சினிமாவில் அடுத்த இழப்பு.. ‘விசில்’ பட நடிகர் ரவிக்குமார் காலமானார்.. இந்த நடிகையின் முன்னாள் கணவர்!
சென்னை: "இளமை எனும் பூங்காற்றே" என்ற பாடல் மூலம் பிரபலமடைந்த நடிகர் ரவிக்குமார் 71 வயதில் இன்று காலமானார். அவருக்கு சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
ஒரு சில நடிகர்கள் திரைப்படங்களில் மிரட்டலான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். அதேபோல சின்னத்திரையிலும் நடித்து பெயர் வாங்கி இருப்பவர்கள். ஆனால் பல வருடங்களுக்கு முன்பு அவர்கள் நடித்த திரைப்படங்களை இப்போது நினைவுபடுத்தும் போது அவர்களா இவர்கள் என்று பலருக்கு வியப்பை ஏற்படுத்தும். அது போல ஒருவர்தான் நடிகர் ரவிக்குமார்.

முதல் படம்
ரவிக்குமார் கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் பிறந்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட மலையாள சினிமாவில் நடித்துள்ளார். அதுபோல தமிழில் இவர் முதல் முதலாக அறிமுகமானது அவர்கள் என்ற திரைப்படத்தில் தான். இந்த திரைப்படத்தில் ரஜினி, கமலுக்கு இணையாக மூன்றாவது ஹீரோவாக நடித்திருந்தார். முதல் படமே இவருக்கு அடையாளமாக மாறியது.
ஃபேவரைட் திரைப்படங்கள்
அதைத் தொடர்ந்து பகலில் ஓர் இரவு என்ற திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவியுடன் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற இளமை எனும் பூங்காற்றே பாடல் பலருடைய ஃபேவரைட் சாங். இந்த பாடலில் இவருடைய ஸ்டைலான பெர்பார்மன்ஸ் அந்த நேரத்தில் அதிகமாக பேசப்பட்டது. அதுபோல 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் ஆன அலாவுதீனும் அற்புத விளக்கும், மலபார் போலீஸ், ரமணா, விசில் போன்ற இருபதுக்கு மேற்பட்ட திரைப்படங்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
நெகட்டிவ் கேரக்டர்
அந்த நேரத்தில் தான் பாலச்சந்தர் இயக்கிய சீரியலிலும் நடிக்க தொடங்கினார். தனக்கு சீரியல் வாய்ப்பு வந்த போது எனக்கு நெகட்டிவ் டைரக்டர் தான் வேண்டும், நெகட்டிவ் கேரக்டரில் தான் என்னுடைய நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்று இவரே தனக்கு சீரியல்களில் நெகடிவ் கேரக்டர் கேட்டு வாங்கியதாக கூறப்பட்டது.
அழுத்தமான கேரக்டர்
அதிலும் ரேடன் நிறுவனம் இயக்கிய சித்தி, வாணி ராணி போன்ற பல சீரியல்களில் நடித்து இருந்தார். முதல் திரைப்படத்தில் இவருக்கு பெரிய அடையாளம் கிடைத்திருந்தாலும் இவரால் தமிழ் சினிமாவில் கதாநாயகன் ரேஞ்சுக்கு ஜொலிக்க முடியாமல் போய்விட்டது. ஆனாலும் பல சீரியல்களில் அப்பா, மாமா போன்ற அழுத்தமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார்.
முன்னாள் மனைவி பிரபல நடிகை
அதுபோல 71 வயதான ரவிக்குமார் பிரபல நடிகை சுமித்ராவின் முன்னாள் கணவர் தானாம். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த ஒரு சில வருடங்களிலேயே விவாகரத்து ஆகி பிரிந்து விட்டார்களாம். பிறகு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட ரவி குமாருக்கு இரண்டாவது மனைவி மூலம் ஒரு மகன் இருக்கிறாராம். அவருடைய மகன் ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் பார்த்து வருகிறாராம்.

அதிர்ச்சியை ஏற்படுத்திய மரணம்
அது போல வயது மூப்பு காரணமாக ரவிக்குமார் சென்னையில் வசித்து வந்திருக்கிறார். சமீபத்தில் அவர் எந்த சீரியல் மற்றும் சினிமாவில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அது போல அவருக்கு உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் இவர் காலமானதாக கூறப்படுகிறது. இவருடைய உடல் வரசவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று மாலை அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அதற்கு பிறகு நாளை இறுதி சடங்குகள் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications