செஃப் தாமுவை பற்றி உருக்கமாக பேசிய வெங்கடேஷ் பட்.. 15 வருட நண்பர் பற்றி கண்கலங்கி சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமையல் கலைஞர் தாமு உடல்நல குறைவினால் காலமானார். இந்த தகவல் அறிந்ததும் அவருடைய நண்பர்களும், ரசிகர்களும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் செஃப் வெங்கடேஷ் பட் தன்னுடைய நண்பர் செஃப் தாமு பற்றி உருக்கமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதில் வெங்கடேஷ் பட் பேசுகையில், பத்மஸ்ரீ செஃப், கின்னஸ் சாதனையாளர் தாமு காலமானார் என்ற செய்தியை கேட்கும்போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. பல்லாயிரம் கணக்கான கலைஞர்களுக்கு சமையல் மூலமாகவும் பத்மஸ்ரீ விருது வாங்கலாம், கின்னஸ் சாதனை செய்யலாம் என்று முன்மாதிரியாக இருந்தவர் தாமு. 30 புத்தகங்களுக்கு மேலே எழுதி தமிழ்நாட்டில் பாரம்பரிய உணவுகளை உலகம் முழுவதும் கொண்டு போனவர்.

Venkatesh Bhat

செஃப் வெங்கடேஷ் பட் வீடியோ

எனக்கும் அவருக்கும் 15 ஆண்டுகால நட்பு தொடர்ந்தது. அந்த நட்பின் நினைவுகள் எப்போதும் என் மனதில் பசுமையாக இருக்கும். அவரை பிரிந்து வாழும் அவருடைய குடும்பத்தினருக்கும், கோடான கோடி ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இறப்பு செய்தி எனக்கு ரொம்ப ஷாக்கிங் ஆக இருக்கிறது. எப்படி இதிலிருந்து அவருடைய குடும்பத்தினர் மீண்டும் வரப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அவர் புகழை எந்த மாதிரி சிறப்பு செய்ய வேண்டுமோ அந்த அளவிற்கு செய்ய வேண்டும். ஏனென்றால் அவர் அதற்கு தகுதியானவர் என்று வெங்கடேஷ் பட் எமோஷனலாக அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

இது இணையத்தில் வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 4 சீசன்களாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் இணைந்து நடுவர்களாக இருந்தனர். ஆனால் 5வது சீசனில் இருந்து வெங்கடேசப்பட்டு திடீரென விலகினார். அப்போது என்னுடைய நண்பர் தாமுவும் நான் இல்லாத இடத்தில் இருக்க மாட்டார் என்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த சமயத்தில் அதற்கு தாமு ஆமாம் என்று சொல்வது போல தான் பேசி இருந்தார். ஆனால் அதற்கு பிறகு தான் 5வது சீசனில் தொடர போகிறேன் என்று தாமு பேசிவிட்டார்.

கருத்து வேறுபாடு

இதனால் அவர்கள் இருவருக்கும் அந்த சமயத்தில் கருத்து வேறுபாடு என்று செய்திகள் பரவி வந்தது. ஆனால் அதற்கு பிறகு ஒரு நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்ட போது எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடோ, பிரச்சனையோ கிடையாது நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்கள்தான் என்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தனர். இந்த நிலையில் இப்போது தாமு மறைந்து விட்டார் என்ற செய்தியை கேட்டதும் உடனடியாக தன்னுடைய நண்பருக்காக உருக்கமான வீடியோவை வெங்கடேஷ் பட் வெளியிட்டிருக்கிறார்.

வருத்தத்தில் ரசிகர்கள்

அதுபோல விஜய் டிவி பிரபலங்கள், சமையல் கலைஞர்கள் பலரும் தாமுவின் இழப்பு தங்களுக்கு பெரிய வருத்தத்தை கொடுத்திருப்பதாக பகிர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் தான் இசையமைப்பாளர் தேவா காலமானார். பாடகராகவும், இசை அமைப்பாளராகவும் அவரை ரசித்தவர்களுக்கு அவருடைய திடீர் இழப்பு அதிர்ச்சியை கொடுத்தது. அதேபோல இந்த எந்த நிகழ்ச்சிகளில் வந்தாலும் சிரித்த முகமாக இருந்த தாமுவின் இழப்பும் இப்போ ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+