கிட்ட போயி அந்த நடிகரை உற்று பார்த்த எம்.என். நம்பியார்.. கோபாலபுரத்தில் விஐபி: நெகிழும் பேரன்
சென்னை: எந்த சர்ச்சைகளிலும் சிக்காதவர் என் தாத்தா நம்பியார், வீட்டில் எப்போதுமே அமைதியாக இருப்பார். ஆனால் ரசிகர்கள் என்றால் மட்டும் அவருக்கு உயிர்.. மக்களால்தான் இன்று இந்த நிலையில் இருப்பதாக கண்கலங்குவார்" என்று நெகிழ்ந்து சொல்கிறார் எம்.என்.நம்பியார் பேரன் தீபக்.
Aagayam Tamil யூடியூப் சேனலுக்கு எம்என் நம்பியாரின் பேரன், எம்என் தீபக் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் தன்னுடைய தாத்தா நம்பியார் பற்றி பல்வேறு விஷயங்களை பூரித்து சொல்லியிருக்கிறார்.

"என் தாத்தா சிறந்த மனிதர்.. யாருக்குமே வலிய சென்று அட்வைஸ் தர மாட்டார். அட்வைஸ் என்று யாராவது கேட்டால் மட்டும்தான் சொல்வார். சூப்பர் ஸ்டார் ரஜினி சார், யாருக்குமே சொல்லாமல் எங்கள் வீட்டுக்கு வந்துடுவார். தாத்தாவிடம் பேசிவிட்டு லஞ்ச் சாப்பிட்டுவிட்டுதான் போவார்.. என் தாத்தாவை போல அவரும் ஆன்மீகவாதி என்பதால், நிறைய சந்தேகங்களை என் தாத்தாவிடம் கேட்டு தெரிந்து கொள்வார்.
கலைஞர் சார்: எம்ஜிஆர் சாரிடமும் என் தாத்தாவுக்கு நெருக்கம்.. கலைஞர் சாரிடமும் நெருக்கம்.. பல அரசியல் தலைவர்கள், பல பிரபலங்களுடன் பழகினாலும், எல்லாருக்குமே நெருக்கமானவராக இருந்திருக்கிறார். அப்படியானால், எந்த அளவுக்கு இவர்களிடம் நட்பை பேலன்ஸ் செய்து நடந்து கொண்டிருப்பார் பாருங்கள்.. யார் மனதையும் புண்படுத்தாமல், அனைவரிடமும் அன்பாகவும், நட்பாகவும் பழகுவதே மிகப்பெரிய விஷயம்.
அன்றைய காலகட்டத்தில் எம்ஜிஆர் சார், சக்கரபாணி சார் போன்றோரின் வீடுகள் எல்லாம் லாயிட்ஸ் ரோடில்தான் இருந்தன.. இதற்கு பிறகு ராயப்பேட்டை கோபாலபுரத்துக்கு ஏராளமான நடிகர், நடிகைகள் வீடு வாங்கி குடியிருக்க துவங்கினார்கள். அப்படித்தான் கலைஞர் சாரும் கோபாலபுரத்தில் குடி வந்தார்கள்.. நாங்களும் கோபாலபுரத்துக்கு குடியேறினோம். அதனால்தான் கோபாலபுரத்தில் விஐபிகள் அதிகம் பேர் உள்ளார்கள்.
சர்ச்சைகள்: எந்த சர்ச்சைகளிலும் சிக்காதவர் என் தாத்தா நம்பியார்.. வீட்டில் எப்போதுமே அமைதியாக இருப்பார். ஆனால் ரசிகர்கள் என்றால் மட்டும் அவருக்கு உயிர்.. மக்களால்தான் நான் இன்று இந்த நிலையில் இருப்பேன் என்பார்..
வில்லனாகவே நடித்து அனைவரிடமும் வெறுப்பை சம்பாதித்து வந்தநிலையில், ஒருகாலகட்டத்தில், சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்ற வித்தியாசம் உணர்ந்து, ஏராளமான மக்கள் ரசிக்க துவங்கினார்கள்.. அப்போது அதை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டார். எத்தனையோ ரசிகர்கள் வீட்டு வாசலுக்கு வந்து நின்றுவிடுவார்கள். அனைவரிடம் சென்று பேசுவார்.
எம் ஆர் ராதா: நடிப்பில் யார் மிகவும் சிறந்தவர் என்று என் தாத்தாவிடம் பலமுறை கேட்டிருக்கிறேன். யார் என்று சொல்லவே மாட்டார். ஆனால், டிவியில் எம்ஆர் ராதா படம் போட்டால், அவரது நடிப்பை உற்று கவனிப்பார்.. டிவி கிட்ட உட்கார்ந்து, எம்ஆர் ராதா நடிப்பை சிரித்துகொண்டே ரசித்து பார்ப்பார். அதேபோல, சாவித்திரி நடிப்பு என்றாலும் மிகவும் பிடிக்கும்.
என் தாத்தா நம்பியார் மாதிரி ரோல்களை இப்போதுள்ள நடிகர்களில் ஓரளவு செய்வது விஜய் சேதுபதி என்று சொல்லலாம். ஒருமுறை விஜய் சேதுபதியே சொல்லியிருந்தார், "நான் எந்த படம் பண்ணாலும், எம்ஜிஆர், நம்பியார் இருவரின் சாயலும் இருக்கும்" என்றார். அதனால்கூட, விஜய்சேதுபதியிடம் சிலசமயம் என் தாத்தாவின் நடிப்பு போலவே தென்படும்.
தூறல் நின்னு போச்சு: "தூறல் நின்னு போச்சு" படத்தில், என் தாத்தா நடிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டார்.. என்னை எல்லாரும் வில்லனாக பார்த்துட்டு, இப்படியொரு ரோலில் நடித்தால், ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.
ஆனால் பாக்யராஜ் சார், அதிக நம்பிக்கையை என்னுடைய தாத்தா மீது வைத்து, கதையை புரிய வைத்தார். அதற்குபிறகே அவரது சம்மதம் பெற்று நடிக்கவும் வைத்தார். அப்போதுதான் நம்பியாருக்கு இப்படியும் நடிக்க வருமா என்று எல்லாருக்கும் தெரியவந்தது" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications