வெங்கட்பிரபுவின் ஹாலிவுட் பாசம். ..அப்பாவை மறந்துட்டீங்களே!!??
சென்னை: வெங்கட் பிரபுவை கவர்ந்த ஹாலிவுட் நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
வெங்கட்பிரபுவின் போஸ்டர் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த டார்கெட் ஹாலிவுட்டாக தான் இருக்குமா என்று பலர் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

வெங்கட்பிரபுவின் இன்ஸ்பிரேஷன்
தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மாநாடு திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு வெற்றிகரமான இயக்குனராக மீண்டும் நிரூபித்துள்ளார் வெங்கட்பிரபு.தற்பொழுது பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி, அவர் தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன் என்று கூறியுள்ளதை நெட்டிசன்கள் ஜாலியாக கலாய்த்து வருகின்றனர்.

ஹாலிவுட் இயக்குனர்
ஹாலிவுட்டில் முக்கியமான இயக்குனராகவும், உலகத்தரம் வாய்ந்த பல படங்களை அளித்தவருமான ஸ்டீவன் ஸ்பீல்பர்கிற்கு இன்று பிறந்த நாள். 1946ஆம் ஆண்டு பிறந்த இவர் தன்னுடைய 16வது வயதில் 'ஃபயர் லைட்' என்ற முழுநீள சயின்ஸ் பிக்சன் படம் எடுக்கும் அளவிற்கு திறமை பெற்றிருந்தார். ஃபேண்டசி, ஹிஸ்டாரிக்கல், சிவில் உரிமை, பயங்கரவாதம், போன்ற அனைத்து விதமான ஜானரிலும் தரமான படங்களை இயக்கியுள்ளார். ஜுராசிக் பார்க், ஜாஸ், த க்ளோஸ் என்கவுண்டர்,இ.டி,இன்டியானா ஜோன்ஸ்,எம்பயர் ஆப் சன்ஸ், போன்ற படங்கள் இவர் இயக்கத்தில் வெளிவந்து என்றும் அவர் பெயரைச் சொல்லும் அளவிற்கு நிலைத்து நிற்கிறது.இன்னும் யாரும் எதிர்பாரா கதைக்களத்தில் பல்வேறு படைப்புகளை தன் கனவாக படைப்புகளாக உருவாக்க புதுப் புது முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார்.

வெங்கட் பிரபு கூறிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உலகின் பல்வேறு இயக்குனர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் இவருக்கு பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு பிறந்தநாள் வாழ்த்து கூறி ட்வீட் செய்துள்ளது குறித்து சில நெட்டிசன் குறும்பர்கள் ஜாலியாக இவரை கலாய்த்து வருகின்றனர். பெரும்பாலும் நம் தமிழ் இயக்குனர்கள் பாரதிராஜா, மணிரத்னம், சங்கர், போன்ற ஜாம்பவான்களை தங்களுடைய இன்ஸ்பிரேஷனாக கூறுவர். ஆனால் வெங்கட் பிரபு ஹாலிவுட் இயக்குனரை தன்னுடைய இன்ஸ்பிரேஷன் என்று கூறியுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒரு நெட்டிசன் ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுக்கிறதாலயா..!!?இல்ல ஹாலிவுட் படத்தை காப்பியடித்து எடுக்கிறதாலயா..!!?அவர் உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் என்று கேட்டுள்ளார்.

ரசிகர்களின் கேள்வி
பிரபல கலை குடும்பத்தை சேர்ந்தவரான வெங்கட்பிரபு உடைய அப்பா கங்கை அமரனே மிகப்பெரிய இயக்குனர் என்றும், அவருடைய படங்களின் தாக்கம் இன்றளவும் பல படங்களில் இருப்பதாகவும், ஆனால் அவரை இன்ஸ்பிரேஷனாக ஏன் கூறவில்லை?!என்று ஒரு ரசிகர் குண்டக்க மண்டக்க கேள்வியை எழுப்பியுள்ளார். எது எப்படியோ உலகத்தரம் வாய்ந்த படங்களை உருவாக்கி ரசிகர்களின் கற்பனைக்கு எட்டாத உலகத்தை கண்முன் திரைப்படமாக காட்டிய ஸ்டீபன் ஸ்பீல்பரக் பிறந்த நாளான இன்று இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து நாமும் அவரை நலமுடன் இருந்து இன்னும் பல படங்களை தரமாக தர வாழ்த்துவோம்.












Click it and Unblock the Notifications