வீரம் பாயும் நெல்லையிலே... சுடலைமாட எல்லையிலே.. மெய்சிலிர்க்க வைத்த வேட்ட சாமி பட பாடல்! சாதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில பாடல்களை கேட்கும் போது நம்மை அறியாமலே உடம்புக்குள் ஒரு சிலிர்ப்பு வரும். அதிலும் நம்முடைய மண்ணின் வாசனையையும், ஊர் திருவிழாக்களையும், குலதெய்வ வழிபாட்டையும் நினைவுபடுத்தும் பாடல்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அப்படி ஒரு உணர்வை கொடுத்திருக்கிறது அருள்நிதி நடிக்கும் வேட்டசாமி படத்தில் வெளியாகி உள்ள சாமி அழைப்பு பாடல். "வீரம் பாயும் நெல்லையிலே.. சுடலைமாட எல்லையிலே" என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது வெளியான சில நாட்களிலேயே ஒரு மில்லியன் வியூஸ் கடந்து, தென் மாவட்ட மக்களின் தனி வரவேற்பை பெற்று வருகிறது.

Vetta Saami movie Saami Azhaippu Song

நெல்லை மண்ணின் பெருமை

வேட்ட சாமி படத்தில் முதல் பாடலாக வெளியாகி இருக்கும் சாமி அழைப்பு வெறும் சினிமா பாடலாக மட்டுமில்லாமல் தென் தமிழகத்தின் கிராமிய வாழ்வியலையும், சுடலை மாட வழிபாட்டை நினைவுபடுத்தும் வகையில் இருக்கிறது. அந்த பாடல் முழுக்க சுடலைமாடன் வழிபாடு, அந்த வழிபாட்டை சுற்றி இருக்கும் மக்களின் நம்பிக்கை, ஊரின் அடையாளம், வீரம் ஆகியவற்றை பாடல் வழியாக கொண்டு வந்திருக்கிறார்கள்.

வேட்ட சாமி முதல் பாடல்

நெல்லை பக்கம் இருக்கும் பல கிராமங்களில் சுடலை மாடன் வழிபாடு என்பது வெறும் சாமி கும்பிடுவது மட்டுமல்ல, அது அந்த ஊரின் பாரம்பரியத்தோடும், குடும்ப உறவுகளோடும், தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் நம்பிக்கையோடு கலந்தது. கோவில் கொடை விழா என்றாலே ஊரே திரண்டு நிற்பது, வில்லப்பாட்டு, மேளதாளம், சாமி அழைப்பு என ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி உணர்வு இருக்கும். கோவில் திருவிழாவை கொண்டாடுவதற்காகவே பல ஊர்களில் இருக்கும் மக்கள் எல்லாம் சொந்த ஊருக்கு வந்து ஒன்று சேர்ந்து திருவிழாவை கொண்டாடுவார்கள். அந்த தருணத்தையே இந்த பாடலில் பாடி இருக்கிறார்கள்.

இந்த பாடலில் இன்னொரு முக்கியமான சிறப்பு வில்லுப்பாட்டு கலைஞர் மாதவி பாடி இருப்பது தான். தமிழகத்தின் வில்லுப்பாட்டு மூலமாக பலருடைய கவனத்தை ஈர்த்த மாதிரி இந்த படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமாகி இருக்கிறார். அவருடைய குரலில் கிராமிய தன்மையும் பாடலின் வரிகளுக்கு ஏற்ற கம்பீரமும் சேர்ந்து பாடலுக்கு பக்தி உணர்வை கொடுத்திருக்கிறது. இந்த பாடலுக்கு ஜெகன் கவிராஜ் வரியில்கள் எழுதி இருக்கிறார்.

சுடலை மாடனுக்கு பாட்டு

வழக்கம்போல காதல் பாடல், குத்து பாட்டு என இல்லாமல் ஒரு குறிப்பிட்ட மண்ணின் வழிபாட்டு முறையை கலாச்சாரத்தை மையமாக வைத்து பாடலை உருவாக்கி இருப்பது கவனிக்க வேண்டிய விஷயம். பாடலை கேட்கும் போதே ஒரு கிராமத்தின் கோவில் திருவிழாவிற்குள் நாமே சென்று நிற்பது போன்ற உணர்வு கிடைக்கிறது. கன்னடத்தில் வெளியான காந்தாரா படத்தை பார்த்தவர்களுக்கு அதில் வரும் தெய்வ வழிபாடு, பூதகோல மரபு, கிராம மக்களின் நம்பிக்கை ஆகியவை ஏற்படுத்திய தாக்கம் நிச்சயம் நினைவிருக்கும். அந்த படத்தில் வெற்றிக்கு அதிரடி காட்சிகள் மட்டும் அல்லாமல் அந்த மண்ணோடு கலந்த தெய்வீக உணர்வும் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது.

அதேபோன்ற உணர்வு தென் தமிழகத்தில் சுடலை மாடன் வழிபாட்டை மையமாகக் கொண்டு தமிழ் சினிமாவில் இன்னும் அழுத்தமாக சொல்ல முடியுமா? என்ற எதிர்பார்ப்பை வேட்டசாமியின் இந்த பாடல் உருவாக்கி இருக்கிறது. நம்முடைய ஊர்களில் பார்த்து ரசித்த திருவிழாக்கள், சாமி அழைப்புகள், காவல் தெய்வங்கள் ஆகியவற்றை திரையில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு இயல்பாகவே ஒரு நெருக்கம் ஏற்படும். குறிப்பாக தென் மாவட்ட மக்களுக்கு இந்த பாடல் இன்னும் கூடுதலான உணர்வை கொடுக்கும்.

தென் மாவட்ட அடையாளம்

அதுபோல இந்த பாடலை பார்த்ததுமே இனி இதுதான் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட சுடலைமாடன் கோவில்களில் போடப்படும் சாமி அழைப்பு பாடலாக இருக்கும். அந்த அளவிற்கு பாட்டை கேட்கும் போதே புல்லரிக்குது என்று தல ரசிகர்கள் கமெண்ட்ஸ் கொடுத்திருக்கின்றனர். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு படமும் கிராமிய பின்னணி இருந்தது. கருப்பசாமியின் நம்பிக்கை சார்ந்த அம்சங்களால் ரசிகர்களிடம் பேசப்பட்டது. அந்த படத்தையே போலவே வேட்ட சாமி படமும் சுடலை மாட வழிபாட்டை மையப்படுத்தி வருவதால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

அதுபோல இந்த படத்தை பம்பர் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் எம் செல்வக்குமார் இயக்கி இருக்கிறார். அருள்நிதியுடன் அமீர் இணைந்து நடித்திருக்கிறார். அதுபோல ஆடுகளம் நரேன், விஜி சந்திரசேகர், மதுசூதனன் ராவ், மைனா நந்தினி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட பணி நடைபெற்று வரும் நிலையில் வரும் டிசம்பர் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+