல்லை யாரும் இல்லாத அனாதை குழந்தைக்கும் நீ அப்பாவாக விரும்புகிறாயா என்று கேள்வி கேட்கிறார்.

பாரதி கண்ணம்மா
விஜய்டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல், கருப்பு பெண் கதை என்று ஆரம்பித்து, இப்போது அந்த டாபிக்கை விட்டுவிட்டு கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்காது என்கிற டாபிக்குக்கு வந்துவிட்டார்கள். இரு பிள்ளைகளுக்கு ஒன்றாக கல்யாணம் ஆகியும், கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்கவில்லை என்பது மட்டும் குடும்பத்தில் பூதாகரமாக கிளம்பிக்கொண்டு இருக்கிறது. முதலில் கருப்புன்னு ஒதுக்கினீங்களே அதுக்கு ஒரு தீர்வு இன்னும் சொல்லாதது ஏன்?

வெண்பா சூழ்ச்சி
பாரதியின் மேல் ஆசைப்படும் அவனுடன் படித்த வெண்பா, பாரதிக்கு நடந்த ஒரு விபத்தை வச்சு, அவனுக்கு இனி குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று சான்றிதழ் குடுத்துடறா. விபத்துக்கு சிகிச்சை அளிக்கும்போது குழந்தை பிறக்குமா, பிறக்காதா என்று டெஸ்ட் எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி கேட்க யாரும் இல்லை,.ஒரு டாக்டராக இருந்தும் பாரதியே கூட இதை கேட்கவில்லை.

கண்ணம்மாவுக்கும் டெஸ்ட்
கண்ணம்மாவுக்கும் டெஸ்ட் எடுக்கணும்னு வெண்பா அவளை பாரதிக்கு தெரியாம அழைச்சுட்டு போறா. கண்ணம்மா புருஷனுக்கு தெரியாம வெண்பாவுடன் டெஸ்டுக்கு போகிறாளாம். இதை நம்ப முடியாமல் கதையை அமைச்சு இருக்காங்க.அவளுக்கும் குழந்தை பிறக்கும் வாய்ப்பு கம்மி என்று பொய்யான சான்றிதழ் கொடுத்துடறா வெண்பா. பாரதியின் அம்மா இந்த சான்றிதழை பார்த்துட்டு, குழந்தை பெத்துக்க குடுக்க துப்பில்லைன்னு கண்ணம்மாவை திட்டியே தீர்க்கறாங்க.

கோயிலில் சித்தர்
இந்த குழப்பத்தில்தான் பாரதி கோயிலுக்கு போறான். அப்போ அங்கே இருக்கும் சித்தார்த்தன் இப்படி கேட்கிறார். நீ உன் குழந்தைக்குத்தான் தந்தையாக விருப்பமா இல்லை அனாதை குழந்தைக்கும் தந்தையாக விருப்பமா என்று.எல்லாம் தெரிந்த சித்தராவது உனக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருக்கு. உன் மனைவிக்கும் குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருக்குன்னு அருள் வாக்கு சொல்ல மாட்டாரா? குழந்தை இல்லைன்ற குழப்பத்தில்தான் இருக்கான்னு தெரிஞ்ச சித்தருக்கு அவனுக்கு குழந்தை பெத்துக்கும் தகுதி இருக்குன்னு சொல்லாத தெரியாதா?உங்களுக்கு வசதியா சித்தரையே குழப்பி விடறீங்களே...!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications