நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலைக்கு வெங்கடேஷ் பட் அறிவுரை... மணிமேகலையின் உருக்கமான பதில்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலையை பற்றி வெங்கடேஷ் பட் உருக்கமான பதிவு வெளியிட்டிருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை நேற்றைய எபிசோடில் இருந்து தான் விலகப் போவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மணிமேகலையின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் பலர் பீல் பண்ணி சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செப்பாக இருக்கும் வெங்கடேஷ் பட் மணிமேகலை பற்றி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நான்காவது சீசன்

நான்காவது சீசன்

விஜய் டிவியில் எத்தனை ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் குக் வித் கோமாளி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. சின்னத்திரையில் சீரியல்களை பார்த்து அலுத்து போய் இருந்த ரசிகர்களுக்கு இந்த காமெடியான ரியாலிட்டி ஷோ ரசிகர்களை கவர்ந்திருந்தது. அதன் காரணமாக தான் தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 2019 இல் தொடங்கி இப்போது வரைக்கும் தொடர்ந்து வரும் இந்த நிகழ்ச்சியில் ஒரு சில போட்டியாளர்கள் கோமாளிகளாக தொடர்ந்து வருகிறார்கள். அதில் ஒரு முக்கியமான போட்டியாளராக தொகுப்பாளர் மணிமேகலை இருந்து வந்தார்.

நான் வரமாட்டேன்

நான் வரமாட்டேன்

மணிமேகலை தனக்கு காலில் அடிபட்டு இருக்கும் நேரத்தில் இதற்கு முந்தைய சீசனில் கலந்து கொள்ளாத நேரத்தில் அவருடைய ரசிகர்கள் அதிகமாக ஃபீல் பண்ணி வந்தனர். ரசிகர்களின் தொடர் ஆதரவுக்கு காரணமாக விரைவாக மணிமேகலையும் அந்த சீசனில் மீண்டும் கலந்து கொண்டார். பிறகு இப்போது வரைக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த நிலையில் திடீரென்று நேற்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போகிறேன் என்று உருக்கமான நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் இன்று குக் வித் கோமாளியில் என்னுடைய கடைசி எபிசோடு நான் வரமாட்டேன் என நானே வருவேன் கெட்டப்பில் அறிவிக்கிறேன் என்று ஆரம்பித்து இருந்தார்.

நெகிழ்ச்சியான பதிவு

நெகிழ்ச்சியான பதிவு

2019 இல் தொடங்கிய முதல் சீசனில் இருந்து நீங்கள் எனக்கு குக் வித் கோமாளிக்காக அதிக அளவு அன்பை பொழிந்து கொண்டிருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். எனக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளில் நான் எப்போதும் பெஸ்ட் ஆக இருக்க அதிக அளவு efforts போட்டு இருக்கிறேன். உங்களை entertain செய்ய கொஞ்சம் justice செய்து இருக்கிறேன். உங்களிடம் இருந்து எதிர்பாக்காத அளவு அன்பு கிடைத்தது. அது நான் செய்யும் மற்ற விஷயங்களிலும் இருக்கும் என நம்புகிறேன் என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு கண்டு இந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். தொடர்ந்து இவருடைய பதிவிற்கு ரசிகர்கள் தங்களுடைய வருத்தத்தை கருத்துக்களாக பதிவிட்டு வருகின்றனர்.

மணிமேகலையின் பதில்

மணிமேகலையின் பதில்

இதுவரைக்கும் இருந்த மூன்று சீசன்களை விடவும் இந்த சீசன் ஆரம்பத்திலேயே சிறு ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. காரணம் முதலில் எலிமினேஷன் ஆன கிஷோர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அது மட்டுமல்லாமல் இந்த சீசனில் பாலா இல்லாதது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் மணிமேகலையும் வெளியேறி இருக்கிறார். இதே நேரத்தில் மணிமேகலையின் பதிவிருக்கு வெங்கடேஷ் பட் கமன்ட் செய்திருக்கிறார். அதில் மணி நீங்கள் சிறந்த பெண் கோமாளி மற்றும் நான் கண்ட சிறந்த மனிதர்களில் ஒருவர் நீங்கள் ஒரு பிறவி நடிகராகவும், பொழுது போக்காளராகவும் இருக்கிறீர்கள். நான் உங்கள் உடன் குக் வித் கோமாளி செட்டுகளில் சிறந்த நேரத்தை அனுபவித்தேன். அழகான நினைவை என் வாழ்வின் மூலம் பெற்று போற்றுகிறேன். எப்போதும் நட்சத்திரமாக ஜொலித்து உங்கள் துறையில் சிகரத்தை அடைய வேண்டும் என்று பிரார்த்தித்து ஆசீர்வதித்து வேண்டுகிறேன். அனைத்து நன்மைகளும் இருக்க இறைவனை ஆசீர்வதிப்பாராக, இப்போது போல அதே பணிவான மனிதனாக இருக்க மறக்காதே! என்று உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார். அதற்கு மணிமேகலை ரொம்ப நன்றி சார் நீங்க தான் என்னுடைய மோட்டிவேஷன் ஸ்பீக்கர் தேங்க்யூ என்று பதிவிட்டு இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+