பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் அடுத்த சம்பவம்.. லீக்கான வீடியோ, இப்படி ஒரு திருப்பமா? எதிர்பார்க்காத விஷயம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற அப்டேட் கொடுக்கும் வகையில் இந்த சீரியலில் செந்தில் கேரக்டரில் நடிக்கும் வெங்கட் ரங்கநாதன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சீரியலில் மேக்கிங் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த வாரம் முழுக்கவே எதிர்பாராத பல சம்பவங்கள் நடைபெற்றது. அதுபோல அரசி மற்றும் குமாரவேல் காதல் விஷயம் வீட்டிற்கு தெரிய வந்தபோது கோமதி மற்றும் பாண்டியனின் நடிப்பு ரசிகர்களையும் ஃபீல் பண்ண வைத்துவிட்டது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் அவர்களுக்கு பிடிக்காத குடும்பப் பையனை காதலிக்கும் போது என்ன மாதிரி ஒரு வருத்தமும் கஷ்டமும் ஏற்படுமோ அதை இந்த சீரியலில் எதார்த்தமாக காட்டியிருந்தார்கள்.

அழுகை காட்சிகள்
இந்த சீரியலில் கோமதி குடும்பத்தில் பலர் காதலித்து திருமணம் செய்து இருந்தாலும் குமரேசன் நல்லவன் கிடையாது என்ற காரணத்தால் தங்களுடைய மகள் காதலித்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் அழுகை மற்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். அதுபோல குமாரவேல் தான் எதற்காக அரசியை காதலித்தேன் என்ற உண்மையை குடும்பத்தினர் எல்லோரிடமும் சொல்லி இருக்கிறார்.
நடிப்பு சூப்பர்
ஏற்கனவே கோமதி மற்றும் ராஜு இரண்டு பேரையும் பாண்டியனும் பாண்டியனுடைய மகனும் காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து நம்மை அசிங்கப்படுத்தினார்கள், அதுவே அவர்களை பழி வாங்குவதற்காக தான் நான் ராஜியை காதலிப்பதாக நடித்தேன் என்று குமாரவேல் சொன்ன காரணத்தை கேட்டு அவருடைய அம்மா, சித்தி, பாட்டி எல்லோருமே அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
குமாரவேலின் உண்மை குணம்
இனி குமாரவேலுக்கு எதிராக அவர்கள் திரும்புவார்களா? அல்லது இப்போதும் பேச முடியாமல் தவித்துக் கொண்டிருக்க போகிறார்களா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதுபோல குமாரின் பெரியப்பாவும் அவர் செய்தது தப்பு என்று சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் பாண்டியன் வீட்டை விட்டு சோகமாக வெளியேறி போயிருந்தார்.
ஸ்டாலின் பகிர்ந்த வீடியோ
கொட்டும் மழையில் நனைந்தபடியே அவர் விரக்தியாக சென்று கொண்டே இருக்க, பிறகு ஒரு இடத்தில் சோகமாக படுத்து இருந்தார். பாண்டியனை காணாமல் அவருடைய மகன்கள் தெரு தெருவாக அலைந்து கொண்டிருக்கும் போது செந்தில் கண்ணில் பாண்டியன் படுவார். அதுவும் வீடு வாசல் இல்லாதவர்களோடு பாண்டியன் ரோட்டில் படுத்துருப்பதை பார்த்தது செந்தில் கதறி அழுது கொண்டிருந்தார். இந்த காட்சிகள் இன்றைய எபிசோடில் வெளியானது.
மழையில் சூட்டிங்
இதன் மேக்கிங் வீடியோவை செந்தில் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் வெங்கட் ரங்கநாதன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். ஏற்கனவே இந்த காட்சிகள் வருவதற்கு முன்பு போன வாரத்தில் ஸ்டாலின், பாண்டியன் மழையில் நனைந்து அழுது கொண்டிருக்கும் வீடியோவை பகிர்ந்து இருந்தார்.
மேக்கிங் வீடியோ
அதனாலேயே அடுத்த நாள் எபிசோடு வருவதற்கு முன்பு சீரியல் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் செந்தில் பகிர்ந்த வீடியோவும் இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஒரு சீரியலில் சில காட்சிகள் எடுப்பதற்காக இரவு முழுக்க சூட்டிங் நடப்பது அந்த வீடியோவில் காட்டி இருக்கிறார்கள்.
பாண்டியன் எடுக்க போகும் முடிவு
இரவு நேரத்தில் செயற்கையாக மழை பெய்ய வைத்து அதில் பாண்டியனை நனைய விட்டு பிறகு அவருடைய மகன்கள் சமாதானம் செய்யும் காட்சிகள் எல்லாம் ரிஸ்க் எடுத்து செய்யப்பட்டு இருக்கிறது. இதை பலரும் பாராட்டி வருகிறார்கள். அதுபோல இனி அரசி விஷயத்தில் பாண்டியன் என்ன முடிவெடுக்க போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
அடுத்த வாரம் சம்பவம் இருக்கு
பாண்டியனை செந்தில் கண்டுபிடித்து அவருக்கு தண்ணீர் எல்லாம் கொடுத்து வீட்டிற்கு கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார். மீண்டும் வீட்டிற்கு வரும் பாண்டியன் அரசியோடு பேசுவாரா? அரசி தான் செய்தது தவறு என்று புரிந்து கொண்டு குமாரவேலிடமிருந்து விலகுவாரா என்ற பல்வேறு கேள்விகள் இருக்கிறது. அடுத்த வாரத்தில் இதனால் பெரும் சம்பவமும் காத்திருக்கிறது என்று தெரிகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications