குக் வித் கோமாளிக்கு மீண்டும் வெங்கடேஷ் பட் வரப்போகிறாரா? 2 வார கதை தெரியுமா? அவரே கொடுத்த விளக்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியான வெங்கடேஷ் பட்டிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் ஏன் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று கேட்ட கேள்விக்கு வெங்கடேஷ் பட் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதில் கொடுத்து இருக்கிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் திடீரென்று ஐந்தாவது சீசனில் தான் கலந்து கொள்ள போவதில்லை என்று அறிக்கை கொடுத்திருந்தார். அதை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர் என்று அடுத்தடுத்து வெளியேறி இருந்தனர்.

இந்த நிலையில் இப்போது சன் டிவியில் இவர்கள் எல்லாருமே புதிய நிகழ்ச்சியை தொடங்கி இருக்கின்றனர். அந்த நிகழ்ச்சிக்கு டாப் குக்கு டூப் குக்கு என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதிலும் பலர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை காப்பி அடித்து டாப் குக்கு டூப்பு குக்கு என்று தயாரித்திருக்கிறார்கள் என்று கூறி வருகிறார்கள்.
இது குறித்து வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விஜய் டிவியில் தொடங்கி வைத்ததே மீடியா மேஷன் நிறுவனம் தான். அந்த நிறுவனம் இப்போது விஜய் டிவியில் இருந்து வெளியாகி புது நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறார்கள். அதுதான் ஒரிஜினல் நிகழ்ச்சி என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் போட்டு இருந்தார்.

அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த மார்ச் 27ஆம் தேதி அந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாளில் எந்த கோமாளிகளும் உங்களை பற்றி நிகழ்ச்சியில் பேசவில்லையே என்று ரசிகர் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு வெங்கடேஷ் பட் "உண்மை ஒருநாள் வெல்லும்" என்று பதில் கொடுத்திருந்தார். இது பெரிய அளவில் இணையத்தில் பேசப்பட்டு இருந்தது.
இப்படியான நிலையில் இப்போது மீண்டும் ஒரு குழப்பமான பதிலை வெங்கடேஷ் பட் கொடுத்திருக்கிறார். அதாவது இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெங்கடேஷ் பட் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவிற்கு "கோமு குட்டிமா" என்ற ஐடியில் இருந்து "குக் வித் கோமாளிக்கு வராமல் இங்க என்ன என்ஜாய் வேண்டி இருக்கு பட்டுக்குட்டி உங்களுக்கு? உங்க ஃபேன்ஸ் எல்லாம் உங்களை மிஸ் பண்ணிட்டு இருக்கோம். நீங்க என்ஜாய் பண்ணிட்டு இருக்கீங்களா? என்று முறைக்கிற மாதிரி ஒரு எமோஜியையும் சேர்த்து கமெண்ட் கொடுத்து இருக்கிறார்.
அதற்கு பதில் அளித்த வெங்கடேஷ் பட் இரண்டு வாரத்தில் உங்களை எல்லாம் பார்க்க வருகிறேன் என்று கூறியிருக்கிறார். இதனால் அவர் கலந்து கொள்ளும் டாப் குக்கு டூப்பு குக்கு என்ற நிகழ்ச்சி இரண்டு வாரத்தில் ஒளிபரப்பாக இருக்கிறதா? அல்லது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மீண்டும் இரண்டு வாரத்தில் வரப் போகிறாரா? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications