ஓடிடியில் ரிலீசானது ரஜினிகாந்த்தின் வேட்டையன்! வீக் என்ட் விருந்து ரெடி
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய 'வேட்டையன்' திரைப்படம், இன்று முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆகிறது! இயக்குநர் ஞானவேலின் இயக்கத்தில் உருவான இந்தப் படம், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகி, அனிருத்தின் இசையில் முதலுக்கு மோசமில்லாத வெற்றியைப் பெற்றது.
அனிருத்தின் இசை, படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இன்னும் சிறப்பாக உயர்த்தி, ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தது. குறிப்பாக, 'மனசிலாயோ' பாடல் இன்ஸ்டன்ட் ஹிட்டாகி, சமூக வலைதளங்களில் வைரலானது. சென்னையின் பெருமழை காரணமாக திரையரங்க வசூல் சற்று பாதிக்கப்பட்டாலும், படம் உலகளவில் ரூ.250 கோடி வசூல் செய்து பெரும் வெற்றி பெற்றது.

'வேட்டையன்' வெறும் ஆக்ஷன் படம் மட்டுமல்ல. இது, இந்தியாவின் கல்வி முறை, சட்ட அமலாக்கம் போன்ற முக்கியமான சமூக பிரச்சினைகளை விவாதித்தது. சமூக பிரச்சினைகளைத் திறந்த வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக படம் பாராட்டப்பட்டாலும், சில விமர்சகர்கள் கதை சற்று நீளமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ரஜினிகாந்த் காவல் அதிகாரி அதியனாக நடித்து, நீதி, நியாயத்தை உணர்பவராக வருகிறார். ரஜினிகாந்த், 'வேட்டையன்' படத்தில் தனது வழக்கமான ஸ்டைலிலிருந்து மாறுபட்டு, ஒரு காவல் அதிகாரியாக மிகவும் நேர்த்தியாக நடித்துள்ளார். அவரது நடிப்பு, படத்திற்கு ஒரு தனி பரிமாணத்தை சேர்த்துள்ளது.
இப்போது, அமேசான் பிரைம் வீடியோவில் 'வேட்டையன்' வெளியாகி இருப்பதால், இன்னும் பல ரசிகர்கள் இந்தப் படத்தை ரசிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா பிரியர்கள் அனைவரும் இந்த படத்தை ஓடிடியில் பார்த்து, தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
பல விமர்சகர்கள் இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களை வழங்கினாலும், படத்தின் வெற்றி யாராலும் மறுக்க முடியாதது. இந்த நிலையில்தான் ஓடிடி வெளியீட்டில், படம் இன்னும் அதிகமான பார்வையாளர்களை சென்றடைய வாய்ப்புள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications