Vettaiyan ott: ‘வேட்டையன்’ ஓடிடி அப்டேட்.. இன்னும் சில தினங்களில் ரிலீஸ்! வெளியான தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சுவாரியர் உட்பட பல பிரபலங்கள் நடித்த வேட்டையன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி இருந்த வேட்டையின் திரைப்படம் கடந்த 10-ந் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. ஜெய் பீம் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்த இந்த படத்தின் மீது அதிகமான எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

television vettaiyan ott

அதே சமயம் 33 வருடங்களுக்கு முன்பாக "ஹம்" என்ற ஹிந்தி படத்தில் இணைந்திருந்த ரஜினி மற்றும் அமிதாப் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இந்த திரைப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு அமைய காரணமாக இருந்தது. இந்த திரைப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். என்கவுண்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப்பச்சன் நடித்திருக்கிறார்.

இந்தியாவில் சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்தை மற்றும் அமிதாப்பச்சன் இருவரும் சேர்ந்து இந்த திரைப்படத்தில் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மாதங்களாகவே ரசிகர்கள் மத்தியில் இருந்தது. 200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இந்தியாவில் 55 கோடி வசூலை பெற்றதாக கூறப்படுகிறது. இந்த மாதத்திற்குள் எப்படியும் பட்ஜெட் வசூலை இந்த படம் எடுத்துவிடும் என்று லைக் நிறுவனம் நம்பிக்கையில் இருக்கிறது.

ஆனால் அதற்கு பாதகம் விளைவிக்கும் விதமாக ஓடிடி ரிலீஸ் சீக்கிரமாக வருகிறது. ஏற்கனவே லைக்கா தயாரிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் போகாததால் நஷ்டம் அடைந்து இருக்கிறது. இந்த நிறுவனம் பெரிய அளவில் வேட்டையன் திரைப்படத்தின் மற்றும் அஜித்தின் விடாமுயற்சி படத்தை தான் நம்பி இருந்தது. ஆனால் வேட்டையன் திரைப்படம் நடுநிலையான கலெக்சன் தான் பெற்று வருகிறது.

தீபாவளிக்கு இந்த திரைப்படம் தியேட்டரில் பெரிய வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மழையின் காரணமாக பல இடங்களில் தியேட்டர் காத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வேட்டையன் திரைப்படத்தின் ஒடிடி உரிமையை 90 கோடி கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்கு முன்பு வெளிவந்த ரஜினிகாந்தின் ஜெய்லர் திரை

இதனை அடுத்து இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தேதி இப்போது வெளியாகியிருக்கிறது. அதாவது அடுத்த மாதம் 7 தேதி அமேசான் பிரேம் தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+