Vettaiyan ott: வேட்டையன் ஓடிடி ரிலீஸ் இவ்வளவு சீக்கிரமாகவா? கோடிகளை கொட்டி உரிமத்தை வாங்கிய நிறுவனம்
சென்னை: வேட்டையன் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே பிரபல நிறுவனம் கிட்டத்தட்ட 90 கோடிக்கு அந்த படத்தில் உரிமையை வாங்கி இருக்கிறது. எப்போதுமே படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆன இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் ஓடிடியில் வெளியாவது வழக்கம். ஆனால் வேட்டையன் திரைப்படம் விரைவில் ஒடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி இருந்த வேட்டையின் திரைப்படம் சில தினங்களுக்கு முன்புதான் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. ஜெய் பீம் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்த இந்த படத்தின் மீது அதிகமான எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

அதே சமயம் 33 வருடங்களுக்கு முன்பாக "ஹம்" என்ற ஹிந்தி படத்தில் இணைந்திருந்த ரஜினி மற்றும் அமிதாப் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இந்த திரைப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு அமைய காரணமாக இருந்தது. இந்த திரைப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். என்கவுண்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப்பச்சன் நடித்திருக்கிறார்.
இந்தியாவில் சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்தை மற்றும் அமிதாப்பச்சன் இருவரும் சேர்ந்து இந்த திரைப்படத்தில் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மாதங்களாகவே ரசிகர்கள் மத்தியில் இருந்தது. 200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இந்தியாவில் 55 கோடி வசூலை பெற்றதாக கூறப்படுகிறது. இந்த மாதத்திற்குள் எப்படியும் பட்ஜெட் வசூலை இந்த படம் எடுத்துவிடும் என்று லைக் நிறுவனம் நம்பிக்கையில் இருக்கிறது.
ஆனால் அதற்கு பாதகம் விளைவிக்கும் விதமாக ஓடிடி ரிலீஸ் சீக்கிரமாக வருகிறது. ஏற்கனவே லைக்கா தயாரிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் போகாததால் நஷ்டம் அடைந்து இருக்கிறது. இந்த நிறுவனம் பெரிய அளவில் வேட்டையன் திரைப்படத்தின் மற்றும் அஜித்தின் விடாமுயற்சி படத்தை தான் நம்பி இருந்தது. ஆனால் வேட்டையன் திரைப்படம் நடுநிலையான கலெக்சன் தான் பெற்று வருகிறது.

தீபாவளிக்கு இந்த திரைப்படம் தியேட்டரில் பெரிய வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மழையின் காரணமாக பல இடங்களில் தியேட்டர் காத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வேட்டையன் திரைப்படத்தின் ஒடிடி உரிமையை 90 கோடி கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்கு முன்பு வெளிவந்த ரஜினிகாந்தின் ஜெய்லர் திரைப்படமும் அமேசான் பிரைம் தான் வாங்கி இருந்தது.
வேட்டையன் திரைப்படம் ஒரு மாதத்திற்குள் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications