கமல்ஹாசன் இப்படி கேட்பார்னு எதிர்பார்க்கல.. போன் பண்ணி பேசியது இதுதான்.. விசித்ரா கணவர் ஓப்பன் அப்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கதை சொல்லும் டாஸ்க்கில் நடிகை விசித்ரா தன்னிடம் தெலுங்கு நடிகர் ஒருவர் தவறாக நடந்து கொண்டார் என்று கூறியிருந்தார்.
அதோடு விசித்ராவிற்கு அந்த நேரத்தில் உறுதுணையாக இருந்தது அவருடைய கணவர்தான் என்று விசித்திரா கூறுகிறார்.

இந்த நிலையில் விசித்ராவின் கணவருக்கு நடிகர் கமல்ஹாசன் போன் செய்து அவரை பாராட்டி இருக்கிறார். அது குறித்து நேற்றைய எபிசோடில் கமல்ஹாசன் பேசியிருந்தார். இந்த நிலையில் கமல்ஹாசன் தன்னிடம் என்ன பேசினார் என்பதை பற்றி விசித்ராவின் கணவர் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
சமீப காலமாகவே பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பற்றி அதிகமாக இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சண்டை சச்சரவுகளோடு இருந்த நிலையில் பிரதீப்புடைய வெளியேற்றத்திற்கு பிறகு அதிகமாக இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் பூகம்பம் டாஸ்க் தொடங்கப்பட்டிருந்தது.
அதில் பலர் தங்களுடைய சோக கதையை சொல்லிக் கொண்டிருந்தனர். அப்போது விசித்திரா தனக்கு தெலுங்கு நடிகர் ஒருவர் கொடுத்த பாலியல் தொல்லை மற்றும் அந்த தெலுங்கு நடிகரின் பேச்சை கேட்டு சண்டை மாஸ்டர் தன்னை தாக்கியது, சண்டை பயிற்சியாளர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றது போன்றவற்றை பற்றி வெளிப்படையாக பேசி இருந்தார்.
அதோடு தனக்கு தெலுங்கு நடிகரால் பிரச்சனை ஏற்பட்டபோது தான் இப்போது திருமணம் செய்து இருக்கும் அதே நபர் விசித்திரா தங்கி இருந்த ஹோட்டலில் மேனேஜராக இருந்தபோது தனக்கு உதவி செய்தது குறித்து விசித்திரா பேசி இருந்தார். அந்த நேரத்தில் தனக்கு பிரச்சனை ஏற்பட்ட போது தன்னுடைய கணவர் தனக்கு நண்பனாகவோ காதலனாகவோ இல்லை. ஆனாலும் எனக்கு ஒரு பிரச்சனை என்ற போது அவர் உதவி செய்தார் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் கமல்ஹாசன் விசித்ராவின் கணவரை பாராட்டி இருந்தார். அதோடு நான் விசித்ராவின் கணவருக்கு போன் செய்து அவரை பாராட்டி இருந்தேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் விசித்திராவின் கணவர் இன்று பேட்டி ஒன்றில் கமல்ஹாசன் தனக்கு போன் செய்தது குறித்து பேசி இருக்கிறார்.
அதில் கமல்ஹாசன் எனக்கு போன் பண்ணுனதை நான் எதிர்பார்க்கவே இல்லை. கமல்ஹாசன் எனக்கு போன் பண்ணி பேசியது என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான நேரமாக தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். கமல் சார் போன் பண்ணி அந்த இடத்தில் விசித்திராவிற்கு பல வில்லன்களால் பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தாலும் நிஜத்தில் நீங்கள் தான் ஹீரோவாக காப்பாற்றி இருக்கிறீர்கள்.
இதேபோல பலரும் முன்னுக்கு வர வேண்டும். அதுபோல நீங்கள் இனி உங்களுடைய பையன்களையும் உங்களைப் போலவே வளர்க்க வேண்டும் என்றும் பேசினார். அதோடு என்னுடைய பையன்கள் இடமும் பேச வேண்டும் என்று சொன்னார். என்னுடைய மூத்த மகன் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் கமல் சாரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்து விட்டார்.
அவரால் எதிர்பார்க்கவே முடியவில்லை பிறகு கமல் சார் எங்களுக்கு போன் பண்ணி இப்படி பேசுவார்னு நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல என்று அந்த பேட்டியில் விசித்ராவின் கணவர் கூறியிருக்கிறார். ஏற்கனவே விசித்திரா கதை சொல்லும் டாஸ்க்கில் தன்னுடைய சோக கதையை சொன்ன பிறகு அது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய விசித்ராவின் கணவர் கமல்ஹாசன் இதுபற்றி கண்டிப்பாக பேசவே மாட்டார். விசித்திராவின் கவலைகளை கண்டு கொள்ளாமல் அதை கடந்து போய்விடுவார் என்று கூறி இருந்த நிலையில் இப்போது கமல்ஹாசன் செய்த செயல் பலருடைய பாராட்டை பெற்று வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications